ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பாப்பரசர் விஜயம் அபுதாபியில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்தார்

0 487

வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு ஐக்­கிய அரபு அமீ­ர­கத்­திற்கு சென்ற  பாப்­ப­ரசர் பிரான்ஸிஸ் கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று அல்-­–அஸ்ஹர் இமாம் ஷெய்க் அஹ்மெட் அல்-­தைய்யெப் மற்றும் ஐக்­கிய அரபு அமீ­ரகத் தலை­வர்­க­ளையும் சந்­தித்தார்.

மத­நல்­லி­ணக்கம் மற்றும் மத சகிப்­புத்­தன்மை என்ற செய்­தி­யுடன் தனது பய­ணத்தை தொடங்­கிய பாப்­ப­ரசர் பிரான்ஸிஸ், அபு­தா­பி­யி­லுள்ள ஜனா­தி­பதி மாளி­கை­யி­லி­ருந்து தனது பய­ணத்தை ஆரம்­பித்து சமா­தா­னத்­திற்­காகப் பாடு­பட வேண்டும் என்ற உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­ட­லுடன் அன்­றைய தினத்தை முடி­வு­றுத்­தினார்.

அபு­தா­பி­யி­லுள்ள சமய மற்றும் அர­சியல் முக்­கி­யத்­து­வ­மிக்க இடங்­க­ளுக்கு விஜயம் செய்த அவர் மதத் தலை­வர்கள் கலந்­து­கொண்ட மனித சமூக சட்டம் என்ற இரு நாள் மாநாட்­டிலும் கலந்­து­கொண்டார்.

மாநாட்டை நடத்­திய ஏற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்த பாப்­ப­ரசர், இங்கு வரு­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை வழங்­கி­ய­மை­யினை சக சகோ­த­ரர்­க­ளி­ட­மி­ருந்து சமா­தா­னத்தை எதிர்­பார்க்கும் சகோ­தரன் என்ற வகையில் வர­வேற்­ப­தா­கவும் தெரி­வித்தார்.

நாம் இங்கு சமா­தா­னத்தை எதிர்­பார்த்து வந்­தி­ருக்­கின்றோம், சமா­தா­னத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக வந்­தி­ருக்­கின்றோம், நாம் சமா­தா­னத்­திற்­கான கரு­வி­க­ளாக இருக்­கின்றோம் எனவும் அவர் தெரி­வித்தார். யுத்­தத்தை நிரா­க­ரிக்­கு­மாறும், கட­வுளின் பெயரால் மேற்­கொள்­ளப்­படும் வன்­மு­றை­களை வன்­மை­யாகக் கண்­டிக்­கு­மாறும் சமயத் தலை­வர்­க­ளிடம் பாப்­ப­ரசர் வேண்­டுகோள் விடுத்தார்.

எகிப்தின் அல்-­–அஸ்ஹர் பல்­க­லைக்­க­ழகம் மற்றும் அல்-­–அஸ்ஹர் பள்­ளி­வா­சலின் பிர­தம இமாம் ஷெய்க் அஹ்மெட் அல்-­–தைய்யெப் கலந்­து­கொண்ட இந்த மாநாட்டில் உள்ளூர் கிறிஸ்­தவ சமூ­கத்­தினை அர­வ­ணைத்து செயற்­ப­டு­மாறு மத்­திய கிழக்­கி­லுள்ள முஸ்­லிம்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்தார்.

முஸ்­லிம்­களை விளித்து உரை நிகழ்த்­திய அவர், ‘அனைத்­தி­டங்­க­ளி­லு­முள்ள கிறிஸ்­த­வர்­களை அர­வ­ணைத்துச் செல்­லுங்கள், ஏனெனில் அவர்கள் எமது தேசத்தின் பங்­கா­ளி­க­ளாவர்’ என ஐக்­கிய அரபு அமீ­ரகத் தலை­நகர் அபு­தா­பியில் நடை­பெற்ற மாநாட்டில் ஆற்­றிய உரையில் இதனைக் குறிப்­பிட்டார். இந்த உரை தொலைக்­காட்சி மூலம் ஒளி­ப­ரப்­பப்­பட்­டது.

கிறிஸ்­த­வர்­களை விளித்து உரை­நி­கழ்த்­திய அவர், ‘நீங்கள் இந்தத் தேசத்தின் ஒரு பகு­தி­யாக இருக்­கின்­றீர்கள், நீங்கள் குடி­மக்கள், நீங்கள் சிறு­பான்­மை­யி­ன­ரல்லர், நீங்கள் முழுமையான உரிமைகளும் பொறுப்புக்களும் கொண்ட பிரஜைகளாவர் ” எனக்கூறினார்.

மேற்கு நாடுகளில் வாழும் முஸ்லிம்களிடம் ஷெய்க் தைய்யெப் விடுத்த வேண்டுகோளில் தாம் வசிக்கும் நாட்டையும் உள்ளூர் சட்டங்களை மதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.