ஆயிஷாவுக்கு நடந்தது என்ன?

காமுகர்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் அட்டுளுகம சம்பவம்

0 7,574

எம்.எப்.எம்.பஸீர்

அது கடந்த மே 27 ஆம் திகதி வெள்ளிக் கிழமை. “மகள்…. கடைக்கு போய் கோழி இறைச்சி வாங்­கிட்டு வாங்க…” என ஒரு தொகை பணத்தை சிறுமி ஆயி­ஷா­விடம் அவ­ளது தாய் கொடுத்­த­னுப்­பினார். அதன்­படி சிறுமி ஆயி­ஷாவும் வீட்­டி­லி­ருந்து 200 மீற்றர் தூரத்தில் அமைந்­துள்ள கோழி இறைச்சிக் கடைக்குச் சென்­றுள்ளார். அப்­போது நேரம் முற்­பகல் 10.00 மணிக்கும் 10.30 மணிக்கும் இடைப்­பட்­ட­தாக இருந்­தி­ருக்கும்.
கோழி வாங்கச் சென்ற ஆயிஷா வெகு நேர­மா­கியும் வீடு திரும்­ப­வில்லை. இவ்­வ­ளவு நேரம் என்ன செய்­கிறாள் என யோசித்­த­வாறு, ஆயி­ஷாவின் தாயார் கோழிக் கடை நோக்கி சென்­றுள்ளார். போகும் வழி­யிலும் ஆயி­ஷாவை அவர் காண­வில்லை. அத­னை­ய­டுத்து கோழிக் கடை வரை சென்று விசா­ரித்த போது, 9 வய­தான அந்த சிறுமி, கோழிக் கடைக்கு வந்து கோழி இறைச்­சியை வாங்கிச் சென்­று­விட்­ட­தாக கடைக்­காரர் தெரி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து ஆயி­ஷாவின் தாயார் கல­வ­ர­ம­டைந்­துள்ளார். ‘மகள் எங்கே போனாள்’ என யோசிப்­ப­தற்குள் பல­ரிடம் அவளைக் கண்­டீர்­களா என விசா­ரிக்­க­லா­யினார். இதை­ய­டுத்து ஆயி­ஷாவைக் காண­வில்லை என்ற கதை ஊரெங்கும் பர­வி­யது.

ஆம், சம்­பவம் நடந்த பண்­டா­ர­கம பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட அட்­டு­லு­கம எனும் அந்த முஸ்லிம் கிரா­மத்தை தாண்­டியும் தகவல் பர­வி­யது. அனை­வரும் அந்த சின்னஞ் சிறு சிறு­மியை தேட­லா­யினர். எந்த தக­வல்­களும் கிடைக்­க­வில்லை.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே, ஆயி­ஷாவின் தாயும், தந்­தையும் தமது இரண்டே மாதங்­க­ளான கைக் குழந்­தை­யுடன், பண்­டா­ர­கம பொலிஸ் நிலை­யத்­துக்கு முறைப்­பா­ட­ளிக்க சென்­றனர். அப்­போது நேரம் மாலை 4.00 மணியை கடந்­தி­ருந்­துள்­ளது.
பண்­டா­ர­கம பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஆர்.பி. ராஜ­பக்ஷ அப்­போது பொலிஸ் நிலை­யத்தில் கட­மையில் இருந்­துள்ளார். பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரியை நேர­டி­யா­கவே சந்­தித்த ஆயி­ஷாவின் தாய் ‘சேர் கோழி இறைச்சி கடைக்கு சென்ற எனது மகளை காண­வில்லை, எனது மகளை தேடித்­தா­ருங்கள்” என கத­றி­ய­ழு­துள்ளார்.

முற்­பகல் வேளை­யி­லி­ருந்து தேடு­வது, இன்னும் எந்த தக­வலும் இல்­லாமல் இருப்­பது தொடர்பில் முறைப்­பாட்டின் போது அறிந்­து­கொண்ட பொலிஸ் பொறுப்­ப­தி­காரி, நிலை­மையின் பார­தூ­ரத்தை உணர்ந்து உடன் செயற்­படத் தொடங்­கினார்.

தனது உயர் அதி­கா­ரி­க­ளான களுத்­துறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் குமா­ர­வுக்கும் பாணந்­துறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சமன் வெத­கே­வுக்கும் உட­ன­டி­யாக அறி­வித்­துள்ள அவர், நேர­டி­யாக களத்­தி­லி­றங்கி அட்­டு­லு­கம பகு­திக்கு தனது குழு­வுடன் சென்­றுள்ளார்.

அட்­டு­லு­கம பகு­தியில் சிறுமி ஆயி­ஷாவின் வீடு அமைந்­தி­ருந்த பெரிய பள்­­ளி­வா­சலை அண்­மித்த பகு­தி­யி­லி­ருந்து, அவர் இறைச்சி வாங்க சென்ற கோழிக் கடை வரை­யி­லான பகு­தியை பொறுப்­ப­தி­காரி நோட்­ட­மிட்­டுள்ள நிலையில், கோழிக் கடையை அண்­மித்து இருந்த சி.சி.ரி.வி. ஒன்றில் பதி­வான காட்­சி­களை நேர­டி­யா­கவே பரீட்­சித்­துள்ளார்.
அதில், ஆயிஷா கோழிக் கடைக்குள் சென்று இறைச்சி கொள்­வ­னவு செய்­து­விட்டு திரும்­பு­வது தெளி­வாக பதி­வா­கி­யி­ருந்த நிலையில், அதன் பிறகே அவ­ருக்கு ஏதோ நடந்­தி­ருக்க வேண்டும் எனும் முடி­வுக்கு வரும் பொறுப்­ப­தி­காரி விசா­ர­ணை­களை விரிவு படுத்­தினார்.

