சிறு குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டோரை விடுதலை செய்யவும்

முஸ்லீம் எம்.பி.க்கள் பிரதமர் பொலிஸ் தரப்பிடம் கோரிக்கை

0 758

கடந்த மாதம் இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களின் பின்பு சிறு, சிறு கார­ணங்­க­ளுக்­காக சந்­தே­கத்தின் பேரில் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் (PTA) கைது செய்­யப்­பட்டு நீண்ட நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­களை விடு­தலை செய்­யு­மாறு முஸ்லிம் அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமும், பொலிஸ் தரப்பிடமும் கோரிக்கை விடுத்­தனர்.

நேற்று முன்­தினம் பிர­த­ம­ருக்கும், பாது­காப்புப் பிரி­வி­ன­ருக்கும், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் அமைச்­சர்­க­ளுக்­கி­டை­யி­லான கலந்­து­ரை­யா­ட­லொன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அல­ரி­மா­ளி­கையில் இடம்­பெற்­றது. அந்தக் கலந்­து­ரை­யா­டலின் போதே பிரதி பொலிஸ் மா அதிபர் மர்வின் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

கலந்­து­ரை­யா­டலில் பங்­கு­கொண்ட முஸ்லிம் அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து நாட்டின் பல பகு­தி­களில் இடம்­பெற்­றுள்ள சிறு, சிறு கார­ணங்­க­ளுக்­கான அநா­வ­சிய கைதுகள் தொடர்பில் விளக்­க­ம­ளித்­தனர். ஹச­லக, மட்­டக்­க­ளப்பு மற்றும் மாத்­தளை பகு­தி­களில் இடம்­பெற்­றுள்ள நியா­ய­மற்ற கைது­களை உதா­ர­ணங்­க­ளாகக் கூறி­னார்கள். இவர்கள் அனை­வரும் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் கைது­செய்­யப்­பட்டு நீண்ட நாட்­க­ளாக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளது குற்­றங்கள் என்ன என்­பதை ஆராய்ந்து விடு­தலை செய்­ய­வேண்டும் எனத் தெரி­வித்­தார்கள்.

இவ்­வா­றான கைதுகள் தொடர்பில் கவ­னத்தில் கொள்­ளப்­படும் எனத் தெரி­வித்த பிரதி பொலிஸ் மா அதிபர் மர்வின் விக்­கி­ர­ம­சிங்க கைது­க­ளுடன் தொடர்­பு­பட்ட பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு அறி­வு­றுத்­தல்கள் வழங்­கு­வ­தாகத் தெரி­வித்தார்.

சந்­திப்பில் பொலிஸ் மா அதிபர் கலந்­து­கொண்­டி­ராததால் பொலிஸ் மா அதி­ப­ருடன் தனி­யான கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை மேற்­கொள்­வ­தெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

சந்­திப்பில் அமைச்­சர்­க­ளாக ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் என்போர் கலந்துகொண்டிருந்தனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.