மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம்: அர்ஜுன் அலோசியஸின் தந்தை உட்பட மேலும் ஐந்து பேர் கைது

மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநரும் உள்ளடக்கம்

0 676

மத்­திய வங்­கியின் பிணை­முறி மோசடி விவ­காரம்  தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணை­களில் நேற்று மேலும் ஐந்து சந்­தேக நபர்கள் சி.ஐ.டி.யினரால் கைது செய்­யப்­பட்­டனர். ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்டு பிணை­யி­லுள்ள பேப்­பர்ச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் முன்னாள் தலைவர் அர்ஜுன் அலோ­சி­யஸின் தந்­தையும் அந்­நி­று­வ­னத்தின்  பணிப்­பாளர் சபை தலை­வ­ரு­மான ஜெப்ரி ஜோஸப் அலோ­சியஸ், பணிப்­பாளர் சபை உறுப்­பி­னர்­க­ளான புஷ்­ப­மித்ர குண­வர்­தன,  சித்ர ரஞ்சன் ஹுலு­கொல்ல, முத்­து­ராஜா சுரேந்ரன் ஆகி­யோரும் மத்­திய வங்­கியின் முன்னாள் பிரதி ஆளு­ந­ரான  பத்­தி­னிகே சம­ர­சி­ரி­யுமே இவ்­வாறு நேற்று சி.ஐ.டி.யினரால் கைது செய்­யப்­பட்­டனர். மற்­றொரு சந்­தேக நப­ரான ஹஜான் கால்­லகே புஞ்­சி­ஹேவா என்­ப­வரை சி.ஐ.டி. நேற்று சந்­தேக நப­ராக பெய­ரிட்டு கைது செய்யச் சென்­ற­போதும், அவர் நாட்டை விட்டு  வெளி­யே­றி­யுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. இதனால் அவரை நேற்று கைது­செய்ய முடி­யாமல் போயுள்­ளது.

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவ­கா­ரத்தில் சதி செய்­தமை, உதவி ஒத்­தா­சை­களை புரிந்­தமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் இந்த சந்­தேக நபர்கள் பதிவு செய்­யப்­பட்ட பங்­குகள் மற்றும் பிணை­யங்கள் கட்­டளைச் சட்­டத்தின் 56 ஆம் அத்­தி­யா­யத்­துக்­க­மைய கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் கைது செய்­யப்­பட்ட ஐவரும்  நேற்று மாலை கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். இதன்­போது அங்கு சந்­தேக நபர்கள் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் பிணை கோரினர். சி.ஐ.டி.யினரும், சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் ஹரிப்­பி­ரியா தல­மை­யி­லான குழு­வி­னரும் சந்­தேக நபர்­க­ளுக்கு பிணை வழங்க எந்த ஆட்­சே­ப­னையோ, மறுப்­பையோ வெளி­யி­ட­வில்லை. வழ­மை­யாக  சந்­தேக நபர்­களை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு தமது விசா­ரணை அறிக்கை ஊடாகக் கோரும் சி.ஐ.டி. நேற்­றைய அறிக்­கையில் அத்­த­கைய கோரிக்­கை­களை விடுக்­காது, சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுகள் பிணை வழங்க முடி­யு­மான குற்­றச்­சாட்­டுகள் என குறிப்­பிட்­டி­ருந்­தனர்.

எனினும், பிணை சட்­டத்தின்  14(1)ஆ பிர­காரம், பெருந்­தொகை அரச பணம் மோசடி செய்­யப்­பட்ட விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­பட்ட  சந்­தேக நபர்­க­ளுக்கு பிணை வழங்­கப்­ப­டு­மானால் அது மக்­க­ளி­டையே குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­மென்ற கார­ணத்தை மையப்­ப­டுத்தி நீதிவான் லங்கா அஜ­ய­ரத்ன சந்­தேக நபர்­களை எதிர்­வரும் ஏபரல் 5 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவ­கா­ரத்தில் முதல் சந்­தேக நப­ராகப் பெய­ரி­டப்பட்­டுள்ள மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்­திரன்   சிங்­கப்­பூ­ருக்கு தப்பிச் சென்­றுள்ள நிலையில் அவ­ருக்கு எதி­ராக  பிடி­யா­ணையும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இரண்­டா­வது சந்­தேக நப­ராக பேப்­பர்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் முன்னாள் தலைவர் அர்ஜுன் அலோ­சி­யஸும்,  மூன்­றா­வது சந்­தேக நப­ராக பேப்­பர்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னமும்,  4 ஆவது  சந்­தேக நப­ராக அந்­நி­று­வ­னத்தின் பிர­தான நிறை­வேற்று அதி­கா­ரி­யான கசுன் பலி­சே­னவும் பெய­ரி­டப்­பட்டு அதில் அர்ஜுன் அலோ­சி­யஸும், கசுன் பலி­சே­னவும் கைது செய்­யப்­பட்டு நீண்ட நாட்கள் விளக்­க­ம­றி­ய­லி­லி­ருந்து வந்த நிலையில் அண்­மையில் பிணையில் விடு­விக்­கப்­பட்­டனர்.