விப­ரங்­களை தனது உயர் அதி­கா­ரி­க­ளுக்கு அவர் அறி­விக்­கவே, உட­ன­டி­யாக களுத்­துறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் குமார, தனது நேரடி கட்­டுப்­பாட்டில் இருக்கும் களுத்­துறை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ரொஷான் ஒலு­க­லவின் கீழான சிறப்புக் குழு­வொன்­றி­னையும், சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சமன் வெத­கேயின் நேரடி கட்­டுப்­பாட்டில் இருக்கும் வலய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சமில திஸா­நா­யக்க தலை­மை­யி­லான குழு­வி­ன­ரையும் விசா­ர­ணை­க­ளுக்­காக அட்­டு­லு­கம பகு­திக்கு அனுப்பி வைத்­துள்ளார்.

விசா­ர­ணை­யா­ளர்கள் கோழி இறைச்சிக் கடைக்கு அருகே உள்ள சி.சி.ரி.வி கெம­ராவை பரீட்­சித்த போது, சிறுமி இறைச்­சியை வாங்­கிய பின்னர் அங்­கி­ருந்து திரும்பும் சந்­தர்ப்­பத்தில் அப்­பா­தையால் பய­ணித்த வேன் ஒன்று தொடர்பில் அவ­தானம் திரும்­பி­யது. எனினும், அந்த வேன் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு பொருட்­களை விநி­யோ­கிக்கும் பிலி­யந்­தலை பகு­தியை சேர்ந்­தது என்­பது உட­ன­டி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­களில் தெரிய வந்­தது.

இந் நிலையில் மே 27 ஆம் திகதி மாலை சிறுமி ஆயி­ஷாவை தேடிய விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில், ஆயிஷா என சந்­தே­கிக்க முடி­யு­மான சிறு­மியை புறக்­கோட்டை, பாணந்­துறை பகு­தி­களில் அவ­தா­னித்­த­தாக சில தக­வல்கள் பொலி­ஸா­ருக்கு கிடைத்­துள்­ளன. உட­ன­டி­யாக விசா­ர­ணை­யா­ளர்கள் அது தொடர்பில் புறக்­கோட்டை, டாம் வீதி மற்றும் பாணந்­துறை பொலிஸார் ஊடாக அந்த தகவல் தொடர்பில் தேடிப் பார்த்த போது அத்­த­க­வல்­களில் உண்­மை­யில்லை என தெரி­ய­வந்­துள்­ளது.

இந் நிலையில் 28 ஆம் திகதி விடிய விடிய விசா­ர­ணைகள் நீடித்­தன. இத­னை­ய­டுத்து ஆயி­ஷாவின் வீடு முதல் கோழிக் கடை வரை­யி­லான பாதையில் வேறு ஏதும் தட­யங்கள் கிடைக்­கி­றதா என பொலிஸார் தேட­லா­யினர். அப்­போது கோழிக் கடையை அண்­மித்து உள்ள சி.சி.ரி.வி. கம­ரா­வுக்கு மேல­தி­க­மாக, ஆயி­ஷாவின் வீட்டுப் பகு­தியை அண்­மித்த பாதை­யிலும் சி.சி.ரி.வி. கமரா ஒன்று உள்­ளமை தெரி­ய­வ­ரவே அதனை பொலிஸார் பரீட்­சித்­துள்­ளனர். அந்த கமரா ஆயி­ஷாவின் வீட்­டி­லி­ருந்து சுமார் 50 மீற்­றர்­க­ளுக்குள் உள்ள கம­ரா­வாகும்.

இத­னை­ய­டுத்து அந்த சி.சி.ரி.வி. கம­ரா­வையும், ஆயி­ஷாவின் வீட்­டி­லி­ருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள கோழிக் கடையை அண்­மித்­துள்ள சி.சி.ரி.வி. கமரா காட்­சி­க­ளையும் ஒப்­பீடு செய்து விசா­ர­ணை­யா­ளர்கள் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர்.

அதன்­போது வீட்­டுக்கு அருகே உள்ள கம­ராவில், ஆயிஷா கோழிக் கடைக்கு செல்­வது மட்­டுமே பதி­வா­கி­யி­ருந்­தது. கோழிக் கடை அரு­கே­யான கம­ராவில் கோழிக் கடைக்கு வரு­வதும் அங்­கி­ருந்து திரும்­பு­வதும் என இரு காட்­சி­களும் பதி­வா­கி­யி­ருந்­தன.

