தொடர் புத்தர் சிலை உடைப்பு விவகாரங்கள்: ஏழு பேர் பொலிஸாரால் கைது இருவரை தேடி வலை விரிப்பு

0 1,024

கண்டி மற்றும் மாவ­னெல்லை ஆகிய பிர­தான நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில் நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் உடைத்து சேத­மாக்­கப்­பட்ட விவ­கா­ரத்தில் இது­வரை 7 சந்­தேக நபர்­களைக் கைது செய்­துள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.
அத்­துடன் இந்த புத்தர் சிலைகள் உடைப்பு விவகாரம் தொடர்பில் மேலும் இரு சந்­தேக நபர்­களை அடை­யாளம் கண்­டுள்­ள­தா­கவும் அவர்­களைக் கைது செய்ய சிறப்பு நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர மேலும் கூறினார்.

இந் நிலையில் கண்டி, மாவ­னெல்லை நகரின் பல பகு­தி­க­ளுக்கு பொலிஸ் விசேட அதி­ரடிப் படை பாது­காப்பு தொடர்ந்தும் வழங்­கப்­பட்­டுள்ள நிலையில், இரு நக­ரங்­க­ளுக்கு உட்­பட்ட அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர, மத்­திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்­ர­ம­சிங்க, கண்டி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரண­வீர, கேகாலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த சிறி­வர்­தன ஆகி­யோ­ருக்கு உரிய ஆலோ­ச­னை­களை வழங்­கி­யுள்ளார்.

பிர­தே­சத்தின் அமை­தியை தொடர எடுக்க முடி­யு­மான அனைத்து அதி­க­பட்ச நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்க இதன்­போது பொலிஸ் மா அதிபர் குறித்த பிர­தே­சங்­களின் உயர் பொலிஸ் அதி­கா­ரி­க­ளையும் அதி­ரடிப் படை கட்­டளைத் தள­ப­தி­யையும் அறி­வு­றுத்­தி­யுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் தக­வல்கள் தெரி­வித்­தன.

கடந்த வாரம் மாவ­னெல்லை பகு­தியில் இரு புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­டி­ருந்த்­தன. அதனைத் தொடர்ந்து நேற்று முன்­தினம் அதி­காலை 3.00 மனி­ய­ளவில் வெலம்­பட பொலிஸ் பிரிவின் லெயம்­க­ஹ­வ­ல­விலும், மாவ­னெல்லை பொலிஸ் பிரிவில் மாவ­னெல்லை – திது­ரு­வத்த சந்­தியில் உள்ள புத்தர் சிலையும் தாக்கி சேத­மாக்­கப்­பட்­டி­ருந்­தன. இத­னை­விட யட்டி நுவர ஸ்ரீ தொடங்­வல நாக விகாரை வளா­கத்தில் உள்ள புத்தர் சிலை ஒன்றும் உடைக்­கப்­பட்­டி­ருந்த்­தது.

எவ்­வா­றா­யினும் மாவ­னெல்லை பொலிஸ் பிரிவில் மாவ­னெல்லை – திது­ரு­வத்த சந்­தியில் புத்தர் சிலையை உடைக்க வந்த சந்­தேக நபர்­களில் ஒரு­வரை பிர­தே­ச­வா­சிகள் பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­தி­ருந்­தனர். இந்த நிலையில் அவ­ரிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணைகள் மற்றும் ஏனைய சாட்­சிகள் பிர­காரம் நேற்று முன் தினம் மேலும் ஐவரும் நேற்று ஒரு­வரும் என கைது செய்­யப்­பட்­டனர். அவர்கள் அனை­வரும் கண்டி, மாவ­னெல்லை பகு­தி­களை அண்­மித்த முஸ்­லிம்­க­ளாவர்.

அவர்­களில் 6 பேரை நேற்று மாவ­னெல்லை பொலிஸார் நீதி­மன்றில் ஆஜர் செய்­தனர். இதன்­போது அவர்­களை எதிர்­வரும் 2019 ஜன­வரி 2 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்டார். நேற்று கைது செய்­யப்­பட்ட நபர் இன்று மன்றில் ஆஜர் செய்­யப்­ப­ட­வுள்ளார்.

இத­னை­விட மேலும் இரு­வரை அடை­யாளம் கண்­டுள்ள பொலிஸார் அவர்­களை தேடி வரு­கின்­றனர். புத்தர் சிலை உடைப்பு விவ­கா­ரத்தில் சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக சட்­டத்தை கடு­மை­யாக அமுல் செய்­யு­மாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளார். அதன்­படி கைதா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணைக்­கப்­பாட்டு சட்ட விதி­வி­தா­னங்­களின் கீழ் (ஐ.சி.சி.பி.ஆர்) குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­க­ப்பட்­டுள்­ளன.

இந்த நிலையில் கண்டி, மாவ­னெல்லை பகு­தி­களில் அமை­தியை பேண தொடர்ந்து பொலிஸார் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.