இஸ்ரேலை சர்வதேச சமூகம் தண்டிக்க வேண்டியது அவசியம்

கொழும்பில் தீர்மானம் நிறைவேற்றம்

0 171

பலஸ்தீன் மீதான இஸ்­ரேலின் தொடர்ச்­சி­யான ஆக்­கி­ர­மிப்பை கண்­டிக்­கு­மாறும் பலஸ்தீன் மீதான அதன் ஆக்­கி­ர­மிப்பு, அடக்­கு­முறைக் கொள்­கைகள் மற்றும் மனித உரிமை மீறல்­களை முடி­வுக்குக் கொண்­டு­வர இஸ்­ரேலை நிர்ப்­பந்­திக்க உலக சமூகம் தண்­டனை வழங்கும் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் எனவும் கொழும்பில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

பலஸ்­தீ­னு­ட­னான ஒரு­மைப்­பாட்­டுக்­கான இலங்கைக் குழு மற்றும் பலஸ்­தீன மக்­க­ளு­ட­னான சர்­வ­தேச ஒரு­மைப்­பட்டுத் தினத்­ஐத முன்­னிட்டு நவம்பர் 29 ஆம் திகதி சர்­வ­தேச கற்­கை­க­ளுக்­கான பண்­டா­ர­நா­யக்க நிலை­யத்தின் கேட்போர் கூடத்தில் ஏற்­பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்­ட­வர்­களால் இத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

இத் தீர்­மா­னத்தில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, கால­னித்­து­வத்தை அதன் அனைத்து வெளிப்­பா­டு­க­ளிலும் முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்கும் ஆக்­கி­ர­மிப்பின் கீழ் வாழும் மக்­களின் சுதந்­திரப் போராட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்­கு­மான தார்­மீகப் பொறுப்பை இலங்கை மக்­க­ளுக்கும் பரந்த சர்­வ­தேச சமூ­கத்­திற்கும் நினை­வூட்­டு­கிறோம்.

பலஸ்­தீன மக்­களின் சுதந்­தி­ரத்­திற்­கான தீவிர ஏக்­கத்தை மற்றும் அவர்­களின் சுதந்­தி­ரத்­திற்­காக போரா­டு­வ­தற்­கான உரி­மையை அங்­கீ­க­ரிக்­கிறோம்.
ஆக்­கி­ர­மிப்பின் கீழ் உள்ள பலஸ்­தீன மக்­களின் சுதந்­திரப் போராட்­டங்­களை சர்­வ­தேச சட்டம் அங்­கீ­க­ரிப்­பதை மீள வலி­யு­றுத்­து­கிறோம்.

ஐக்­கிய நாடுகள் சபையும் அத­னுடன் இணைந்த அமைப்­புக்­களும் 754 க்கும் மேற்­பட்ட தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றி­யி­ருப்­ப­தையும் அவற்றில் ஐக்­கிய நாடுகள் பாது­காப்­புச சபையின் 97 தீர்­மா­னங்­களும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மற்றும் ஏனைய சர்­வ­தேச அமைப்­புக்­களின் 96 தீர்­மா­னங்­களும் அடங்கும் என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டு­கிறோம்.

1917 ஆம் ஆண்டின் மிகவும் கண்­டிக்­கத்­தக்­க­தான பால்போர் பிர­க­ட­னத்தின் மூலம் பிரித்­தா­னிய ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களால் பலஸ்­தீன வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த பிர­தே­சத்தில் நிலை­நி­றுத்­தப்­பட்ட இஸ்ரேல் ஒரு சட்­ட­வி­ரோத நிறு­வனம் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­கிறோம்.

இஸ்­ரே­லிய போர்க்­குற்­றங்கள் தொடர்­பான பல்­வேறு ஐக்­கிய நாடு­களின் ஆணைக்­கு­ழுக்­களின் கண்­டு­ட­றி­தல்­களை ஆமோ­திப்­ப­தோடு, குறிப்­பாக கிழக்கு ஜெரு­சலேம் மற்றும் இஸ்ரேல் உட்­பட ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீனப் பிர­தே­சத்தில் ஐக்­கிய நாடு­களின் சுதந்­திர சர்­வ­தேச விசா­ரணை ஆணைக்­கு­ழு­வினால் வெளி­யி­டப்­பட்ட அக்­டோபர் 20, 2022 அறிக்­கையை ஏற்­றுக்­கொள்­கிறோம்.

அத்­துடன் பலஸ்­தீ­னு­ட­னான ஒரு­மைப்­பாட்­டுக்­கான இலங்கைக் குழு, ஐ.நா தீர்­மா­னங்­களைத் தொடர்ந்து மீறும் இஸ்ரேல் மீது சர்­வ­தேச சமூகம் கடு­மை­யான தடை­களை விதிக்கத் தவ­றி­யது குறித்து அத­னது கவ­லையை வெளிப்­ப­டுத்­து­கி­றது.
பலஸ்தீன் மீதான இஸ்­ரேலின் தொடர்ச்­சி­யான ஆக்­கி­ர­மிப்பை கண்­டிக்­கு­மாறு சர்­வ­தேச சமூ­கத்­திற்கு அழைப்பு விடுக்­கி­றது.

பலஸ்தீன் மீதான அதன் ஆக்­கி­ர­மிப்பு, அடக்­கு­முறைக் கொள்­கைகள் மற்றும் மனித உரிமை மீறல்­களை முடி­வுக்குக் கொண்­டு­வர இஸ்­ரேலை நிர்­பந்­திக்க உலக சமூகம் தண்­டனை வழங்கும் நட­வ­டிக்­கை­களை எடுக்க வலி­யு­றுத்­து­கி­றது.
இலங்கை அர­சாங்கம் அதன் முன்­மு­யற்சி மற்றும் முற்­போக்­கான அணி­சேரா கொள்­கைக்கு இணங்க பலஸ்­தீன பிரச்­சி­னைக்கு தனது ஆத­ரவை அதி­க­ரிக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றது.

இலங்கை பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு இயக்­கத்தின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பிமல் ரத்­நா­யக்க தலை­மையில் நடை­பெற்ற இந் நிகழ்வில் இலங்­கைக்­கான பலஸ்­தீன தூதுவர் கலா­நிதி சுஹைர் ஹம்­தல்லா சைத், இலங்­கைக்­கான ஐ.நா. வதி­விட பிர­தி­நிதி ஹனா சிங்கர், சர்­வ­தேச உற­வுகள் தொடர்­பான நிபுணர் குசும் விஜே­தி­லக, சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீன் இஸ்ஸதீன் ஆகியோர் உரை நிகழ்த்­தினர். இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரஊப் ஹக்கீம், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், இஷாக் ரஹ்மான், எஸ்.எம்.எம். முஸர்ரப் உட்பட மேலும் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.