ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: கர்தினால் வத்திக்கானுக்கு சென்றதால் அறிக்கை சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது

முழுமையான அறிக்கை இல்லை என்கிறார் முஜிபுர்

0 434

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கு­மாறு ஒரு­வ­ரு­ட­மாக கேட்டும் அர­சாங்கம் தர­வில்லை.

ஆனால் கர்­தினால் மெல்கம் ரன்ஜித் சர்­வ­தே­சத்­துக்கு இந்த பிரச்­சி­னையை கொண்டு செல்­வ­தாக தெரி­வித்­துடன் அறிக்கை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. என்­றாலும் முழு­மை­யான அறிக்கை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை என எதிர்க்­கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற நாட்டின் பொரு­ளா­தார நெருக்­கடி, ஈஸ்டர் தாக்­குதல் விசா­ரணை தொடர்­பாக எதிர்க்­கட்சி கொண்­டு­வந்­தி­ருந்த சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,
ஈஸ்டர் தாக்­கு­தலை மேற்­கொண்ட சஹ்ரான் தொடர்­பாக விசா­ர­ணை­களை பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்­வாவே முன்­னெ­டுத்­து­வந்தார். என்­றாலும் நாமல் குமார என்ற நபர், முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் தற்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷ் ஆகி­யோரை கொலை செய்ய பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா சதித்திட்டம் மேற்­கொண்­டு­வ­ரு­வ­தாக தெரி­வித்த முறைப்­பாட்­டுக்­க­மைய நாலக்க சில்வா கைது­செய்­யப்­பட்டு தடுத்­து­வைக்­கப்­பட்டார்.

ஆனால் ஈஸ்டர் தாக்­குதல் இடம்­பெ­றும்­வரை நாலக்­க­சில்வா அடைக்­கப்­பட்டார். இறு­தியில் சஹ்­ரானை கைது­செய்ய பின்­தொ­டர்ந்த பிரதி பொலிஸ்மா அதிபர் கைது­செய்­யப்­பட்டு தடுத்­து­வைக்­கப்­பட்டார். அத்­துடன் நாமல் குமார தெரி­வித்த முறைப்­பாட்­டுக்­க­மைய தொடுக்­கப்­பட்ட வழக்கு விசா­ர­ணைக்கு என்ன நடந்­தது என தெரி­யாது. கொலை அச்­சு­றுத்தல் தொடர்பில் நாமல் குமார தெரி­வித்த முறைப்­பாடு தொடர்­பா­கவும் அர­சாங்கம் மறந்­துள்­ளது.

அத்­துடன் ஈஸ்டர் தாக்­குதல் தொடர்­பாக விசா­ரணை மேற்­கொண்டு அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கு­மாறு ஒரு­வ­ரு­ட­மாக நாங்கள் அர­சாங்­கத்­திடம் கோரி வந்தோம். கார்த்­தி­னாலும் அர­சாங்­கத்­திடம் கேட்­டி­ருந்தார். ஆனால் அர­சாங்கம் அதனை மறுத்­து­வந்­தது. என்­றாலும் அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களில் திருப்தி இல்­லா­த­தனால் இது­தொ­டர்­பாக சர்­வ­தே­சத்­துக்கு முறைப்­பாடு செய்­வ­தாக கர்­தினால் மெல்கம் ரன்ஜித் தெரி­வித்­தி­ருந்தார். தற்­போது கர்­தினால் வத்­தி­கா­னுக்கு சென்­றுள்ளார். அதனால் அர­சாங்கம் அச்­சப்­பட்டு தற்­போது ஈஸ்டர் தாக்­குதல் விசா­ரணை அறிக்­கையை பாரா­ளு­மன்ற நூல­கத்­துக்கு கைய­ளித்­தி­ருக்­கின்­றது.

மேலும் ஈஸ்டர் தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணை­களை ஆரம்­பத்தில் இருந்து மேற்­கொண்­டு­வந்­தது, குற்­றப்­பு­ல­னாய்வின் ரவி சென­வி­ரத்ன மற்றும் ஷானி அபே­சே­கர ஆகி­யோ­ராகும். இவர்­க­ளுடன் 19பேர் இடம்­பெற்­றி­ருந்­தனர். ஆனால் 19பேரையும் அர­சாங்கம் இட­மாற்­றி­யி­ருக்­கி­றது. அத்­துடன் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு பணிப்­பா­ளர்­க­ளாக 6மாதத்­துக்கு ஒருவர் என இது­வரை 6பேர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் சஹ்­ரா­னுக்கு மேலாக ஒருவர் இருப்­ப­தா­கவும் அந்த நபர் யார் என்தை அறிந்­து­கொள்­ளும்­வரை நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் தொடர்ந்து இருக்­கின்­றது என ரவி சென­வி­ரத்ன பகி­ரங்­க­மாக தெரி­வித்­தி­ருந்தார். அவரின் விசா­ர­ணையின் தற்­போ­தைய நிலை என்ன என கேட்­கின்றோம். ஷானி அபே­சே­கர முன்­னுக்கு கொண்­டு­சென்ற விசா­ர­ணையை முன்­னுக்கு கொண்டு சென்­றார்­களா?. தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி ஒரு­வரை காலத்­துக்கு காலம் பெய­ரி­­டவே விசா­ரணை அதிகாரிகளை அரசாங்கம் மாற்றி வந்திருக்கின்றது.

அத்துடன் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் விசாரணை அறிக்கை முழுமையான அறிக்கை அல்ல என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்திருக்கின்றார். அப்படியாயின் ஏன் முக்கியமான சாட்சியங்கள் அடங்கிய அறிக்கைகளை மறைத்துக்கொண்டே பாராளுமன்றத்துக்கு அறிக்கையை சமர்ப்பித்திருக்கவேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.