வலிந்து காணாமலாக்கப்பட்ட முஸ்லிம்கள் பற்றி சாட்சியமளிக்கலாம்

ஞாயிறன்று காத்தான்குடியில் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வு

0 125

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
காத்­தான்­குடி மற்றும் அதனை அண்­டிய முஸ்லிம் பிர­தே­சங்­களில் யுத்த காலத்தில் வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­டோ­ரது குடும்ப உறுப்­பி­னர்கள் காணா­ம­லாக்­கப்­பட்டோர் மற்றும் கடத்­தப்­பட்டோர் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்ள உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்க விரும்பின் உட­ன­டி­யாக காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளன காரி­யா­ல­யத்தில் பதி­வு­களை மேற்­கொள்­ளு­மாறு காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் காத்­தான்­குடி பொது மக்­க­ளுக்கு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ள­னத்தின் தலைவர் ரஊப் ஏ மஜீட் அதன் செய­லாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நளீமி ஆகியோர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இந்த வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்கள் சம்­மே­ள­னத்தின் வேண்­டு­கோளின் பேரில் யுத்த காலங்­களில் வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்டோர் சம்­பந்­த­மான தக­வல்­களைத் திரட்­டு­வ­தற்கும் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளவும் இதற்­காக நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­குழு காத்­தான்­குடி பிர­தே­சத்­திற்கு எதிர்வரும் 23.10.2022 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை வருகை தர­வுள்­ளனர்.

எனவே வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­டோ­ரது குடும்ப உறுப்­பி­னர்கள் இதில் சாட்­சி­ய­ம­ளிக்க விரும்பின் உட­ன­டி­யாக சம்­மே­ளன காரி­யா­ல­யத்தில் இதற்­கான பதி­வு­களை மேற்­கொள்­ளு­மாறும் கேட்­கப்­பட்­டுள்­ளனர். இந்த ஆணைக்­குழு காத்­தான்­குடி கடற்­கரை வீதி­யி­லுள்ள ஹோட்டல் பீச் வேயில் அமர்­வினை நடாத்­த­வுள்­ளது.

யுத்­த­கா­லத்தில் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் அது தொடர்­பான இறப்பு அத்­தாட்­சிப்­பத்­திரம், மற்றும் பொலிஸ் முறைப்பாடு உள்ளடங்கலான ஆவணங்களின் பிரதிகளையும் அலுவலக நேரத்தில் சம்மேளன அலுவலகத்தில் சமர்ப்பித்து தங்களது பதிவுகளை மிக விரைவாக மேற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.