இந்­நி­லை­யி­லேயே இந்த விவ­கா­ரத்தின் ஐந்­தா­வது சந்­தேக நப­ராக அர்­ஜுன் அலோ­சி­யஸின் தந்தை ஜெப்ரி ஜோசப் அலோ­சியஸ் கைது செய்­யப்­பட்டார். நேற்று முற்­பகல் சி.ஐ.டி.க்கு அழைக்­கப்­பட்டு அவர் கைது செய்­யப்­பட்ட நிலையில் அவ­ருக்கு எதி­ராகப்  பதிவு செய்­யப்­பட்ட பங்­குகள் மற்றும் பிணை­யங்கள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் 8 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

அவரைக் கைது­செய்ய முன்­ப­தா­கவே 6,7,8 ஆம் சந்­தேக நபர்­க­ளான பேப்­பர்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் பணிப்­பாளர் சபை உறுப்­பி­னர்­க­ளாக இருந்த  புஷ்­ப­மித்ர குண­வர்­தன, சித்ர ரஞ்சன் ஹுலு­கொல்ல,  முத்­து­ராஜா சுரேந்ரன் ஆகி­யோரின் வீடு­க­ளுக்கு சி.ஐ.டி.யினர் நேற்று அதி­காலை வேளை­யி­லேயே  சென்று அவர்களை கைது செய்­தி­ருந்­தனர். 9 ஆவது சந்­தேக நப­ரான புஞ்­சி­ஹேவா வெளி­நாடு சென்­றுள்ள நிலையில் 10 ஆவது சந்­தேக நப­ரான மத்­திய வங்கி முன்னாள் பிரதி ஆளுநர் பத்­தி­னிகே சம­ர­சி­றி­யையும் அதி­காலை வேளையில் அவ­ரது வீட்டில் வைத்து சி.ஐ.டி.யினர் கைது செய்­தி­ருந்­தனர்.

குற்றப் புல­னாய்வுப் பிரிவின்  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரத்ன மற்றும் பணிப்­பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­க­ரவின்  மேற்­பார்­வையில் பிரதிப் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிய­சேன அம்­பா­வல தலை­மையில்  நிதி­சார்ந்த குற்­றங்கள் தொடர்­பி­லான விசா­ரணை அறை பொறுப்­ப­தி­காரி பெண் பொலிஸ் பரி­சோ­தகர் தர்­ம­லதா சஞ்­ஜீ­வனி,  பொலிஸ் பரி­சோ­தகர் தினேஷ் சில்வா,  பொலிஸ் பரி­சோ­தகர் திலக் பண்­டார, உப பொலிஸ் பரி­சோ­தகர் விமல் ஜய­வீர உள்­ளிட்ட அதி­கா­ரிகள் கொண்ட குழு இந்­ந­ட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளிடம் நீண்ட வாக்­கு­மூ­லங்கள் பதிவு செய்­யப்­பட்ட பின்னர் மாலை 4.00 மணி­ய­ளவில் கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் அவர்கள் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.

இதன்­போது 5 ஆவது சந்­தேக நப­ரான ஜெப்ரி ஜோசப் அலோ­சியஸ் சார்பில்  சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஜீவந்த ஜய­தி­ல­கவும், 6 ஆவது சந்­தேக நப­ரான புஷ்­ப­மித்ர குண­வர்­தன  சார்பில் சட்­டத்­த­ரணி அசேல ரண­வகவும், 7 ஆவது சந்­தேக நபர்  சித்ர ரஞ்சன் ஹுலு­கொல்ல சார்பில்  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி உபுல் ஜய­சூ­ரி­யவும், 8ஆவது சந்­தேக நப­ரான முத்­து­ராஜா சுரேந்ரன் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சஞ்­ஜய கம­கேவும் ஆஜ­ரா­கினர். 10 ஆவது சந்­தேக நப­ரான பத்­தி­னிகே சம­ர­சிரி சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி  நளின் லத்­து­வ­ஹெட்டி ஆஜ­ரானார்.

