அக்­கு­றணை வெள்ளப் பெருக்கை தடுக்கும் திட்­டத்­திற்கு செய­லணி

0 636

அக்­கு­ற­ணையில் அடிக்­கடி ஏற்­படும் வெள்­ளப்­பெ­ருக்கை தடுக்கும் செயற்­தி­ட்­டத்­துக்­கான விசேட செய­லணி அமைப்­ப­தற்­கு­ரிய அமைச்­ச­ரவைப் பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், பிர­தே­சத்­தி­லுள்ள அரச நிறு­வ­னங்கள் மற்றும் சிவில் அமைப்­புக்கள் ஒருங்­கி­ணைந்த செய­லணி அமைப்­பது தொடர்­பா­கவும் இச்­செ­ய­ல­ணி­யி­னூ­டாக முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­பட வேண்­டிய திட்­டங்­களை அமுல் நடத்தி மிகக் குறு­கிய காலத்­திற்குள் அதனை அமுல் நடத்­து­வ­தற்­கான முன்­னெ­டுப்­புக்கள் தொடர்­பா­கவும் ஆராயும் உயர்­மட்டக் கலந்­து­ரை­யாடல் நேற்­றைய தினம் பாரா­ளு­மன்ற குழு அறையில் நடை­பெற்­றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், நகர திட்­ட­மிடல், நீர்­வ­ழங்கல் மற்றும் உயர்­கல்வி அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவ­கார அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீம் ஆகி­யோரின் தலை­மையில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலில் வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை, நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை, தேசிய கட்­டிட ஆராய்ச்சி நிலையம், அனர்த்த முகா­மைத்­துவ நிலையம், உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சு, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவ­கார அமைச்சு, நகர திட்­ட­மிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்­கல்வி அமைச்சு, மகா­வெலி அதி­கார சபை, நில அளவை திணைக்­களம், இலங்கை காணி மீட்பு மற்றும் அபி­வி­ருத்தி கூட்­டுத்­தா­பனம், நீர்ப்­பா­சன திணைக்­களம், அக்­கு­றணை பிர­தேச சபை, அக்­கு­றனை ஜம்­மி­யதுல் உலமா, அஸ்னா பள்­ளி­வாசல் நிர்­வாக சபை மற்றும் அக்­கு­றனை வர்த்தக சங்கம் என்­ப­வற்றின் பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டனர்.

பிங்கா ஓயாவில் நிரம்­பி­யுள்ள மண் உரிய காலத்தில் அகற்­றப்­ப­டாமை, தடுப்புச் சுவர்கள் மற்றும் பாலங்கள் முத­லா­னவை வெள்ளம் வடிந்து போவ­தற்கு வச­தி­யான முறையில் அமைக்­கப்­ப­டாமை, சட்­ட­வி­ரோ­த­மாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள கட்­ட­டங்கள், பாலங்கள் மற்றும் மதில்கள் அமைப்பு முத­லான கார­ணங்­க­ளினால் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­ப­டு­வதா­கவும் மற்றும் அதன் மூலம் கூடு­த­லான பாதிப்பு ஏற்­ப­டு­வ­தா­கவும் காணி மற்றும் மறு­சீ­ர­மைப்புக் கூட்­டுத்­தா­பனம் பேரா­தெ­னிய பல்­க­லைக்­க­ழ­கத்­துடன் இணைந்து நடத்­திய ஆய்வின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

மேலும், சட்­ட­வி­ரோதக் கட்­டி­டங்கள் உரிய முறையில் இனங்­கா­ணப்­பட்டு அவற்றை அகற்றும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யுடன் பிர­தே­சத்­தி­லுள்ள சிவில் அமைப்­பு­க­ளுடன் இணைந்து சம்­பந்­தப்­பட்ட உரி­மை­யா­ளர்­க­ளுடன் பேசி தமா­கவே அகற்ற நட­வ­டிக்கை எடுப்­ப­துடன், தவறும் பட்­சத்தில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யூ­டாக நட­வ­டிக்கை எடுக்­கவும் ஆலோ­ச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டன.

தற்­போது அமைக்­கப்­பட்­டுள்ள பாலங்­களை அகற்றி வெள்ளம் வடி­யக்­கூ­டிய வகையில் பாலங்களை திருத்­தி­ய­மைப்­ப­தற்கு வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை இணக்கம் தெரி­வித்­த­துடன், நடை­மு­றையில் இவற்றை செயற்­ப­டுத்­தப்­ப­டும்­போது ஏற்­படும் சிக்­கல்­க­ளுக்குத் தீர்­வு­காண வச­தி­யாக பிர­தேச சபை மற்றும் பிர­தேச செய­ல­கத்தின் உத­வி­யுடன் அவற்றைத் தீர்க்­கவும் முடியும் எனவும் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

இன்னும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­ப­டு­வ­தற்கு ஏது­வாக இருந்த செயற்­பா­டுகள் மேலும் தொட­ராமல் இருப்­ப­தற்கு பிர­தேச செய­ல­கமும், பிர­தேச சபையும் இணைந்த ஒரு செயற்­பாட்டை முன்­னெடுக்­க வேண்­டி­யதன் அவ­சி­யமும் இங்கு வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இந்த வெள்­ளப்­பெ­ருக்கை தடுக்கும் செயற்­பா­டு­களை முன்னெ­டுக்க சில அரச நிறுவனங்களுக்கி டையிலான பரஸ்பர தொடர்புகள் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டன.

இந்த செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை (08) சம்பந்தப்பட்ட சகல அரச நிறுவனங்கள் பிரதேசத்திலுள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதி உள்ளடக்கிய கூட்டத்தை அக்குறணை பிரதேச செயலகத்தில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.