இந் நிலையில் விசா­ரணைக் குழு­வினர் ஒரு முடி­வுக்கு வந்­தனர். ஆம், சிறுமி இறைச்­சியை வாங்­கிக்­கொண்டு, வீட்டை அண்­மித்த 50 மீற்­றர்­க­ளுக்குள் வரவே இல்லை என்­பதே அந்த முடிவு. கோழிக் கடையை அண்­மித்த 50 மீற்­றர்­க­ளுக்­குள்ளும் ஆயி­ஷா­வுக்கு எதும் ஆக­வில்லை என்­பதை கோழிக் கடையை அண்­மித்த கமரா ஊடாக பொலி­ஸாரால் ஊகிக்க முடி­யு­மா­னது. எனவே இடைப்­பட்ட 100 மீற்றர் தூரத்­தி­லேயே அவ­ருக்கு ஏதோ நடந்­துள்­ளது என்ற முடி­வுக்கு வரும் விசா­ர­ணை­யா­ளர்கள், அந்த 100 மீற்றர் தூரத்தில் தட­யங்­களை தேட­லா­யினர்.

இதற்குள், ஆயிஷா முன்­னைய தினம் இரவு அதா­வது 26 ஆம் திகதி நித்­தி­ரைக்கு செல்லும் போது அணிந்த ஆடையை மோப்பம் பிடித்த பொலிஸ் மோப்ப நாயும் ஆயிஷா கோழிக் கடைக்கு சென்று திரும்­பி­யதை ஒப்­பு­விக்கும் வகையில் நடந்­து­கொண்­டது.
இந் நிலையில் தான், விடயம் நாடு முழு­வதும் பர­ப­ரப்பு அடைய, ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவும் தனது ட்விட்டர் தளத்தில் உருக்­க­மான பதி­வொன்­றினை இட்டு, ஆயிஷா விட­யத்தில் குற்­ற­மி­ழைத்­தோரை சட்­டத்தின் முன் மிக விரை­வாக நிறுத்­துவோம் என அறி­வித்தார்.

அவ்­வ­றி­விப்பை அடுத்து பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்­ர­ம­ரத்­னவும், தனது பங்­குக்கு, விசா­ர­ணை­யா­ளர்­க­ளுடன் இணைந்து செயற்­பட, சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கீழ் செயற்­படும் மனிதப் படு­கொலை மற்றும் திட்­ட­மிட்ட குற்­றங்­களை தடுக்கும் விசா­ரணை பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ஹேமால் பிர­சாந்­தவின் கீழ் 12 பேர் கொண்ட குழு­வொன்­றினை அட்­டு­லு­க­ம­வுக்கு அனுப்­பினார்.

இவ்­வா­றான பின்­ன­ணியில், பொலிஸார், சிறு­மிக்கு அனர்த்தம் நிகழ்ந்­தி­ருக்­கலாம் என நம்­பிய 100 மீற்றர் பகு­தியை ஆராய்ந்த போது, அங்கு காடு­க­ளுடன் கூடிய ஒரு சதுப்பு நிலம் இருப்­பது தெரி­ய­வந்­தது. இந் நிலையில் விசா­ர­ணை­யா­ளர்­களின் ஆலோ­சனைப் படி, 28 ஆம் திகதி அந்த சதுப்பு நிலப் பகு­தியில் தேடு­தல்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.
ஆம், அப்­போது தான் சிறுமி ஆயிஷா உயி­ருடன் இல்லை என்­ப­தற்­கான சான்று வெளிப்­பட்­டது. சேற்­றுக்குள் புதைந்­தி­ருந்த, காலின் ஒரு பகுதி சேற்­றுக்கு மேலே தெரிய, சிறுமி ஆயி­ஷாவின் உயி­ரற்ற உடல் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

பண்­டா­ர­கம அட்­டு­லு­கம பிர­தே­சத்தில் பள்­ளி­வாசல் அருகில் வசித்து வந்த சிறு­மியே ஆயிஷா. அவ­ரது முழப் பெயர் பாத்­திமா ஆயிஷா அக்ரம். மூத்த சகோ­த­ரர்கள் இருவர் மற்றும் இரு மாதங்­க­ளே­யான இளைய சகோ­தரர் ஒருவர் உள்­ள­டங்­கிய குடும்­பத்தின் ஒரே பெண் பிள்ளை. 9 வய­தான பாத்­திமா ஆயிஷா மர­ணிக்கும் போது, அட்­டு­லு­கம அல்-­கஸ்­ஸாலி முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்­றுக்­கொண்­டி­ருந்தார்.

ஆயி­ஷாவின் உயி­ரற்ற உடல் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து, பிர­தேசம் எங்கும், ஏன் நாடெங்கும் அந்த தகவல் மிக வேக­மாக பர­வி­யது. மக்கள் அதிர்ச்­சியில் ஆழ்ந்­தனர். இன, மத பேத­மின்றி கண்ணீர் விட்டு அழு­தனர்.

ஸ்தலத்­துக்கு பொலி­ஸாரும், தட­ய­வியல் பிரி­வி­னரும், பாணந்­துறை நீதி­மன்றின் மேல­திக நீதி­வானும், பாணந்­துறை வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­திய அதி­காரி உள்­ளிட்ட குழு­வி­னரும் விரைந்­தனர். நிலை­மையை அவ­தா­னித்­தனர்.

