சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்க ஆட்சேபனை இல்லை

சட்டமா அதிபர் அறிவித்தார்; நீதிமன்ற தீர்மானம் திங்களன்று

0 249

( எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களை தொடர்ந்து கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்வை பிணையில் விடு­விப்­பதா என்­பது தொடர்­பி­லான தீர்­மானம் மேன் முறை­யீட்டு நீதி­மன்றால் எதிர்­வரும் 7 ஆம் திகதி திங்­க­ளன்று அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

தனக்கு பிணை­ய­ளிக்க முடி­யாது என புத்­தளம் மேல் நீதி­மன்றம் கடந்த 2021 நவம்பர் மாதம் வழங்­கிய உத்­த­ரவை திருத்தி தன்னை பிணையில் விடு­விக்­கு­மாறு கோரி, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் சார்பில் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட சீராய்வு மனு நேற்று (2) நகர்த்தல் பத்­திரம் ஊடாக விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது.

மேன் முறை­யீட்டு நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான மேனகா விஜே­சுந்­தர மற்றும் நீல் இத்­த­வல ஆகியோர் முன்­னி­லையில் இவ்­வாறு அந்த சீராய்வு மனு விசா­ர­ணைக்கு வந்­தது. ஏற்­க­னவே இந்த சீராய்வு மனு கடந்த ஜன­வரி 20 ஆம் திகதி விசா­ர­ணைக்கு வந்த போது, ஹிஜா­சுக்கு பிணை­ய­ளிக்க சட்ட மா அதிபர் ஆட்­சே­பனை தெரி­விக்கப் போவ­தில்லை எனவும் கடந்த ஜன­வரி 28 ஆம் திகதி இடம்­பெற்ற வழக்கு விசா­ர­ணை­களை தொடர்ந்து, அவ்­வ­ழக்கின் பிர­தி­வாதி ஹிஜாஸ் சார்பில் பிணைக் கோரிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­விக்­காமல் இருக்க சட்ட மா அதிபர் தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் அன்­றைய தினம் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது.

எனினும் கடந்த 28 ஆம் திகதி, புத்­தளம் மேல் நீதி­மன்றம் ஹிஜாஸ் சார்பில் முன் வைக்­கப்­பட்ட பிணைக் கோரிக்­கையை, மீண்டும் நிரா­க­ரித்து உத்­த­ர­விட்­டது. பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ், மேல் நீதி­மன்­றத்­துக்கு பிணை வழங்­கு­வ­தற்கு அதி­கா­ர­மில்­லை­யென்ற நிலைப்­பாட்டில் இதற்கு முன்னர் கடந்த 2021 நவம்பர் மாதம் ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு பிணை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால், அதே நிலைப்­பாட்டில் பிணையை மீள நிரா­க­ரிப்­ப­தாக நீதி­பதி குமாரி அபே­ரத்ன அறி­வித்­தி­ருந்தார்.
இந் நிலை­யி­லேயே, சீராய்வு மனு நேற்று ( 2) நகர்த்தல் பத்­திரம் ஊடாக விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது.

இதன்­போது சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா மன்றில் ஆஜ­ரானார்.

‘கனம் நீதி­ப­தி­களே, கடந்த 28 ஆம் திகதி புத்­தளம் நீதி­மன்றில் எனது சேவை பெறு­ந­ருக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது. இதன்­போது எனது சேவை பெறுநர் சார்பில் பிணை கோரிக்கை முன் வைக்­கப்­பட்­டது. சட்ட மா அதி­பரும் பிணைக்கு ஆட்­சே­ப­னைகள் எத­னையும் முன் வைக்­க­வில்லை. அவ்­வா­றான நிலை­யிலும், மேல் நீதி­மன்ற நீதி­ப­தியால் பிணைக் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் பிணை­ய­ளிக்கும் அதி­காரம் மேல் நீதி­மன்­றுக்கு இல்லை எனவும் அதற்­கான அதி­காரம் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கே உள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்டி மேல் நீதி­மன்ற நீதி­ப­தியால் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.
எவ்­வா­றா­யினும் எனது சேவை பெறு­நரை பிணையில் விடு­விக்க மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு அதி­காரம் உள்ள நிலையில், அவரை பிணையில் விடு­வித்து உத்­த­ர­வி­டு­மாறு கோரு­கிறேன்.’ என ஜனா­தி­பதி சட்டத்தரணி வாதிட்டார்.

இதன்­போது மனுவின் பிர­தி­வா­தி­யான சட்ட மா அதி­ப­ருக்­காக மன்றில் ஆஜ­ரா­கிய மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ரொஹந்த அபே­சூ­ரிய, ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு பிணையளிக்க சட்ட மா அதிபருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என குறிப்பிட்டார்.
இந் நிலையில் இரு தரப்பு விடயங்களை ஆராய்ந்த மேன் முறையீட்டு நீதிமன்றம், இந்த பிணைக் கோரிக்கை குறித்த மேன் முறையீட்டு நீதிமன்றின் உத்தரவை எதிர்வரும் 7 ஆம் திகதி திங்களன்று வழங்குவதாக அறிவித்தது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.