சிங்கள நோயாளிகளினதும் எனது சமூகத்தினதும் பிரார்த்தனைகளால் அல்லாஹ் என்னைப் பாதுகாத்தான்

முதன் முறையாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டார் டாக்டர் ­சாபி

0 705

ஆங்கிலத்தில்: நமினி விஜே­தாச
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்

“சிறைக்­கூ­டத்தில் 1.5 லீற்றர் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்­த­லொன்­றினை வைத்­தி­ருப்­ப­தற்கு அனு­ம­தித்­தார்கள். அங்கு எவ­ருக்கும் தலை­யணை வழங்­கப்­ப­ட­வில்லை. என்னால் தரை­யி­ல் தலையை வைத்து தூங்க முடி­யாது. அதனால் பிளாஸ்ரிக் போத்­தலில் தண்­ணீரை நிரப்பி பின்பு சிறிது தண்­ணீரை குறைத்­து­விட்டால் அந்தப் போத்தல் நெகிழக் கூடி­ய­தாக இருக்கும். நான் இந்த பிளாஸ்ரிக் தண்ணீர் போத்­த­லையே தலை­ய­ணை­யாகப் பாவித்து 46 நாட்கள் சி.ஐ.டி.யில் உறங்­கி­யி­ருக்­கிறேன். அது எனக்கு பழக்­கப்­பட்­டு­விட்­டது.”

டாக்டர் சாபி சிஹாப்­தீ­னுக்கு கடும் சோதனை 2019 மே மாதம் 23 ஆம் திகதி ஆரம்­ப­மா­னது. டாக்டர் சாபிக்கு எதி­ராக சிங்­கள மொழி பத்­தி­ரி­கை­யொன்று முன்­பக்­கத்தில் தலைப்புச் செய்­தி­யொன்­றினை வெளி­யிட்­டது. டாக்டர் சாபி சிஹாப்தீன் தேசிய தௌஹீத் ஜமா­அத்தின் உறுப்­பினர் எனவும் அச்­செய்தி குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தது. இந்த தேசிய தௌஹீத் ஜமா அத் குழு­வி­னரே உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தலை நடத்­தினர். அத்­தோடு டாக்டர் சாபி 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு சிகிச்­சை­யின்­போது கருத்­தடை செய்­த­தா­கவும் அச்­செய்தி குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தது.

டாக்டர் சாபி சிஹாப்தீன் சிறை வைக்­கப்­பட்­டி­ருந்து பிணையில் விடு­தலை செய்­யப்­பட்ட பின்னர் முதன் முறை­யாக ஊட­க­மொன்­றுக்கு பேசு­வது இப்­போ­துதான். அவரும், அவ­ரது குடும்­பத்­தி­னரும் நீண்ட காலம் பொறு­மை­யுடன் இந்த நெருக்­கு­தல்­களை சகித்துக் கொண்­டி­ருந்­த­மையை அவர் விளக்­கினார். என்னை இறை­வனும் பொறு­மையும், நிதா­ன­மு­முள்ள சிங்­கள மக்­களின் பிரார்த்­த­னை­களும், சமூ­கத்தின் துஆ பிரார்த்­த­னை­க­ளுமே பாது­காத்­தன என்றார் டாக்டர் சாபி.

சாபி சிஹாப்தீன் பெண்­களின் இனப் பெருக்க சுகா­தாரம் தொடர்­பான சிரேஷ்ட வைத்­திய அதி­கா­ரி­யாவார். 2015 ஆம் ஆண்டு இவர் பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியில் போட்­டி­யி­டு­வ­தற்­காக தான் சுகா­தார அமைச்சில் வகித்த பத­வி­யி­லி­ருந்தும் இரா­ஜி­னாமா செய்தார். ஆனால் அவரால் பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த இய­லா­மற்­போ­னது.

