மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் எகிப்துக்கு ஐ.நா. எச்சரிக்கை

0 505

இம்­மாத ஆரம்­பத்தில் எகிப்தில் 15 பேருக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டமை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் பிரிவு கடந்த வெள்­ளிக்­கி­ழமை கவலை வெளி­யிட்­டது.

சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற குற்­றச்­சாட்­டுக்கள் சம்­பந்­த­மாக எகிப்­திய அதி­கா­ரிகள் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மெனத் தெரி­வித்த ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் அலு­வ­ல­கத்தின் பேச்­சாளர் ரோபேட் கொல்­விலி, அனைத்து மரண தண்­ட­னை­க­ளையும் உட­ன­டி­யாக நிறுத்­து­மாறு நாம் எகிப்­திய அதி­கா­ரி­களைக் கோரு­கின்றோம் எனவும் தெரி­வித்­துள்ளார்.

எகிப்­திய சட்­டமா அதி­ப­ரான ஹிசாம் பரகத் கொல்­லப்­பட்­ட­மை­யுடன் தொடர்­பு­பட்ட ஒன்­பது பேருக்கு கடந்த பெப்­ர­வரி 20 ஆம் திகதி மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

ஒரு வாரம் முன்­ன­தாக பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரைக் கொன்ற குற்­றச்­சாட்டில் மேலும் மூவ­ருக்கு கடந்த பெப்­ர­வரி 7 ஆம் திகதி மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது. மேலும் மூவ­ருக்கு நீதி­ப­தி­யொ­ரு­வரின் மகனைக் கொன்­ற­மைக்­காக தூக்குத் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

அனை­வரும் தாம் குற்­றத்தை ஒப்­புக்­கொள்ளச் செய்­வ­தற்­காக சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­ட­தாக நீதி­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்­தனர்.

வழக்கு விசா­ரணை­களின் போது மேற்­கொள்­ளப்­படும் முரண்­பாட்டு செயற்­பா­டுகள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபை மிகக் கவலை கொண்­டுள்­ள­தா­கவும் சித்­தி­ர­வதை தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்­களை உரிய முறையில் எகிப்து விசா­ரிக்க வேண்டும் எனவும் தாம் கோரு­வ­தா­கவும் கொல்­விலி தெரி­வித்தார்.

சில நாடுகள் தொடர்ந்தும் மரண தண்­ட­னையை நிறைவேற்றி வருகின்றன. மரண தண்டனைக்கான விசாரணை என்பது அதியுச்ச நடுநிலைத் தராதரத்தைக் கொண்டவையாக இருக்க வேண்டியது அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.