ஆப்கானில் நிலநடுக்கம் 1000 பேர் வரை மரணம்

0 24

ஆப்­கா­னிஸ்­தானின் பக்­திகா மாகா­ணத்தில் நேற்று அதி­காலை ஏற்­பட்ட பாரிய நில­ந­டுக்­கத்தில் சிக்கி ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்­நாட்டு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. நேற்று மாலை 1000 பேர் உயி­ரி­ழந்­தமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், உயி­ரி­ழப்­பு­களின் எண்­ணிக்கை இதை விட அதி­க­மாக இருக்கும் என்றும் தலி­பான்கள் தெரி­வித்­துள்­ளனர்.

பக்­திகா மாகா­ணத்தில் வீடுகள் இடிந்­து­கி­டப்­ப­தையும், காய­ம­டைந்­த­வர்கள் ஹெலி­கொப்டர் உட்­பட வாக­னங்­களில் கொண்டு செல்­லப்­ப­டு­வ­தையும் காட்டும் படங்கள் சமூக ஊட­கங்­களில் பகி­ரப்­ப­டு­கின்­றன.

அரசின் பக்தார் செய்தி முகமை வெளி­யிட்ட செய்­தியில் 1000 பேர் இறந்­த­தா­கவும், 1500 பேர் காய­ம­டைந்­த­தா­கவும், மேலும் இந்த எண்­ணிக்கை உயரும் என்றும் கூறப்­பட்­டுள்­ளது.

தென்­கி­ழக்கு ஆப்­கா­னிஸ்­தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் உள்ளூர் நேரப்­படி அதி­காலை 1.30 மணிக்கு இந்த நில­ந­டுக்கம் ஏற்­பட்­டுள்­ளது.
ஆப்­கா­னிஸ்­தானில் கடந்த 10 ஆண்­டு­களில் 7,000க்கும் மேலா­ன­வர்கள் அங்கு நில­ந­டுக்கம் கார­ண­மாக இறந்­துள்­ளனர் என்று ஐ.நா.வின் மனி­தா­பி­மான விவ­கா­ரங்கள் ஒருங்­கி­ணைப்பு அலு­வ­லகத்தின் தர­வுகள் கூறு­கின்­றன.

இந்­தியா, பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான் எல்­லை­க­ளுக்குள் சுமார் 500 மீற்றர் தூரத்­துக்கு இந்த நில­ந­டுக்கம் உண­ரப்­பட்­ட­தாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறு­வனம் தெரி­விக்­கி­றது.
ஆப்­கா­னிஸ்தான் தலை­நகர் காபூ­லிலும், பாகிஸ்தான் தலை­நகர் இஸ்­லா­மா­பாத்­திலும் நில­ந­டுக்கம் உண­ரப்­பட்­ட­தாக அதை நேரில் உணர்ந்­த­வர்­களை மேற்கோள் காட்டி அந்த மையம் கூறி­யுள்­ளது.

“துர­திஷ்­ட­வ­ச­மாக கடந்த இரவு பக்­திகா மாகா­ணத்தின் நான்கு மாவட்­டங்­களில் கடு­மை­யான நில­ந­டுக்கம் ஏற்­பட்­டுள்­ளது. இதனால் நூற்­றுக்­க­ணக்­கான ஆப்கான் மக்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர். பலர் காய­ம­டைந்­துள்­ளனர். இந்த நில­ந­டுக்கம் பல வீடு­க­ளையும் அழித்­துள்­ளது.” என அரசு செய்தி தொடர்­பாளர் பிலால் கரிமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“மேலும் பேரழிவு ஏற்படாமல் தடுப்பதற்கு, உதவி நிறுவனங்கள்; தங்களின் குழுக்களை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.