மத்ரஸாக்களை ஒன்றிணைக்கும் அமைச்சரவை பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்படும்

0 527

 

நாட்டில் இயங்­கி­வரும் அரபுக் கல்­லூ­ரிகள் மற்றும் அரபு மத்­ர­ஸாக்­களை தனி­யான சட்­டத்­திற்குள் ஒருங்­கி­ணைப்­ப­தற்­கான அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இன்று அமைச்­ச­ர­வையில் அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினைச் சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து நாட்டில் தனிப்­பட்ட ரீதியில் இயங்­கி­வரும் அரபுக் கல்­லூ­ரிகள் மற்றும் அரபு மத்­ர­ஸாக்கள் தொடர்பில் தவ­றான கருத்­துகள் பரப்­பப்­பட்­டதால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவற்றை ஒரு கட்­ட­மைப்­புக்குள் அதற்­கான ஒரு சட்­டத்­திற்குள் ஒருங்­கி­ணைக்­கு­மாறு விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்சர் எம்எச்.ஏ. ஹலீ­முக்கு பணிப்­புரை விடுத்­தி­ருந்தார்.

இதற்­க­மைய முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம், உல­மாக்கள், புத்­தி­ஜீ­விகள் மற்றும் வக்பு சபைத் தலைவர் அடங்­கிய குழு­வொன்று சட்ட மூலத்­துக்­கான வரை­பொன்­றினைத் தயா­ரித்து கடந்த 6 ஆம் திகதி அமைச்சர் ஹலீம் மூலம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது. இந்த வரைபு வெளி­நா­டு­களில் தற்­போது செயற்­படும் சட்ட திட்­டங்­களும் கவ­னத்திற் கொள்­ளப்­பட்டு தயா­ரிக்­கப்­பட்­டது. இலங்­கையின் பிரி­வெனா கல்விச் சட்­டத்தில் அடங்­கி­யுள்ள கல்விக் கொள்­கையும் உள்­வாங்­கப்­பட்­டது.

அரபுக் கல்­லூ­ரி­க­ளையும் அரபு மத்­ர­ஸாக்­க­ளை­யும வக்பு சட்­டத்தின் கீழ் பதிவு செய்யும் வகையில் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு ஏற்­க­னவே வக்பு சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்த நிலை­யி­லேயே பிர­த­மரின் பணிப்­பின்­பேரில் புதிய தனி­யான சட்­ட­மொன்று இயற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தற்போது நாட்டில் 1669 குர்ஆன் மத்ரஸாக்களும் 317 அரபுக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.