யெமன் சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

0 469

யெமன் அர­சுக்கும் ஹெளதி கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கும் இடையே சுவீ­டனில் ஒரு­வா­ர­மாக ஐக்­கிய நாடுகள் சபை தலை­மை­யி­லான சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­களில் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது.

இரு தரப்­பி­ன­ரி­டையே நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்பும் நட­வ­டிக்­கை­களின் ஒரு பகு­தி­யாக ஹெளதி கிளர்ச்­சி­யா­ளர்­களின் பிடி­யி­லுள்ள சனா விமான நிலை­யத்தை மறு­ப­டியும் திறப்­ப­தற்கு யெமன் அரசு கடந்த வாரம் சம்­மதம் தெரி­வித்­தி­ருந்­தது.

ஆனால் அங்கு வரும் விமா­னங்கள் அர­சாங்­கத்தின் கட்­டுப்­பாட்­டி­லி­ருக்கும் விமான நிலை­யத்தில் தரை­யி­றக்­கப்­பட்டு சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்­னரே சனா விமான நிலை­யத்­துக்குள் அனு­ம­திக்­கப்­படும் என்ற யெமன் அரசின் முன்­மொ­ழிவு கடந்த வாரம் ஹௌதி கிளர்ச்­சி­யா­ளர்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

தொடர்ந்து நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­க­ளை­ய­டுத்து ஹௌதி கிளர்ச்சியாளர்கள் யெமன் அரசின் இந்த முன்மொழிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.