நல்­லி­ணக்க அடிப்­ப­டையில் புத்தர் சிலையை முஸ்­லிம்கள் புன­ர­மைத்து கொடுக்க வேண்டும்

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.மரிக்கார்

0 1,001

மாவ­னெல்­லையில் சேத­மாக்­கப்­பட்ட புத்தர் சிலை­களை நல்­லி­ணக்க அடிப்­ப­டையில் முஸ்­லிம்கள் முன்­வந்து புன­ர­மைத்­துக்­கொ­டக்க வேண்டும். இதன் மூலம் தங்கள் நேர்­மை­யையும், குற்­ற­மற்ற தன்­மை­யையும் நிரூ­பிக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ். எம். மரிக்கார் தெரி­வித்தார்.

அல­ரி­மா­ளி­கையில் நேற்று வியா­ழக்­கி­ழமை ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும்போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,   மாவ­னெல்லை பிர­தே­சத்தில் புத்தர் சிலை­களை உடைத்து சேத­மாக்­கி­யதை ஐக்­கிய தேசிய கட்சி வன்­மை­யாக கண்­டிக்­கின்­றது. கடந்த மூன்­றரை வரு­டங்­களில் நாட்டில் அமை­தி­யான சூழ்­நி­லையை பெற்­றுக்­கொ­டுத்து நீதித்­துறை உள்­ளிட்ட முத்­து­றை­க­ளும் சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­வ­தற்­கான சாத­க­மான நிலை நாட்டில் உரு­வாக்­கி­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

எனினும் சிலர் பிரச்­சி­னை­களை உரு­வாக்கி சேறு­பூசும் வகையில் பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.

ஆனால் கடந்த 52 நாட்­க­ளாக நாட்டில் இடம்­பெற்ற அர­சியல் நெருக்­கடி சந்­தர்ப்­பத்தில் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் தோற்றம் பெற்­றி­ருக்­க­வில்லை. பிரச்­சி­னைகள் இல்­லாத சந்­தர்ப்­பங்­களில் இடம்­பெறும் இது­போன்ற சம்­ப­வங்­களை இன­வா­தத்தை தூண்டும் செயற்­பா­டா­கவே கொள்ள வேண்டும்.

ஆகவே, இவை அனைத்தும் நாட்டில் இன­வாத்தை உரு­வாக்கி நாட்டில் காணப்­படும் நல்­லி­ணக்கத்தை சீர­ழித்து அர­சாங்­கத்தை எதிர்க்க முன்­னெ­டுக்கும் முயற்­சி­யாகும்.

இத­னுடன் தொடர்­புப்­பட்ட குற்­ற­வா­ளிகள் மன­நிலை பாதிக்­கப்­பட்­ட­வர்கள். ஆகையால், அவர்­களை கைது செய்­ய­வேண்டாம் என  பொலி­ஸா­ருக்கு அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ள­தாக  என்­மீது சேறு பூசும் வகை­யி­லான கருத்­துக்கள் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யா­கி­யுள்­ளன. உண்­மை­யாக மாவ­னெல்லை பிர­தே­சத்­துக்கும் எனக்கும் எந்­த­வித தொடர்பும் இல்லை என்றே குறிப்­பிட வேண்டும்.

கூட்­டி­ணைந்த வகையில் முன்­னெ­டுக்­கப்­படும் இந்த சேறு­பூசல் மற்றும் வைராக்­கி­ய­மான சம்­பவங்­களை வன்­மை­யாக கண்­டிக்­கிறோம். இவ்­வாறு சமூ­க­வ­லைத்­த­ளங்­க­ளி­னூ­டாக மக்­க­ளி­டையே பிரச்­சி­னை­களை உரு­வாக்­கு­வதை தவிர்த்து தகுந்த சாட்­சி­களை நிரூ­பிக்­க­வேண்டும். அவ்­வாறு என்­மீ­தான குற்­ற­்சாட்டு நிரூ­பிக்­கப்­ப­டு­மானால் நான் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை இராஜினாமா செய்வேன்.

ஆகவே, திட்­ட­மிட்டு செய்த இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை பெற்­றுக்­கொ­டுப்­பது மாத்­தி­ர­மல்­லாமல், சேறு பூசும் வகையில் சமூ­கத்தில் பொய் பிர­சா­ரங்­களை செய்­து­வ­ரு­ப­வர்­களை கண்­ட­றிந்து அவர்­க­ளுக்­கான தண்­ட­னையை பெற்­றுக்­கொ­டுக்க  வேண்டும். அவ்­வாறு மன­நிலை பாதிக்­கப்­பட்­ட­வர்­களால் புத்தர் சிலை உடைக்­கப்­பட்­டி­ருக்­கு­மானால் அவர்­க­ளுக்கும் தகுந்த தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட வேண்டும்.

எந்த இனத்­த­வ­ராக இருந்­தாரும் நாட்டில் இன­வாதத்­­தையும் பிரி­வி­னை­வா­தத்­தையும் உரு­வாக்க முயற்­சிப்­பார்­க­ளானால் அவர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்டம் அமுல்­ப­டுத்­தப்­படும். இவ்­வா­றான இனப்­பி­ரச்­சி­னைகள் நாட்டில் உரு­வாக்­கப்­ப­டும்­போது போட்­டித்­தன்­மை­யு­டைய சமூ­கத்தில் முன்­னேற முடி­யாது.

பொரு­ளா­தார ரீதி­யா­கவும் பாரிய பின்­ன­டை­வி­னையே சந்­திப்போம். சேறு­பூ­சல்­களின் மூலம் என்னை வீழ்த்­தவோ தோற்­க­டிக்­கவோ முடி­யாது. நான் ஊழல் அர­சி­யல்­வா­தி­யல்ல. சேறு­பூ­சல்­களை கண்டு நான் அஞ்­சப்­போ­வ­து­மில்லை. மாவ­னெல்­லையில் சேத­மாக்­கப்­பட்ட புத்தர் சிலை­களை நல்­லி­ணக்க அடிப்­ப­டையில் முஸ்லிம்கள் முன்வந்து புனரமைத்துக்கொடுக்க வேண்டும். இதன் மூலம்  தங்கள் நேர்மையையும், குற்றமற்ற தன்மையையும் நிரூபிக்க வேண்டும்.

முஸ்லிம்களது நல்லெண்ணத்தின் அடையாளமாகவும் சமாதானமாகவும், பிற இனத்தவர்களுடன் ஒத்துழைப்புடனும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தவும், இதை செய்யவேண்டும்என்றும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.