அரபிக்கல்லூரிகள் கல்வி அமைச்சின் கீழ்

ஷரீஆ பல்கலைக்கழகத்துக்கு அனுமதியில்லை

0 545

அர­புக்­கல்­லூ­ரிகள் மற்றும் அரபு மத்­ர­ஸாக்­களை கல்­வி­ய­மைச்சின் கீழ் கொண்டு வந்து அவற்றின் கல்வி நட­வ­டிக்­கை­களைத் தொடர்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­துடன் கிழக்கின் ஷரீஆ பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­மாட்­டா­தெ­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

இந்தத் தீர்­மானம் முஸ்லிம் அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான நீண்­ட­நேர கலந்­து­ரை­யா­டலின் பின்பு அவர்­களின் ஆலோ­ச­னைக்­கேற்­பவே மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் அவர் கூறினார்.

நேற்று அலரி மாளி­கையில் இடம்­பெற்ற முஸ்லிம் அமைச்­சர்கள், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆசு மார­சிங்க, காவிந்த ஜய­வர்­தன ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;
நாட்டில் நிலைமை சுமுக நிலைக்குத் திரும்­பி­யுள்­ளது. நாட்­டி­லுள்ள அனைத்து பாட­சா­லை­களும் நாளை (இன்று) திறக்­கப்­படும். அதனால் மாண­வர்கள் அனை­வரும் பாட­சா­லைக்குச் சென்று கல்வி நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­மாறு வேண்­டிக்­கொள்­கிறேன்.

கிழக்கின் ஷரீஆ பல்­க­லைக்­க­ழகம் தொடர்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நடத்­திய விசா­ர­ணை­களின் பின்பு தயா­ரிக்­கப்­பட்ட அறிக்கை தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆசு மார­சிங்­க­வினால் நேற்று பிர­த­ம­ரிடம் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டது. அதன் பின்பு கிழக்கு ஷரீஆ பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில்

பிர­தமர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்

ஷரீஆ பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு நாம் அனு­மதி வழங்­க­மாட்டோம். அவ்­வா­றான அதி­காரம் எமக்­கில்லை. எம்மால் பட்டம் வழங்கும் நிறு­வ­ன­மா­கவே அனு­மதி வழங்க முடியும். இந்த நிறு­வனம் ஷரீஆ பல்­க­லைக்­க­ழ­க­மாக இயங்­க­மு­டி­யாது என்­பதை சட்ட ரீதி­யாக அறி­விக்க வேண்டும். இதற்­காக பல்­க­லைக்­க­ழக சட்­டத்தின் 9 (A) பிரிவில் திருத்­தங்­களைச் செய்ய வேண்டும். பங்­க­ளாதேஷ் சட்­டத்­துக்கு அமைய அவர்கள் இதனை தனியார் பல்­கலைக் கழ­க­மா­கவே அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளார்கள்.

சமயம், இனம் பற்றி கவ­னத்தில் கொள்­ளப்­ப­டாது வேறு ஏற்­றுக்­கொள்­ளப்­படும் ரீதியில் மாண­வர்கள் அனு­ம­திக்­கப்­பட வேண்­டு­மென பல்­க­லைக்­க­ழக சட்­டத்தில் 5 ஆம் பிரிவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதன் அடிப்­ப­டையில் இந்த விட­யமும் பல்­க­லைக்­க­ழக நிர்­வாக சபை மற்றும் அச்­ச­பையின் தகை­மைகள் அத்­தோடு அங்கு மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய மற்றும் தேவை­யான திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­படும். மேலும் இது தொடர்பில் பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து கிடைக்­கப்­பெறும் ஆலோ­ச­னை­களும் கவ­னத்திற் கொள்­ளப்­படும்.

அத்­தோடு அர­புக்­கல்­லூ­ரிகள் மற்றும் அரபு மத்­ர­ஸாக்­களின் கல்வி நட­வ­டிக்­கை­களை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரு­வ­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இவ் விட­யத்தில் சில வேலைத்­திட்­டங்­களில் கல்வி அமைச்சும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டி­யேற்­படும்.

குறிப்­பிட்ட ஷரீஆ பல்­க­லைக்­க­ழகம் மற்றும் அரபு மத்­ர­ஸாக்கள் தொடர்பில் முஸ்லிம் அமைச்­சர்­களும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தங்­க­ளது ஆலோ­ச­னை­களை முன்­வைத்­தார்கள். அது தொடர்பில் கலந்­து­ரை­யாடி நானும் அதற்கு அனு­மதி வழங்­கினேன்.

இன்று நாட்டின் பாது­காப்பு நிலைமை சுமுக நிலை­மைக்குத் திரும்­பி­யுள்­ளதால் பாட­சா­லைகள் நாளை (இன்று) திறக்­கப்­படும் அனைத்து மாண­வர்­களும் பாட­சா­லை­க­ளுக்குச் சென்று கல்வி நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­மாறு வேண்டிக் கொள்­கிறேன்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆசு மார­சிங்க

கிழக்கு ஷரீஆ பல்­க­லைக்­க­ழகம் தொடர்­பாக ஆராய்­வ­தற்கு நானும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரும் அதி­கா­ரி­களும் அங்கு சென்று கண்­கா­ணித்தோம். அதன் அடிப்­ப­டையில் அங்கு பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட தக­வல்­களின் அடிப்­ப­டையில் அறிக்­கை­யொன்­றினைத் தயா­ரித்தோம்.

இந்த கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கையை நாம் 2017 ஜூலை மாதம் 11 ஆம் திகதி முதல் ஆரம்­பித்தோம். உயர்­கல்வி அமைச்­சினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த கமிட்­டியின் அறிக்கை எமக்கு 2017 ஜூலை­யி­லேயே கிடைத்­தது. அந்த அறிக்­கையை அடிப்­ப­டை­யாகக் கொண்டே நாம் எமது பணி­களை ஆரம்­பித்தோம்.
பேரா­சி­ரியர் ரங்­தி­வெல தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த ஐவர் கொண்ட கமிட்­டியின் அறிக்­கை­யின்­படி விண்­ணப்­பத்தை ஸ்ரீ லங்கா ஹிரா பவுண்­டே­சனே சமர்ப்­பித்­தி­ருந்­தது. ஆனால் பின்பு அது மட்­டக்­க­ளப்பு தனியார் பல்­க­லைக்­க­ழகம் என மாற்­றப்­பட்­டி­ருந்­தது. இதன் அடிப்­ப­டை­யி­லேயே நிதி கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாவை அழைத்து அவரை பல தடவைகள் விசாரித்தோம். இந்த அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய பூரண அறிக்கையை ஜூலை மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகம் அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் தனியார் பல்கலைக்கழகமாக அமையவேண்டும் என நாம் கோருகிறோம். இது மட்டக்களப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக நிறுவப்பட வேண்டும் என நாம் பிரேரிக்கிறோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.