நியாயமற்ற கைதுகள் குறித்து முஸ்லிம் பிரதிநிதிகள் இன்று பிரதமருடன் பேச்சு

0 559

நாட்டின் பல பகு­தி­களில் இடம்­பெற்­றுள்ள நியா­ய­மற்ற கைதுகள், அபா­யா­வுக்­கான எதிர்ப்­புகள் மற்றும் இன­வா­தத்தைத் தூண்டும் வெறுப்புப் பேச்­சுக்கள் என்­ப­ன­வற்றை தடுத்து நிறுத்­தக்­கோரி இன்று முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் முஸ்லிம் அமைச்­சர்­களும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைச் சந்­திக்­க­வுள்­ளனர்.

இச்­சந்­திப்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் இரா­ணுவத் தள­பதி மற்றும் பாது­காப்புப் பிரிவின் உய­ர­தி­கா­ரி­களும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.
சிறு சிறு குற்­றங்­க­ளுக்­காக நியா­ய­மற்ற கைது­க­ளினால் முஸ்­லிம்கள் பல அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளாகி பீதியில் இருக்­கி­றார்கள். தர்­ம­சக்­கரம் பொறிக்­கப்­பட்ட ஆடை­யொன்­றினை அணிந்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் முஸ்­லிம்பெண் ஒருவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு மஹி­யங்­கனை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு அவர் எதிர்­வரும் 27 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்கப்­பட்­டுள்ளார்.

இவ்­வா­றான சம்­ப­வங்கள் அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்குச் சாத­க­மாக அமைந்­து­வி­டலாம் என்­பதை பிர­த­ம­ரி­டமும் பாது­காப்புப் பிரிவு உய­ர­தி­கா­ரி­க­ளி­டமும் விளக்­க­வுள்ளோம் என அஞ்சல், அஞ்சல் சேவை மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.
பிர­த­ம­ரு­ட­னான சந்திப்பின் பின்னர் விரைவில் ஜனாதிபதியையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.