ஒரு வருடமாக 6500 கி.மீ தூரம் நடந்து ஹஜ்ஜுக்கு வந்துள்ள பிரித்தானியர் ஆதம்

0 254

ஆதம் முஹம்மத் எனும் 52 வய­தான பிரித்­தா­னிய பிரஜை சுமார் ஒரு வருட கால நடைப் பய­ணத்தின் மூலம் இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்ற சவூதி அரே­பி­யாவை வந்­த­டைந்­துள்ளார்.

2021 ஆகஸ்ட் 1 ஆம் திகதி பிரித்­தா­னி­யாவின் வொல்­வர்­ஹாம்ப்­ட­னி­லுள்ள தனது இல்­லத்­தி­லி­ருந்து பய­ணத்தை ஆரம்­பித்த ஆதம், நெதர்­லாந்து, ஜேர்­மனி, செக் குடி­ய­ரசு, ஹங்­கேரி, ருமே­னியா, பல்­கே­ரியா, துருக்கி, லெபனான், சிரியா மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள் ஊடாக கால்­ந­டை­யாகப் பய­ணித்து 2022 ஜுன் 26 ஆம் திகதி மக்­கா­வி­லுள்ள ஆயிஷா பள்­ளி­வா­சலை வந்­த­டைந்தார். இதற்­க­மைய இவர் 11 மாதங்­களும் 26 நாட்­களும் தினமும் சரா­ச­ரி­யாக 17.8 கி.மீ. தூரம் நடந்­துள்ளார்.

இந்தப் பய­ணத்­திற்­கான சிந்­தனை தன்னுள் உதித்­தது எப்­படி என அவர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கையில், கொரோனா முடக்க காலத்தில் நான் அதி­க­ம­திகம் குர்ஆன் ஓதுவேன். ஒரு நாள் நான் தூக்­கத்­தி­லி­ருந்து விழித்த போது, மக்­கா­வுக்கு கால்­ந­டை­யாகச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னுள் திடீ­ரென உதித்­தது. அந்த எண்­ணத்தை என்னால் நிரா­க­ரிக்க முடி­ய­வில்லை. அன்­றி­லி­ருந்து அதற்­கான தயார்­ப­டுத்­தல்­களில் ஈடு­பட்டேன். பிரித்­தா­னிய நிறு­வனம் ஒன்­றி­னதும் நலன்­வி­ரும்பி ஒரு­வ­ரதும் ஆத­ர­வுடன் சுமார் 2 மாதங்­க­ளாக இதற்­கான தயார்­ப­டுத்­தல்­களில் ஈடு­பட்டேன். எனக்குத் தேவை­யான உணவு, உடை­மை­களை எடுத்துச் செல்­லவும் தேவை­யான இடங்­களில் நின்று ஓய்­வெ­டுக்­கவும் வச­தி­யாக ஒரு தள்ளு வண்­டியை நானே தயா­ரித்தேன். அதில் சுமார் 250 கிலோ எடை­யுள்ள பொருட்­களை வைக்க முடியும். நான் அதற்­குள்ளே சமைத்து சாப்­பி­டுவேன், தூங்­குவேன். தொடர்ச்­சி­யான பயணம், கால­நிலை மாற்­றங்கள் என்­ப­வற்றை விட வேறு தடங்­கல்கள் எதுவும் எனக்கு ஏற்­ப­ட­வில்லை. சில நாடு­களில் பொலிசார் என்னை நிறுத்தி விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தி­னார்கள். எனினும் எனது பயணம் தொடர்பில் அவர்கள் அறிந்து கொண்­டதும் ஆச்­ச­ரி­யப்­பட்­டார்கள். என்னைத் தொடர்ந்து பய­ணிக்க அனு­ம­தித்­தார்கள். இந்தப் பயணம் நெடு­கிலும் மக்கள் எனக்கு பல உத­வி­களை வழங்­கி­னார்கள். எனது தள்­ளு­வண்­டியைத் தள்ளிக் கொண்டு வரு­வது முதல் உணவு, தங்குமிடம் தருவது வரை பல உதவிகள் எனக்கு கிடைத்தன” என்றார்.

ஈராக்கிய, குர்திஷ் பிரஜையான ஆதம் முஹம்மத், தனது குடும்பத்துடன் பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.