இந்­நி­லையில் மேல­திக விசா­ரணை அறிக்­கையை சமர்ப்­பித்த சி.ஐ.டி. சார்பில், சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின்  சட்­ட­வாதி சத்­துரி விஜே­சூ­ரி­ய­வுடன் ஆஜ­ரான சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­தர கருத்­துக்­களை முன்­வைத்தார். சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராகப் பதிவு செய்­யப்­பட்ட பங்­குகள் மற்றும் பிணை­யங்கள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ள­தாகக் கூறிய அவர், இதற்­கான சாட்­சி­யங்­களின் தொகுப்­பையும், மன்றில் சமர்ப்­பித்த மேல­திக விசா­ரணை அறிக்­கையில் இணைத்­துள்­ள­தாகக் கூறினார். அத்­துடன் பிணை­முறி தொடர்­பி­லான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யி­லுள்ள சாட்­சி­யங்­களும் சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ரான சாட்­சி­யங்­க­ளாக சி.ஐ.டி.யினரால் அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கூறினார்.

இந்­நி­லையில் சந்­தேக நபர்கள் சார்பில்  ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் தனித்­த­னி­யாக வாதங்­களை முன்­வைத்­தனர். அவர்கள், சந்­தேக நபர்கள் விசா­ர­ணைக்கு அளித்த ஒத்­து­ழைப்பு மற்றும்  நாட்டை விட்டுத் தப்பிச் செல்­லாமை உள்­ளிட்ட கார­ணி­களை மேற்கோள் காட்டி  பிணை கோரினர். 10 ஆவது சந்­தேக நபரின் சட்­டத்­த­ரணி,  தனது சேவை பெறுநர் அரச ஊழி­ய­ராக இருந்­தவர் என்­ப­தையும், ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள, ‘சதியை  மத்­திய வங்­கியின் அப்­போ­தைய ஆளுநர்  அர்ஜுன் மகேந்­திரன் மட்­டுமே அறிந்­தி­ருந்தார்’ எனும் விட­யத்­தையும் சுட்­டிக்­காட்டி பிணை கோரினார்.

இதே­வேளை, 6 ஆவது சந்­தேக நபரின் சட்­டத்­த­ர­ணியின் வாதத்­தின்­போது, சந்­தேக நபர்­களை விளக்­க­ம­றி­யலில் வைக்க சி.ஐ.டி. தனது அறிக்­கையில் கோர­வில்லை எனவும் சட்­டமா அதி­பரும் அத்­த­கைய எந்தக் கோரிக்­கை­யையும் வாய்­மொழி மூலம் கூட விடு­விக்­க­வில்லை எனவும் சுட்­டிக்­காட்டி, பிணை வழங்­கக முடி­யு­மான குற்­றச்­சாட்­டுகள் உள்­ளதால் பிணை வழங்­கு­மாறு கோரினார்.

மீளவும் சட்­டமா அதிபர் தரப்­பி­ன­ரிடம் மன்­றுக்கு ஏதும் கூற வேண்­டுமா என கேட்ட நீதிவான், வேறு ஒன்றும் இல்­லை­யென சட்­டமா அதிபர் தரப்பில்  பதி­ல­ளிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து தனது உத்­த­ரவை அறி­வித்தார்.

பதிவு செய்­யப்­பட்ட பங்­குகள் மற்றும் பிணை­யங்கள் சட்­டத்தின் 56 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் குற்­றச்­சாட்­டுகள் உள்­ளன. இது நீதி­வா­னுக்கு  பிணை அளிக்க முடி­யு­மா­னதே. சந்­தேக நபர்கள் விசா­ர­ணைக்­க­ளித்த ஒத்­து­ழைப்பு, அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்லாமை உட்பட்ட விடயங்களை முன்வைத்து பிணை கோரப்பட்டுள்ளது.

எனினும்,  குற்றத்தின் பாரதூரம் தொடர்பில் நான் ஆராய்கின்றேன். இது  பெருந்தொகை அரச பணம் மோசடியுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுகளாகும். இந்நிலையில் சந்தேக நபர்களுக்கு பிணையளித்தால் அது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். பிணை சட்டத்தின் 14(1)ஆ பிரிவின் கீழ் இவர்களுக்கு பிணை வழங்க மறுக்கின்றேன் என அறிவித்தார். இந்த அறிவிப்பின் போதே அரசின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா நீதிமன்றில் பிணை தொடர்பில் கருத்துக் கூற முற்பட்டபோதும், “நான்  உத்தரவு விடுக்கின்றேன்…ஒன்றும் அவசியம் இல்லை” என நீதிவான் பதிலளித்து அதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை.

இதனையடுத்து சந்தேக நபர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்  உத்தரவிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.