தேசிய அரசாங்கத்தை முற்றாக எதிர்க்கிறோம்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ

0 518

அமைச்­ச­ர­வையை அதி­க­ரித்­துக்­கொள்ளக் கையாளும் முயற்­சியே தேசிய  அர­சாங்­க­மாகும். அதனை நாம் ஒரு­போதும் அங்­கீ­க­ரிக்க மாட்டோம். தேசிய அர­சாங்க கொள்­கையை நாம் முற்­றாக எதிர்க்­கி­றோ­மென எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். அர­சி­ய­ல­மைப்பு பேரவை குறித்த விவா­தத்தில் பல உண்­மைகள் நாம் வெளி­யி­டுவோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர்  தேசிய அர­சாங்கம் குறித்தும் அர­சி­ய­ல­மைப்பு பேரவை குறித்தும் ஊட­கங்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்குப் பதில் அளிக்­கையில் அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், தேசிய அர­சாங்கம் என்ற கொள்­கையை நாம் ஏற்­று­கொள்­ள­வில்லை. கடந்த நான்கு ஆண்­டு­களில் தேசிய அர­சாங்கம் என்ற முயற்சி தோல்­வியில் முடி­வ­டைந்­துள்­ளது.

இப்­போது மீண்டும் தேசிய அர­சாங்கம் என்ற கதை உரு­வாக அவர்­களின் சுய­நல சிந்­த­னையே கார­ண­மாகும். அவர்­க­ளுக்கு அமைச்­சுப்­ப­த­வி­களை அதி­க­ரித்­துக்­கொள்ள வேண்­டு­மென்ற நோக்கம் மட்­டுமே உள்­ளது. அதற்­கா­கவே அவர்கள் மீண்டும் தேசிய அர­சாங்கம் அமைக்கும் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். எவ்­வா­றி­ருப்­பினும் நாம் தேசிய அர­சாங்கம் என்ற  கொள்­கையை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. இதனை நாம் முற்­றாக எதிர்க்­கின்றோம். அதேபோல் அர­சி­ய­ல­மைப்பு பேரவை குறித்து எம்­மத்­தியில் ஆரோக்­கி­ய­மான கருத்­துக்கள் இல்லை.

எவ்­வாறு இருப்­பினும் அடுத்த பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் அர­சி­ய­ல­மைப்பு பேரவை குறித்த விவாதம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அந்த விவா­தத்தில் நாம் எமது தரப்புக் கருத்­துக்­களை முன்­வைப்போம். அதன்­போது பல உண்­மை­களை நாம் வெளிப்­ப­டுத்­துவோம்.

19 ஆவது திருத்­தத்தை நான் ஆதரிக்கவில்லை. எனினும் அப்போதிருந்த சூழலில் எமது தரப்பினர் அதனை ஆதரித்தனர். எனினும் இப்போது அதனை எதிர்க்கின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.