தனது பத­விக்­கா­லத்தில் தான் 8000 பெண்­க­ளுக்கு சிசே­ரியன் அறுவைச் சிகிச்சை செய்­துள்­ள­தாக தேர்­த­லுக்கு முன்னர் டாக்டர் சாபி ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் தெரி­வித்­தி­ருந்தார். அவர்­களில் 4000 பேருக்கு அவர் கருத்­தடை சிகிச்சை மேற்­கொண்­ட­தாக குறித்த சிங்­களப் பத்­தி­ரிகை குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தது. இந்தக் குற்­றச்­சாட்­டுக்கள் கோமா­ளித்­த­ன­மா­ன­வை­யென அநே­க­மான வைத்­தி­யர்கள் கருத்துத் தெரி­வித்­துள்­ளனர். சில மருத்­துவ நிபு­ணர்கள் இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களை பகி­ரங்­க­மா­கவே சவா­லுக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

டாக்டர் சாபி சிஹாப்தீன் கலா­வெவ எனும் முஸ்லிம் கிரா­மத்தைச் சேர்ந்­தவர். இக்­கி­ராமம் அனு­ரா­த­புர மாவட்­டத்தில் மிகவும் பெரிய மற்றும் தொன்­மை­யான முஸ்லிம் குடி­யேற்­ற­மாகும். அவ­ரது பாட்­டனார் அக்­கி­ரா­மத்தின் முதல் அர­சாங்க உத்­தி­யோ­கத்­த­ராவார். பாட்­டனார் விஜி­த­புர ரஜ­மகா விகா­ரையின் இளம் பௌத்த பிக்­கு­க­ளுக்கு பாலி மொழியைக் கற்­றுக்­கொ­டுத்­தவர். டாக்டர் சாபியின் தந்தை பாட­சாலை அதிபர். அவ­ரது தாயார் குடும்­பத்­த­லைவி.

மூன்று பிள்­ளை­களில் இளை­ய­வ­ரான இவர் டாக்டர். இவ­ரது சகோ­த­ரியும் ஒரு டாக்டர். சகோ­தரர் கணக்­கா­ள­ராவார். ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தில் மருத்­துவ பீடத்தில் கல்வி கற்று மருத்­து­வ­ராக வெளி­யே­றினார். 2003 இல் இமாரா என்ற பெண்ணை மணந்து கொண்டார். இமா­ராவும் ஒரு வைத்­தி­ய­ராவார். அத்­தோடு பல்­க­லைக்­க­ழ­கத்தில் அவ­ரது ஜூனி­ய­ரு­மாவார். திரு­ம­ணத்தின் பின் மனை­வியின் பிர­தே­ச­மான – குரு­நா­கலில் அவர்கள் தங்கள் வாழ்க்­கையை ஆரம்­பித்­தனர்.

டாக்டர் சாபி 2004 இல் சுகா­தார அமைச்சில் இணைந்து கொண்டு மத்­திய மாகா­ணத்தில் கட­மை­யாற்­றினார். அவர் தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தற்­காக தனது பத­வியை இரா­ஜி­னமாச் செய்த போது தம்­புள்ளை வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்தார். அத்­தோடு தனியார் வைத்­திய சேவை­யையும் ஆரம்­பித்து நடத்­தினார். குரு­நாகல் நக­ரத்தில் வைத்­திய ஆய்வு கூட­மொன்­றி­னையும் ஸ்தாபித்து நடத்­தினார். அத்­தோடு வாகன வர்த்­தகம் மற்றும் ஆடைத் தொழிற்­து­றை­யிலும் ஈடு­பட்டார்.

அவர் தனது மூன்று நண்­பர்­க­ளுடன் இணைந்து குரு­நாகல் நகரில் சொத்து ஒன்­றினைக் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக உடன்­ப­டிக்கை யொன்றில் கைச்­சாத்­திட்டார். நண்­பர்கள் பல மில்­லியன் ரூபாய்­களை டாக்டர் சாபியின் வங்கிக் கணக்கில் வைப்­பி­லிட்­டனர். இக் காலப்­ப­கு­தி­யில்தான் டாக்டர் சாபி கைது செய்­யப்­பட்டார். தற்­போது இந்தப் பணம் சி.ஐ.டியி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் விசா­ர­ணையின் இலக்­காக மாறி­யுள்­ளது.
தேர்­தலில் டாக்டர் சாபி 54000 வாக்­கு­களைப் பெற்றுக் கொண்­டாலும் அவ்­வாக்­குகள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியைப் பெற்றுக் கொள்ளப் போது­மா­ன­தாக இருக்­க­வில்லை.

தேர்தல் நடை­பெற்று 16 மாதங்­களின் பின்பு சுகா­தார அமைச்சு டாக்டர் சாபி­யையும் மேலும் இரு­வ­ரையும் மீண்டும் சேவையில் இணைத்­தது. டாக்டர் சாபி 2018 பெப்­ர­வரி முதல் 2019 மே மாதம் வரை குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்­த­போதே கைது செய்­யப்­பட்டார்.

