நான் முஸ்லிம் இனத்துக்கான அமைச்சரல்ல: ரிஷாத் பதியுதீன்

த.தே.கூட்டமைப்பினர் இனவாதம் பேசக் கூடாது என்றும் தெரிவிப்பு

0 572

‘நான் முஸ்லிம் இனத்­துக்­கான அமைச்­ச­ரல்ல. தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இன­வாதம் பேசி தமிழ், முஸ்லிம் உறவில் விரி­சலை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது. மீள்­கு­டி­யேற்ற அமைச்சில் ஒரு பகு­தியே எனக்குத் தரப்­பட்­டுள்­ளது. நீண்­ட­கா­ல­மாக இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றும் பொறுப்பே என்­னிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. அத­னாலே நீண்­ட­கா­ல­மாக இடம்­பெ­யர்ந்­துள்ள முஸ்லிம் மற்றும் சிங்­கள மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு முத­லிடம் அளிக்­கிறேன்’ என கைத்­தொழில், வர்த்­தகம், கூட்­டு­றவு அபி­வி­ருத்தி மற்றும் நீண்ட கால­மாக இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றல் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

முல்­லைத்­தீவு மாவட்ட அபி­வி­ருத்­திக்­குழுக் கூட்­டத்­தின்­போது தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் மற்றும் எஸ். ஸ்ரீஸ்­கந்­த­ராசா ஆகியோர் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் மீது சுமத்­திய குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் வின­வி­ய­போதே அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில்; மீள்­கு­டி­யேற்றம் மற்றும் புனர்­வாழ்வு அமைச்சு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமே இருக்­கி­றது. அதனால் தமிழ் மக்­களின் புனர்­வாழ்வு மற்றும் மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் அவர்கள் பிர­த­ம­ரி­டமே கோரிக்கை விடுக்­க­வேண்டும். என்­னிடம் மீள்­கு­டி­யேற்றம் மற்றும் புனர்­வாழ்வு அமைச்சு வழங்­கப்­ப­டக்­கூ­டாது என பிர­த­ம­ரிடம் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கேட்­டுக்­கொண்­ட­தற்­கி­ணங்­கவே அவ்­வ­மைச்சு என்­னிடம் வழங்­கப்­ப­டாது பிர­த­மரின் கீழ் இருக்­கி­றது.

புனர்­வாழ்வு மற்றும் மீள் குடி­யேற்ற அமைச்சு முழு­மை­யாக எனக்கு வழங்­கப்­பட்டால் தமிழ் மக்­களின் புனர்­வாழ்வு மற்றும் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பான செயற்­திட்­டங்­களை என்னால் முன்­னெ­டுக்க முடியும். இதை விடுத்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என்னை இன­வா­தி­யாக சித்­தி­ரிப்­பது தவ­றாகும். இதனால் தமிழ், முஸ்லிம் உற­வு­க­ளுக்­கி­டையே விரி­சல்கள் ஏற்­ப­டலாம்.

2009 இல் யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்பு முல்­லைத்­தீ­வி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்த 1800 குடும்­பங்­க­ளுக்­கென 900 ஏக்கர் காணி ஒதுக்­கப்­பட்­டது. என்­றாலும் அக்­கா­ணியில் அவர்கள் மீள் குடி­யே­று­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. இது­வரை காலம் அது இழுத்­த­டிக்­கப்­ப­டு­கி­றது. அதனால் மீள் குடி­யே­று­வ­தற்கு வந்­தி­ருந்த அநேக குடும்­பங்கள் திரும்­பிச்­சென்று விட்­டன. அங்கு எஞ்­சி­யி­ருக்கும் 700 குடும்­பங்­களில் 500 குடும்­பங்­க­ளுக்­கா­வது அர­சாங்கம் தலா 20 பேர்ச்சஸ் வீத­மா­வது பெற்றுக் கொடுக்­க­வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுத்­துள்ளேன்.

நீண்­ட­கா­ல­மாக இடம்­பெ­யர்ந்­துள்ள முஸ்லிம் மக்­களை மீள் குடி­யேற்­று­வது எனது கட­மை­யாகும். இந்த அதி­காரம் அமைச்சு மூலம் எனக்குத் தரப்­பட்­டுள்­ளது என்­பதை என்­மீது குற்றம் சுமத்­து­ப­வர்கள் புரிந்துக் கொள்­ள­வேண்டும். இதை­வி­டுத்து என்­மீது இன­வாத சேறு பூச முனை­வது அறி­யாத்­த­ன­மாகும்.

மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் மீள் குடி­யேற்றம் புனர்­வாழ்வு அமைச்­ச­ராக பதவி வகித்த காலத்தில் தமிழ் மக்­க­ளையே மீள் குடி­யேற்­றி­யுள்ளேன் என்­பதை எவ­ராலும் மறுக்க முடி­யாது. நாட்டின் அபி­வி­ருத்­திக்கும், நிலை­யான ஆட்­சிக்கும் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம், தேசிய ஒரு­மைப்­பாடு இருக்­க­வேண்டும். இல்­லையேல் அந்த இலக்­கினை எம்மால் எட்ட முடி­யாது என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.