பங்களாதேஷ் – சவூதி அரேபியாவுக்கு இடையில் பாதுகாப்பு உடன்படிக்கை

0 502

பங்­க­ளாதேஷ் மற்றும் சவூதி அரே­பியா ஆகி­ய­வற்­றிற்கு இடை­யே­யான இரா­ணுவ ஒத்­து­ழைப்­பினை மேலும் மேம்­ப­டுத்தும் வகையில் இரு நாடு­களும் எதிர்­வரும் பெப்­ர­வரி 14 ஆம் திகதி பாது­காப்பு உடன்­ப­டிக்­கை­யொன்றில் கைச்­சாத்­தி­ட­வுள்­ள­தாக இரா­ணுவ வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

இந்த உடன்­ப­டிக்­கையின் கீழ் யுத்­தத்­தினால் சீர்­கு­லைந்­துள்ள சவூதி – யெமன் எல்­லையில் புதைக்­கப்­பட்­டுள்ள மிதி வெடி­களைச் செய­லி­ழக்கச் செய்யும் பணி­களில் பங்­க­ளாதேஷ் ஈடு­படும் என துருக்­கியின் அன­டொலு செய்தி முக­வ­ர­கத்­திற்கு பங்­க­ளாதேஷ் இரா­ணுவப் பேச்­சாளர் லெப்­டினென்ட் கேர்ணல் மொஹமட் றஷீதல் ஹஸன் தெரி­வித்தார்.

றியாதில் புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்ள பங்­க­ளாதேஷ் தூத­ர­கத்­திற்கு விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருந்த இரா­ணுவத் தள­பதி ஜெனரல் அஸீஸ் அஹமட் இதனை அறி­வித்­த­தாக ஹஸன் உறு­திப்­ப­டுத்­தினார்.

பயங்­க­ர­வா­தத்தை முறி­ய­டிப்­ப­தற்­காக சவூ­தி­யினைத் தள­மாகக் கொண்டு 34 நாடு­களின் இஸ்­லா­மிய இரா­ணுவக் கூட்­ட­ணியின் உறுப்பு நாடு­களுள் ஒன்றான பங்களாதேஷை சேர்ந்த 2 மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரிகின்றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.