இந் நிலையில், பிரேத பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுத்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு அவ்­வி­டத்­துக்கு வந்த பாணந்­துறை பதில் நீதிவான் இந்­ரானி சட்ட வைத்­திய அதி­கா­ரிக்கு உத்­த­ர­விட்­ட­துடன், சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்கள் எவ­ரேனும் வெளிப்­பட்டால் உட­ன­டி­யாக கைது செய்­யு­மாறும் கட்­ட­ளை­யிட்டார். இத­னை­ய­டுத்து சிறுமி ஆயி­ஷாவின் ஜனாஸா, பிரேத பரி­சோ­த­னைக்­காக பாணந்­துறை ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்­லப்­பட்­டது.

இந் நிலையில் ஆயி­ஷாவை இவ்­வாறு கொடூ­ர­மாக கொன்­ற­வர்கள் யார், எதற்­காக அவ்­வாறு செய்­தனர் என்­பதை கண்­ட­றிய, உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒலு­கல தலை­மை­யி­லான குழு­வினர் வலை விரிக்­க­லா­யினர். அவர்கள் ஊர் மக்­க­ளிடம் துஷ்­பி­ர­யோகம் உள்­ளிட்ட குற்றச் சாட்­டுக்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள், பெண்கள், சிறு­வர்கள் தொடர்பில் மோச­மான பார்­வை­களை செலுத்­துவோர் உள்­ளிட்டோர் தொடர்பில் தக­வல்கள் இருப்பின் கோரினர். அட்­டு­லு­கம மக்கள் அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு ஒத்­து­ழைப்பு வழங்கி சிலரின் பெயர்­களை கொடுத்­தி­ருந்­தனர்.

இத­னி­டையே, பொலி­ஸாரும் தமது நுட்­பத்­துக்கு அமைய, சுமார் 30 இற்கும் அதி­க­மான வாக்கு மூலங்­களை பதிவு செய்­தி­ருந்­தனர்.

இந் நிலையில், அது­வ­ரை­யான அனைத்து தக­வல்கள், தட­யங்­களை வைத்து பார்க்கும் போது பிர­தா­ன­மாக ஐவர் தொடர்பில் பொலி­ஸா­ருக்கு சந்­தேகம் ஏற்­பட்­டது. அந்த ஐவ­ரையும் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒலு­கல தலை­மை­யி­லான விசா­ரணைக் குழு­வினர் தமது பொறுப்பில் எடுத்து விசா­ரிக்­க­லா­யினர்.

இத­னை­விட, ஆயி­ஷாவின் தந்தை போதைப் பொருள் பாவ­னைக்கு பழக்­கப்­பட்­டவர் என்­ப­தாலும், மகளின் இறப்பின் பின்­ன­ரான அவ­ரது நட­வ­டிக்­கை­களை மையப்­ப­டுத்­தியும் அவ­ரையும் பொலிஸார் விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தினர். பண்­டா­ர­கம பொலிஸ் நிலையம் அழைக்­கப்­பட்ட அவ­ரிடம் சுமார் 5 மணி நேரம் பொலிஸார் வாக்கு மூலம் பெற்ற பின்னர் விடு­வித்­தனர்.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே பொலிஸ் பொறுப்பில் எடுக்­கப்­பட்ட ஐவர் தொடர்­பிலும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த போது, ஆயி­ஷா­வுக்கு என்ன நடந்­தது என்­பதை பொலி­ஸாரால் வெளிப்­ப­டுத்த முடிந்­தது. அந்த ஐவரில், ஆயிஷா காணாமல் போனது முதல் ஜனாஸா மீட்­கப்­படும் வரையில் ஆயி­ஷாவை தேடும் பணியில் மும்­மு­ர­மாக இருந்த ஒருவர் ஊடா­கவே அந்த தகவல் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

அந்த நபர், ஆயிஷா காணாமல் போன தினத்தில், நேரத்தில், ஆயிஷா ஆபத்தை எதிர் நோக்­கி­ய­தாக பொலிஸார் சந்­தே­கிக்கும் 100 மீற்றர் எல்­லை­யி­லேயே இருந்தார் என பொலிஸார் பதிவு செய்த வாக்கு மூலங்கள் சில­வற்றின் ஊடாக வெளிப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் அந்த சந்­தேக நப­ரிடம் விஷே­ட­மாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.
இதற்கு மேல­தி­க­மாக, ஆயி­ஷாவின் ஜனாஸா மீட்­கப்­பட்ட சதுப்பு நிலத்­துக்கு அருகே கீரை பாத்தி ஒன்­றினை வளர்த்­து­வந்த நபர் ஒருவர் உள்­ளிட்ட சிலரும் பொலிஸ் பொறுப்பில் இருந்­தனர்.

இந் நிலையில் ஆயிஷா காணாமல் போன­தாக பொலிஸார் நம்­பிய 100 மீற்றர் எல்­லையில் இருந்த சந்­தேக நபர், ஆயி­ஷாவின் தாய் வழி உற­வினர் என்­பதால் அவர் தொடர்பில் விஷேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டது.

இதன்­போது, அந்த சந்­தேக நபரின் கழுத்து பகு­தியை அவ­தா­னித்த விசா­ர­ணை­யா­ளர்கள், அதிலே நகக் கீறல் காயம் இருப்­பதைக் கண்டு, சந்­தே­கத்தை மேலும் அதி­க­ரித்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­லா­யினர்.