2019 ஆம் ஆண்டு தற்­கொலைக் குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெற்­றது முதல் எல்லாப் பகு­தி­க­ளிலும் முஸ்­லிம்கள் மத்­தியில் பதற்­ற­நி­லைமை உரு­வா­கி­யி­ருந்­தது. பிர­ப­ல­மான முஸ்லிம் சமூக தலை­வர்கள் ஆதா­ர­மற்ற, சந்­தே­கத்­துக்­கி­ட­மான விட­யங்­க­ளுக்­காக குற்றம் சுமத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்­டனர். சிலர் விடு­தலை செய்­யப்­ப­டும்­வரை தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டனர். தான் இலக்கு வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக வதந்­திகள் பர­வு­வதை டாக்டர் சாபி சிஹாப்தீன் அறிந்து கொண்டார். அவ­ரது மனைவி நாட்­டை­விட்டு வெளி­யேறி நிலைமை சீரா­னதும் மீண்டும் நாடு திரும்­பலாம் எனக் கூறி­யி­ருந்தார்.

“நான் மிகவும் பீதி­ய­டைந்­தி­ருந்தேன். ஏன் என்னை கைது செய்­ய­வேண்டும்” என எனக்கு நானே கேள்­வி­யெ­ழுப்­பிக்­கொண்டேன்’’

நான் எனது நாட்டை விட்டும் வெளியில் சென்று வாழ விரும்­ப­வில்லை. ஏனென்றால் எனது நாட்டின் மீது நான் மிகவும் அன்பு செலுத்­து­கிறேன். ஏற்­க­னவே நாட்­டி­லி­ருந்தும் வெளி­யேறி வேறு நாடொன்றில் வாழ்­வ­தற்கு எனக்குப் பல சந்­தர்ப்­பங்கள் கிடைத்­தன.
இன்­றும்­கூட ஏழை நோயா­ளர்­களின் ஆசி­களும், பிராத்­த­னை­க­ளுமே என்னைப் பாது­காத்­தன, காப்­பாற்­றின என என்­னால்­கூற முடியும். ஏனென்றால் அவர்­க­ளுக்­காக நான் கடு­மை­யாக உழைத்தேன். துன்­பங்­க­ளினால் நோயினால் கஷ்­டப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் ஒரு­வரின் வேத­னை­களைத் தீர்த்து வைத்தால் அவர் தனது மன­தினால் எங்­க­ளுக்குப் பிரார்த்­திப்பார்.

‘கட­மைக்குச் செல்­வது, கட­மையை நிறை­வேற்­று­வது அதன்­பின்பு வெளி­யே­று­வது’ இதுதான் டாக்டர் சாபி சிஹாப்­தீனின் கொள்கை. அவர் வீண் பேச்­சுக்­களில் தனது நேரத்தைச் செல­வி­ட­மாட்டார்.

வைத்­தி­ய­சாலை பணி­யா­ளர்கள் ஸ்கேன், பரி­சோ­த­னைகள், சத்­தி­ர­சி­கிச்சை என்­ப­ன­வற்­றுக்­காக ‘சாபி மஹத்­தயா’ வையே நாடிச் செல்­வார்கள்.

செல்­வாக்­குள்ள சிலர் டாக்டர் சாபியை போலி­யான அரு­வ­றுக்­கத்­தக்க வகையில் விமர்­சிக்க ஆரம்­பித்­தனர். சில சந்­தர்ப்­பங்­களில் வார்த்­தைகள் பரி­மா­றப்­பட்­டன. அவர் பிடி­வா­தக்­காரர், எவ­ருக்கும் அடங்­கா­தவர் எனக் கரு­தப்­பட்டார்.

தன்­னைப்­பற்­றிய இந்த விமர்­சனம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், ‘நான் எவ­ருக்கும் தலை வணங்­கு­வ­தில்லை. எனது சொந்த கட­மை­யிலே நான் அக்­க­றை­யாக இருக்­கிறேன். என்­றாலும் இது இந்­த­ள­வுக்கு எனக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­து­மென நான் ஒரு போதும் நினைக்­க­வில்லை” என்றார்.

