அறபா பேருரை முதன் முறையாக தமிழிலும் மொழி பெயர்க்கப்படுகிறது

0 267

அறபா நாள் சொற்­பொ­ழிவின் மொழி­பெ­யர்ப்பு ஏற்­க­னவே 10 மொழி­களில் நேர­லை­யாக ஒலி­ப­ரப்­பப்­படும் சூழலில் இவ்­வ­ருடம் முதல் தமிழ் உள்­ளிட்ட மேலும் நான்கு மொழி­க­ளுக்கும் அது விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சவூதி அரே­பிய ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன.

நவீன தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி இஸ்­லாத்தின் மித­வாதம் மற்றும் சகிப்­புத்­தன்­மைக்­கான செய்தி இந்த உல­குக்கு அறி­விக்­கப்­படும் என்று மக்கா மற்றும் மதீ­னாவில் உள்ள இரு புனித பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான தலைவர் அப்துல் ரகுமான் அல் – சுதைஸ் தெரி­வித்­துள்ளார் என்று ‘அரப் நியூஸ்’ ஊடகம் தெரி­விக்­கி­றது.

மக்­காவில் உள்ள அல் நிம்ரா பள்­ளி­வா­சலில் நிகழ்த்­தப்­படும் அறபா நாள் சொற்­பொ­ழிவு கடந்த ஐந்­தாண்­டு­க­ளாக அரபு தவிர்ந்த உலகின் வெவ்­வேறு மொழி­களில் மொழி­பெ­யர்த்து ஒலி­ப­ரப்­பப்­பட்டு வரு­கி­றது.

ஏற்­கெ­னவே அவ்­வாறு ஆங்­கிலம், பிரெஞ்சு, மலாய், உருது, பார­சீகம், ரஷ்ய மொழி, சீன மொழி, வங்க மொழி, துருக்­கிய மொழி ஹவுசா ஆகிய பத்து மொழி­களில் மொழி­பெ­யர்புகள் நிகழ்ந்து வரும் சூழலில் இந்த ஆண்டு முதல் தமிழ், இந்தி, ஸ்பானிய மொழி மற்றும் ஆபி­ரிக்க மொழி­யான ஸ்வாஹிலி ஆகிய மொழிகள் சேர்க்­கப்­பட்­டுள்­ளன என்று அல்-­சுதைஸ் தெரி­வித்­துள்ளார்.

இந்த மொழி­பெ­யர்ப்பு முதல் ஆண்டு 10 இலட்சம் பேருக்கும், இரண்டாம் ஆண்டு 1 கோடியே 10 இலட்சம் பேருக்கும், மூன்றாம் ஆண்டு 50 இலட்சம் பேருக்கும், நான்காம் ஆண்டு 10 கோடி பேருக்கும் பய­னாக இருந்­தது என்று கூறும் அல் – சுதைஸ் இந்த ஆண்டு 20 கோடி பேருக்கு பலனளிக்கும் என தெரிவித்ததாக அரப் நியூஸ் தெரிவிக்கிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.