இந் நிலையில், தான் வச­மாக சிக்­கிக்­கொண்­டதை உணந்த சந்­தேக நபர், நடந்­த­வை­களை பொலிஸார் முன் ஒப்­பு­விக்கத் தொடங்­கி­ய­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

ஆம், அந்த சந்­தேக நபர் கொத்து தயா­ரிக்கும் ஒருவர். பர­வ­லாக அவரை ஊர் மக்கள் ‘கொத்து பாஸ்’ எனும் பெய­ரிலும், ‘பல்லிக் குட்டி’ எனும் பெய­ரிலும் அறிந்­தி­ருந்­தனர். அவ­ரது பெயர் மொஹம்மட் பாரூக். வயது 28. மூன்று பெண் பிள்­ளை­களின் தந்தை.
ஆயி­ஷாவும் சந்­தேக நபரின் மூத்த மகளும் நண்­பிகள். அடிக்­கடி ஒன்­றாக கூடி விளை­யா­டு­ப­வர்கள். இவ்­வா­றான நிலை­யி­லேயே சந்­தேக நபர் ஆயி­ஷாவை கடத்தி கொலை செய்­துள்­ளமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. இத­னை­விட சந்­தேக நபரும் போதைப் பொருள் பாவனை பழக்­கத்­தினை உடை­யவர் என பொலிஸ் தரப்பு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

பொலிஸார் சந்­தேக நபரை விசா­ரிக்க ஆரம்­பித்த போது, சந்­தேக நபர் நடந்­த­வை­களை ஒப்­பு­வித்­துள்ளார். (பொலிஸ் தக­வல்கள் படி அந்த ஒப்­பு­வித்தல் சுருக்­க­மாக வரு­மாறு)
‘சேர்…. நான் உண்­மையை சொல்­கிறேன்…. ஆயிஷா எனது மக­ளுடன் விளை­யாடும் போதே நான் அவள் மீது ஆசைப்­பட்­டுள்ளேன்… எனினும் எனது எண்­ணப்­படி நடந்­து­கொள்­வ­தற்­கான சந்­தர்ப்பம் எனக்கு கிடைத்­தி­ருக்­க­வில்லை.

அன்று ஆயிஷா கோழிக் கடைக்கு வந்த போது நான் அவளை அவ­தா­னித்தேன். அப்­போது நான் ஐஸ் போதைப் பொரு­ளினை பயன்­ப­டுத்­தி­விட்டு கோழிக் கடையின் அருகே இருந்தேன். ஆயிஷா கோழி இறைச்சி வாங்­கிக்­கொண்டு திரும்­பு­வ­தற்குள் நான் வேக­மாக வந்து, சதுப்பு நில பகு­திக்குள் செல்லும் வழி அருகே ஆயி­ஷா­வுக்­காக காத்­தி­ருந்தேன். அவள் அந்த பாதை வழியே வந்த போது அவளை காட்டுப் பகு­திக்குள் இழுத்துச் சென்றேன். அவள் உடலை தொடும் போது அவள் கடும் எதிர்ப்புக் காட்­டினாள். சப்­த­மிட்டு அழுதாள்.

‘என்னை விட்டு விடுங்கள் மாமா… நான் வீட்­டுக்கு போக வேண்டும்… என்னை விடுங்கள் மாமா…” என அவள் கூக்­கு­ர­லிட்டாள்.

இதனால் உட­ன­டி­யாக எனது தோளில் இருந்த சாரத் துணியை கிழித்து அவ­ளது வாயில் அடைத்தேன். அவள் போரா­டினாள். கை கால்­க­ளையும் கட்­டினேன். அவள் மயக்க முற்றாள்.

எனக்கு பயம் வந்­தது. அவளை அப்­ப­டியே விட்டுச் சென்றால், வெளியே சென்று என்னை காட்டிக் கொடுத்­து­வி­டுவாள் என நான் எண்­ணினேன். அவ­ளுக்கு என்னை நன்­றாக தெரியும் என்­பதால் எனக்கு அப்­போது அந்த பயம் ஏற்­பட்­டது. அவளை மேலும் சில மீற்­றர்கள் இழுத்துச் சென்று சதுப்பு நிலத்தின் சேற்­றுக்குள் வீசினேன்.

சத்­தி­ய­மாக… நான் அவளை வன்­பு­ணர்வு செய்­ய­வில்லை. அவள் ஆடை­களைக் கூட என்னால் கழற்ற இய­ல­வில்லை…” என சந்­தேக நபர் குறிப்­பிட்­டுள்ளார்.
இதன்­போது அப்­ப­டி­யானால் ஆயிஷா எப்படி இறந்தார்… எவ்­வாறு கொலை செய்தாய் என பொலிஸார் சந்­தேக நபரை குடைந்­தனர்.

‘ சேர்… சதுப்பு நில சேற்றில் ஆயி­ஷாவின் முகத்தை அமிழ்த்தி அவளின் உடலின் முது­குப்­ப­கு­தியில் எனது முழங்­கா­லினால் ஊன்றிப் பிடித்தேன். அவள் இறந்­து­விட்டாள். பின்னர் சேற்­றுக்குள் அவளை மறைத்­து­விட்டு, எனது காலடி தடங்­க­ளையும் அழித்­து­விட்டு எதுவும் தெரி­யா­தது போல் சென்றேன். வீடு சென்று குளித்­து­விட்டு பள்­ளிக்குச் சென்றேன். ஆயி­ஷாவை அனை­வரும் தேடும் போது நானும் சேர்ந்து தேடினேன். எனினும் எனது மன­துக்குள் பயம் இருந்­து­கொண்டே இருந்­தது. நீங்கள் என்னைப் பிடித்­து­விட்­டீர்கள்” என சந்­தேக நபர் பொலி­ஸா­ரிடம் கூறி­யுள்ளார்.