பத்­தி­ரி­கையில் செய்தி வெளி­வந்­ததைத் தொடர்ந்து டாக்டர் ஷாபி சட்­ட­வி­ரோத கருத்­த­டை­களில் ஈடு­ப­டு­வ­தாக பிர­பல மகப்­பேற்று வைத்­தியர் ஒருவர் முக­நூலில் குற்­றச்­சாட்­டொன்றை முன்­வைத்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்து டாக்டர் சாபி சிஹாப்­தீ­னுக்கு சமூக வலைத்­த­ளங்­களில் கொலை அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டது. மே 24 ஆம் திகதி அவர் கட­மைக்குச் செல்ல அச்­ச­முற்றார். வைத்­தி­ய­சாலை வளா­கத்­துக்கு வெளியே அவ­ருக்கு பாது­காப்பு வழங்க மறுக்­கப்­பட்­டது.

அன்று இரவு அவர் தனது 12 வயது மக­னுடன் பள்­ளி­வா­ச­லுக்குச் சென்­றி­ருந்தார். நோன்பு திறந்­ததன் பின்பே தொழு­கைக்­காக அங்கு சென்­றி­ருந்தார். அப்­போது அவ­ரது வீட்­டுக்கு பொலிஸார் வருகை தந்­துள்­ள­தாக தகவல் ஒன்று கிடைத்­தது. அவர் உடனே வீட்­டுக்குச் சென்றார். பொலி­ஸா­ருடன் பேசினார். தான் அநி­யா­ய­மான முறையில் இலக்கு வைக்­கப்­பட்­டி­ருப்­பதை விளக்­கினார். பொலிஸார் அவரை பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்துச் சென்­றனர். முக­நூலில் பொய்க் குற்­றச்­சாட்டை முன்­வைத்த வைத்­தி­ய­ருக்கு எதி­ராக முறைப்­பாட்டைப் பதிவு செய்­வ­தற்­கென்றே டாக்டர் ஷாபியை பொலிசார் அழைத்துச் சென்­றனர்.

பொலிஸ் நிலையம் சென்­றதும் டாக்டர் சாபி தனக்கு இழைக்­கப்­பட்ட அநீதி தொடர்பில் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டொன்­றினைப் பதிவு செய்­த­வற்கு முயற்­சித்தார். ஆனால் பொலி­ஸாரால் அவ­ரது முறைப்­பாடு ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. பொலிஸார் அவரை மீண்டும் வீட்­டுக்கு அழைத்துச் சென்­றனர். அங்கு டாக்­டரின் வீடு பொலி­ஸா­ரினால் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது. வீட்­டி­லுள்ள சிசி­ரிவி கம­ராவை செய­லி­ழக்கச் செய்­யு­மாறு பொலிஸார் உத்­த­ர­விட்­டனர். அவர்கள் பிள்­ளை­களின் கணி­னிகள், மடிக்­க­ணினி , சிறிய பெட்டி (Brief case) மற்றும் பழைய கைய­டக்கத் தொலை­பே­சிகள் என்­ப­ன­வற்றை கைய­கப்­ப­டுத்திக் கொண்­டனர். அவ­ரது மனை­வியின் குர்­ஆ­னைக்­கூட பொலிஸார் பிடுங்­கி­யெ­டுத்­தனர்.

பின்பு டாக்­டரை பொலிஸ் பாது­கா­வ­லுடன் பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்துச் சென்­றனர். சட்­டத்­த­ரணி ஒரு­வ­ருக்கு தொலை­பேசி அழைப்­பொன்­றினை மேற்­கொள்­வ­தற்குக் கூட அவர் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. அவ­ரது கைய­டக்கத் தொலை­பே­சிகள் பொலி­ஸா­ரினால் பறி­முதல் செய்­யப்­பட்­டன. அவர் பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­பட்டார். பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் அவரை அங்­கி­ருந்தும் வெளி­யேற அனு­ம­திக்­க­வில்லை. அத்­தோடு அவ­ரது முறைப்­பாட்­டினை பதிவு செய்­வ­தற்கு விரும்­ப­வு­மில்லை. அவர் ஏன் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார் என்­பது அவ­ருக்கு புரி­ய­வில்லை.
தன்னை வீடு செல்ல அனு­ம­திக்­கு­மாறும் நாளை திரும்பி வரு­வ­தா­கவும் டாக்டர் பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளிடம் வேண்­டினார். அவ்­வாறு அனு­ம­திக்க முடி­யா­தென பொலிஸ் கான்ஸ்­டபிள் தெரி­வித்தார். எவரும் அவரை வந்து பார்ப்­ப­தற்கும் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

‘நான் முழு­மை­யாக தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டேன். அவர்கள் என்னை தடுத்து வைத்­தி­ருப்­பார்­களா? வீடு செல்ல அனு­ம­திப்­பார்­களா? எனக்கு பொலிஸ் நடை­முறை தெரி­யாது. இது­பற்றி கேட்­ப­தற்கும் ஒரு­வரும் இருக்­க­வில்லை. நான் உத­வி­யற்­ற­வ­னானேன்’ என்று டாக்டர் சாபி அன்­றைய தினத்தை நினைவு கூர்ந்தார்.

