வெள்­ள­வத்­தையில் காணி கப­ளீ­கரம் செய்­த­வரே சிங்­கள, முஸ்லிம் கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்த பிர­சாரம்

வில்­பத்து விவ­காரம் குறித்து சபையில் அமைச்சர் ரிஷாட் தெரி­விப்பு

0 625

விரட்­டப்­பட்ட மக்­களை மன்­னாரில் மீள குடி­யேற்­று­வதை வடக்கில் இருக்கும் பெளத்த மத­கு­ருக்­களோ இந்து மத­கு­ருக்­களோ கத்­தோ­லிக்க மத­கு­ருக்­களோ எதிர்க்­க­வில்லை. மாறாக வெள்­ள­வத்­தையில் வேறு ஒரு­வரின் காணியை பலாத்­கா­ர­மாக வைத்­துக்­கொண்­டி­ருக்­கின்ற மத­கு­ருவே சிங்­கள, முஸ்லிம் கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக பொய் பிர­சாரம் செய்­கின்றார் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இந்த வரு­டத்­துக்­கான வரவு செலவு திட்­டத்தின் பாது­காப்பு அமைச்சு மற்றும் மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்சு மீதான நிதி ஒதுக்­கீடு தொடர்­பான குழு­நிலை விவா­தத்தில் கலந்­து­கொண்டு, உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், அண்­மைக்­கா­ல­மாக மத­குரு ஒருவர்  வில்­பத்து அழிக்­கப்­ப­டு­வ­தாக பொய் பிர­சாரம் செய்து, மாண­வர்­களை இணைத்­துக்­கொண்டு 10இலட்சம் கையெ­ழுத்­துக்­களை பெற்­று­வ­ரு­கின்றார். அதற்கு சில ஊட­கங்­களும் அவ­ருக்கு ஆத­ர­வாக செயற்­பட்டு வரு­கின்­றன. ஆனால் குறித்த மத­குரு வெள்­ள­வத்த பிர­தே­சத்தில் வேறு ஒரு­வரின் காணியை ஆக்­கி­ர­மித்­துக்­கொண்டு, வில்­பத்து தொடர்­பாக பொய் பிர­சாரம் செய்து வரு­கின்றார்.

அத்­துடன் மன்னார் முசலி பிர­தே­சத்தில் 2013ஆம் ஆண்டு மீள்­கு­டி­யே­றிய அந்த மக்­க­ளுக்கு இந்த அர­சாங்­கத்தில் ஒரு அங்­குலம் நிலம்­கூட வழங்­க­வில்லை. எல்.எல்.ஆர்.சி. ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைக்­க­மைய மன்­னாரில் விரட்­டப்­பட்ட மக்­களை அவர்­களின் சொந்த இடங்­களில் குடி­ய­மர்த்­து­வ­தாக கடந்த அர­சாங்கம் ஜெனி­வாவில் வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தது. அதன் பிர­காரம் பசில் ராஜபக் ஷ தலை­மையில் அமைக்­கப்­பட்ட ஜனா­தி­பதி செய­ல­ணியின் தீர்­மா­னத்­துக்­க­மைய அந்த மக்கள் அவர்­களின் சொந்த இடங்­களில் குடி­ய­மர்த்­தப்­பட்­டார்கள்.

அத்­துடன் அந்த மக்கள் மீண்டும் குடி­யேற்­றப்­ப­டும்­போது அந்த மக்­களின் தேர்தல் இடாப்­பு­களில் அவர்­களின் பெயர்கள் இரு­கின்­றதா, அவர்கள் விரட்­டப்­பட்­ட­வர்­களா, அவர்­க­ளுக்கு அங்கு சொந்த காணி இருந்­ததா என்­றெல்லாம் தேடிப்­பார்­க்கப்­பட்­டது. மாறாக ஒரு குடும்­பம்­கூட வெளி­மா­வட்­டத்தில் இருந்து கொண்­டு­வந்து அங்கு குடி­யேற்­றப்­ப­ட­வில்லை.

விளாத்­திக்­குளம் என்ற பிர­தே­சத்தை மாத்­திரம் குறிப்­பிட்டு கணக்­காய்­வாளர் நாயகம் பாரா­ளு­மன்­றத்­துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்­பித்­துள்ளார். அந்த அறிக்கை ஒட்­டு­மொத்­த­மாக துவேச அடிப்­ப­டை­யிலே வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. அந்த அறிக்கை தொடர்பில் வன பாது­காப்பு திணைக்­களம் பதி­ல­ளிக்கும் என்று நினைக்­கின்றேன். அதனை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டே குறித்த மத­குரு பொய் பிர­சாரம் செய்­து­வ­ரு­கின்றார்.

அத்­துடன் விரட்­டப்­பட்ட மக்­களை மீள குடி­யேற்­று­வதை வடக்கில் இருக்கும் பெளத்த மத­கு­ருக்­களோ இந்து மதக்­கு­ருக்­களோ கத்­தோ­லிக்க மதக்­கு­ருக்­களோ எதிர்க்­க­வில்லை. மாறாக வெள்­ள­வத்­தையில் வேறு ஒரு­வரின் காணியை பலாத்­கா­ர­மாக வைத்­துக்­கொண்­டி­ருக்­கின்ற மத­குரு, மீண்டும் நாட்டில் சிங்­கள –முஸ்லிம் கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக சதி­யை­மேற்­கொண்­டு­வ­ரு­கின்றார்.

எனவே குறிப்பிட்ட மதகுரு மேற்கொண்டுவரும் பொய் பிரசாரம் தொடர்பாக பொலிஸ்மா அதிபரோ வனவள அதிகாரசபையோ வாய்மூடிக்கொண்டிருந்தால் இந்த நாடு மீண்டுமொரு அழிவை சந்திக்கநேரிடும். அதனால் இவ்வாறான அழிவு ஏற்படாமல் தடுத்து நிறுத்த மதகுருவின் பொய் பிரசாரங்களை தடுத்து நிறுத்த பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.