எனினும் அவ­னது வாக்கு மூலத்தை மட்டும் முழு­மை­யாக நம்ப தயா­ராக இருக்­காத பொலிஸார், சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்­கைக்­காக காத்­தி­ருந்­தனர்.
பாணந்­துறை வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­திய நிபுணர் எச்.கே.ஜே.விஜே­வீர, உத்­பல ஆட்­டி­கல உள்­ளிட்ட மூவர் கொண்ட சிறப்புக் குழு நீதி­மன்ற கட்­டளை படி பிரேத பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுத்­தது.

மே 30 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை சட்­ட­வைத்­திய நிபு­ணர்கள் மூவரை உள்­ள­டக்­கிய சிறப்பு குழுவால் இந்த பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பித்த பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் சுமார் 04 மணிநேரம் நீடித்து பிற்பகல் 01.30 மணியளவில் நிறைவுற்றிருந்தது.

பிரேத பரிசோதனை பிரகாரம் சிறுமியின் மரணத்திற்கு வாய், மூக்கு வழியே சேறு, நீர் என்பன உட்சென்று நுரையீரல் மற்றும் உடல் உள்ளுறுப்புக்களில் கலந்தமையே பிரதான காரணம் என சட்ட வைத்திய அதிகாரிகள் குழாம் தீர்மானித்துள்ளது. அது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பித்துள்ள அந்த குழாம் சிறுமி பாலியல் வன்புணர்விற்கு உள்ளாகவில்லை என்பதை உறுதி செய்துள்ளதுடன், சிறுமியின் உடலில் ஒரேயொரு காயத்தை மட்டும் அடையாளமிட்டுள்ளனர். அது சிறுமியின் வாய் பகுதியில் அடையாளம் காணப்பட்ட காயம் என அறிக்கை ஊடாக அறிய முடிகிறது.

இந் நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையும் சந்தேக நபரின் வாக்கு மூலமும் பொருந்துவதை அவதானித்த பொலிஸார், அவரை பிரதான சந்தேக நபராக அறிவித்து, பாணந்துறை நீதிவான் ஜயருவன் திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர் செய்து 48 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை நடாத்தினர்.
பின்னர், சந்தேக நபருக்கு எதிராக மனிதப் படுகொலை, கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தமை, திட்டமிட்டு அசௌகரியம் ஏற்படுத்தியமை, காயம் ஏற்படுத்தியமை மற்றும் திட்டமிட்டு பலாத்காரம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை முன் வைத்து சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

ஜனாஸா நல்­ல­டக்கம்
பிரேத பரி­சோ­த­னை­களைத் தொடர்ந்து திங்கட் கிழமை மாலை சிறுமி ஆயி­ஷாவின் ஜனாஸா உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. ஜனாஸா அட்­டு­ளு­க­மைக்கு கொண்­டு­வ­ரப்­ப­டு­வதை அறிந்த மக்கள் பெருந்­தி­ர­ளாக அட்­டு­ளு­கம பெரிய பள்­ளி­வா­சலில் ஒன்­று­கூ­டினர். சகோ­தர இன மக்­களும் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர். எனினும் ஜனாஸா வந்து சேர மாலை­யா­கி­விட்­டது. பின்னர் மஹ்ரிப் தொழு­கையைத் தொடர்ந்து ஜனாஸா நல்­ல­டக்கம் இடம்­பெற்­றது. ஜனாஸா தொழு­கைக்கு முன்னர் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் அங்கு கூடி­யி­ருந்த பொது மக்கள் மத்­தியில் உரை­யாற்­றினார்.

ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட இடம்

 

“ இந்த ஊரிலோ இந்த நாட்­டிலே இதன் பிற்­பாடு இவ்­வா­றான எந்­த­வொரு சம்­ப­வங்­களும் இடம்­பெறக் கூடாது என்ற செய்­தி­யையே இந்த ஜனாஸா எமக்குச் சொல்­கி­றது. இந்த சிறு­மியின் குடும்­பத்­திற்கு அல்லாஹ் உயர்ந்த கூலியை வழங்­கு­வா­னாக. ஊரின் உல­மாக்கள் மற்றும் பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் ஜனா­ஸாவை அனை­வ­ருக்கும் காண்­பிக்க வேண்டும், அது அனை­வ­ருக்கும் ஒரு படிப்­பி­னை­யாக அமையும் என விரும்­பி­னார்கள். எனினும் ஜனாஸா வெளியில் காண்­பிக்கக் கூடிய நிலையில் இல்லை. எனவே ஜனா­ஸாவை பார்ப்­பதை விடுத்து அதற்­கா­கவும் சிறு­மியின் குடும்­பத்­திற்­கா­கவும் நாம் அனை­வரும் பிரார்த்­திப்போம். நிச்­ச­ய­மாக இந்த சிறுமி சுவ­னத்­தி­லி­ருந்து நம் அனை­வ­ரையும் எதிர்பார்த்துக் கொண்­டி­ருப்பார். இந்த அநி­யா­யத்தை இழைத்­த­வ­ருக்கு சட்ட ரீதி­யாக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். எனவே நாம் அனை­வரும் பொறு­மை­யாக இருப்­ப­துடன் எதிர்­கால நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். அத்­துடன் இந்த ஊரி­லி­ருந்தும் நாட்­டி­லி­ருந்தும் போதைப் பொருள் பாவ­னையை முற்­றாக ஒழிக்க நாம் பாடு­பட வேண்டும். பெண்­களும் சிறு­வர்­களும் பாது­காப்­பான முறையில் வெளியில் சென்­று­வரக் கூடிய நிலைமை இந்த ஊரிலும் நாட்­டிலும் ஏற்­பட வேண்டும் என நாம் பிரார்த்­திக்க வேண்டும்” என அவர் தனது உரையில் குறிப்­பிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஜனாஸா தொழுகை இடம்­பெற்­ற­துடன் ஜனாஸா நல்­ல­டக்­கமும் இடம்­பெற்­றது.

கோட்­டா­ கோ­கம பிர­தி­நி­திகள் விஜயம்
ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் கலந்து கொள்­வ­தற்­காக கொழும்பு காலி முகத்­தி­டலில் 50 நாட்­க­ளுக்கும் மேலாக போராட்­டத்தில் ஈடு­பட்டு வரும் கோட்­டா­கோ­கம பிர­தி­நி­தி­களும் கலந்து கொண்­டனர்.

கொழும்­பி­லி­ருந்து பஸ் ஒன்றில் பய­ணித்த இவர்­களில் பௌத்த, கிறிஸ்­தவ மத தலை­வர்­களும் சமூக செயற்­பாட்­டா­ளர்­களும் அடங்­கி­யி­ருந்­தனர். அட்­டு­ளு­கம பள்­ளி­வா­சலில் ஒன்­று­கூ­டிய இவர்கள் அங்கு குழு­மி­யி­ருந்த ஊரின் முக்­கி­யஸ்­தர்கள் மற்றும் பொது மக்கள் மத்­தியில் உரை­யாற்­றினர்.

இங்கு வருகை தந்திருந்த பௌத்த பிக்கு ஒருவர் உரையாற்றுகையில், பள்ளிவாசலுக்குள் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அட்டுளுகம பள்ளிவாசலுக்குள் இருக்கிறேன். இது எனது முதல் அனுபவம். அட்டுளுகமயில் ஆயிஷாவுக்கு நடந்த சம்பவம் இறுதியானதாக இருக்கவேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி ஒருபோதும் நடக்கக்கூடாது.

கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்ட பாத்­திமா ஆயி­ஷாவின் தாயாரைச் சந்­தித்து எமது அனு­தா­பங்­களைப் பகிர்ந்து கொண்டோம். நான் ஒரு­போதும் முஸ்லிம் பள்­ளி­வா­சல்­க­ளுக்குச் சென்­ற­தில்லை. இன்று சந்­தோ­ஷப்­ப­டு­கிறேன். இன்று இந்த பள்­ளி­வா­ச­லுக்குள் இருக்­கிறேன்.

நாங்கள் இலங்கை மக்கள் என்ற வகையில் அனை­வரும் ஒற்­றுமைப் பட­வேண்டும். சிங்­க­ள­வ­ராக இருந்­தாலும், முஸ்­லி­மாக இருந்­தாலும், தமி­ழ­ராக இருந்­தாலும் நாம் அனை­வரும் சகோ­த­ரர்­க­ளாக ஒற்­று­மை­யாக வாழ வேண்டும். உல­கத்­துக்கு உதா­ரண புரு­ஷ­ராக நாம் வாழ வேண்டும்.

நான் ஆர்ப்­பாட்ட பூமி­யி­லி­ருந்து உரை­யாற்­றி­ய­தற்­காக எனது தலைமை பிக்கு என்னை பன்­ச­லை­யி­லி­ருந்தும் வெளி­யேற்­றி­யுள்ளார். நான் எனது காவி­யு­டையை அனை­வ­ரையும் பாது­காப்­ப­தற்­கா­கவே பயன்­ப­டுத்­து­கிறேன். நாட்டில் நாம­னை­வரும் ஒன்­றி­ணைந்து இவ்­வா­றான சம்­ப­வங்­களைத் தடுப்­ப­தற்கு முன்­வ­ர­வேண்டும் என்றார்.

போராட்­டக்­கா­ரர்­களின் பிர­தி­நி­திகள் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மையும் சிறு­மியின் இல்­லத்­துக்கு விஜயம் செய்து ஆறுதல் கூறி­யி­ருந்­தனர்.
அத்துடன் கோட்டா கோ கமவிலும் இச்சம்பவத்தைக் கண்டித்து பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனா­தி­பதி அனு­தாபம்
அதே­போன்று ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்­சவும் தனது டுவிட்­டரில் அனு­தா­பத்தை வெளி­யிட்­டி­ருந்தார். “ஈவி­ரக்­க­மற்ற முறையில் கொல்­லப்­பட்ட சிறுமி பாத்­திமா ஆயி­ஷாவின் குடும்­பத்­தி­ன­ருக்கு எனது ஆழ்ந்த இரங்­க­லையும், அனு­தா­பங்­க­ளையும் தெரி­விக்­கின்றேன்.இந்த கொடூர குற்­றத்­திற்கு அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறு­தி­ய­ளிக்­கிறேன். சிறுமி ஆயிஷா சுவர்க்கம் செல்ல எனது பிரார்த்­த­னைகள்” என அவர் அதில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அர­சி­யல்­வா­திகள் விஜயம்
அர­சியல் கட்சித் தலை­வர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­மான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன் ஆகி­யோரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஜித் பி பெரேரா உட்­பட பல உள்ளுர் அர­சியல் பிர­மு­கர்­களும் சிறு­மியின் இல்­லத்­துக்கு விஜயம் செய்து தமது அனு­தா­பங்­களை தெரி­வித்­தனர்.

சிறுமியின் தாய்க்கு ஆறுதல் கூறும் ரவூப் ஹக்கீம்

அத்­துடன் சிறு­மியின் கொலையை வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தா­கவும் நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும் எனவும் பல அர­சியல் பிர­மு­கர்கள் அறிக்­கை­களை வெளி­யிட்­டி­ருந்­தனர்.

அட்­டு­ளு­க­மவில் ஆர்ப்­பாட்டம்
சிறுமி கொல்­லப்­பட்ட சம்­ப­வத்தைக் கண்­டித்தும் போதைப் பொருள் விற்­பனை மற்றும் பாவ­னைக்கு எதி­ரா­கவும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அட்­டு­ளு­கம பிர­தேச மக்­களால் ஆர்ப்­பாட்டம் ஒன்று நடாத்­தப்­பட்­டது. இதன்­போது பிர­தேச மக்கள் குற்­ற­வா­ளிக்கு உச்­ச­பட்ச தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்றும் போதைப் பொருள் பாவ­னையை பிர­தே­சத்­தி­லி­ருந்து முற்­றாக ஒழிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்­தனர்.

மேலும் சில சம்­ப­வங்கள் பதிவு
இத­னி­டையே கடந்த மே 23ஆம் திகதி அம்­பாறை மாவட்­டத்தின் அட்­டா­ளைச்­சேனை பிர­தே­சத்தில் 11 வயது சிறுமி ஒருவர் அவ­ரது உற­வி­னர்­க­ளான இரு இளை­ஞர்­களால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்ள சம்­பவம் அனை­வ­ரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது. இது தொடர்பில் இரு சந்­தேக நபர்­களும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அதே­போன்று வவு­னி­யாவில் 16 வயது மாண­வியின் சடலம் ஒன்று கிணற்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்ட சம்­ப­வமும் பதி­வா­கி­யுள்­ளது. வவு­னியா, நெளுங்­குளம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கணே­ச­புரம் 08 ஆம் ஒழுங்­கையில் சந்­தே­கத்­திற்­கி­ட­மான முறையில் உயி­ரி­ழந்த 16 வயது மாண­வியின் மரணம் கொலையா? தற்­கொ­லையா என்­பது தொடர்பில் வெளிப்­ப­டுத்த விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நிஹால் தல்­துவ தெரி­வித்தார். இந் நிலையில் அது குறித்து தெளி­வாக வெளிப்­ப­டுத்­திக்­கொள்ள வவு­னியா வைத்­தி­ய­சா­லையின் நேற்று மாண­வியின் சடலம் மீது பிரேத பரி­சோ­த­னைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனினும் இச் செய்தி அச்­சுக்குச் செல்லும் வரை அதன் முடி­வுகள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

எவ்­வா­றா­யினும் இது­வரை பொலிஸார் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில், மேல­திக வகுப்­புக்குச் சென்ற மாணவி அவ­ரது தோழி­க­ளுடன் வீடு நோக்கி வந்­துள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நிஹால் தல்­துவ குறிப்­பிட்டார். எவ்­வா­றா­யினும் வீட்­டி­லி­ருந்து சிறிது தூரத்தில் சிறு காட்டுப் பகு­தியில் மாண­வியின் புத்­த­கங்கள், காலணி என்­பன மீட்­கப்­பட்­டுள்ள நிலையில், பின்னர் அதனை அண்­மித்த பகு­தியில் கிணற்­றி­லி­ருந்து அவரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது.

நாடெங்கும் அச்ச நிலை
சிறுமி ஆயிஷா கடத்திச் செல்­லப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்­தை­ய­டுத்து நாட்டின் பல பகு­தி­க­ளிலும் பெண் பிள்­ளை­களும் தாய்­மாரும் அச்­சத்தில் உறைந்­துள்­ளனர். இவ்­வாறு சிறு­வர்­களை இலக்கு வைத்த சம்­ப­வங்கள் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளைத் தொடர்ந்தே மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதன் காரணமாக சில பிரதேசங்களில் தனியார் வகுப்புகள், மத்ரஸாக்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

எவ்வாறிருப்பினும் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதிருப்பது தொடர்பில் பெற்றோரும் சமூக தலைவர்களும் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். குறிப்பாக பிரதேசம் தோறும் பள்ளிவாசல் சம்மேளனங்கள், நிர்வாகிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், உலமாக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து போதைப் பொருள் பாவனையை தடுக்கவும் இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெறாதிருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.