அடுத்த தினம் காலை டாக்டர் சாபி சிஹாப்­தீ­னுக்கு பிஸ்கட் மற்றும் தண்ணீர் வழங்­கு­வ­தற்கு அவ­ரது இரு உற­வி­னர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது. மேலி­டத்து உத்­த­ர­வுக்­க­மைய விசா­ர­ணை­க­ளுக்­காக அவரை பொலிஸில் தடுத்து வைத்­தி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­தார்கள். பின்பு அவர் குற்­ற­வியல் பிரி­வுக்கு அழைத்துச் செல்­லப்­பட்டார். மீண்டும் அவர் கதி­ரை­யொன்றில் அமரச் செய்­யப்­பட்டார். அவ­ரது சட்­டத்­த­ர­ணிக்கு அப்­போதும் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.

குற்­ற­வியல் விசா­ரணை பிரிவில் பல­வந்­த­மான கருத்­தடை சிகிச்சை பற்றி கேள்வி எழுப்­பப்­ப­ட­வில்லை. ஆனால் அவ­ரது தனிப்­பட்ட மற்றும் குடும்ப வர­லாறு தொடர்­பா­கவே விசா­ரணை செய்­யப்­பட்­டது. இவ­ரது கைது தொடர்பில் வெளியில் செய்­திகள் பர­வின. ஊட­க­வி­ய­லா­ளர்கள் பொலிஸ் நிலை­யத்­துக்கு வருகை தந்­தனர்.
‘இதன் பின்பே, என்னை கைது செய்­வ­தற்­காக பொலிஸில் பேசிக் கொள்­ளப்­பட்­டதை நான் கேட்டேன்’ என்றார் டாக்டர் சாபி.

‘அவர்கள் என்னை சி.ஐ.டியிடம் ஒப்­ப­டைக்­க­வுள்­ள­தாக அறிந்து கொண்டேன். என்ன கார­ணத்­துக்­காக என்று எனக்குத் தெரி­ய­வில்லை. எனது கைவிரல் அடை­யா­ளங்கள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. எனது ஆடைகள் களை­யப்­பட்டு உடல் பரி­சோ­திக்­கப்­பட்­டது. இது எனக்கு உள­வியல் ரீதி­யான அதிர்ச்­சியை தந்­தது’ என்றார் அவர்.

டாக்டர் சாபி சி.ஐ.டி. பிரி­வுக்கு இட­மாற்றம் செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்பு கைவி­லங்­கி­டப்­பட்டார். அது மே மாதம் 25 ஆம் திகதி சுமார் பிற்­பகல் 6 மணி­ய­ளவில் நடந்­த­தாகும். அவர் சட்ட வைத்­திய அதி­காரி (JMO) யிடமும் அழைத்துச் செல்­லப்­பட்டார்.
பொலிஸார் அவர் பணி­யாற்­றிய குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லைக்கும் அவரை அழைத்துச் சென்­றார்கள்.

‘முழு உல­கத்தின் முன்­னி­லையில் கைவி­லங்­கி­டப்­பட்டு அழைத்துச் செல்­லப்­பட்டேன்’ என்­கிறார் அவர்.

‘அனை­வரும் என்னைப் பார்த்­தார்கள். என்­மீது மரி­யாதை செலுத்­தி­ய­வர்கள். எனக்கு கௌரவம் வழங்­கி­ய­வர்கள் அனைவர் முன்­னி­லை­யாக அங்கு நான் அழைத்துச் செல்­லப்­பட்டேன். எனது நிலையைப் பார்த்து, சில ஊழி­யர்­களின் விழி­களில் கண்ணீர் கசிந்­தது’ என்றார் டாக்டர் சாபி.

அவர் கொழும்­பி­லுள்ள சி.ஐ.டி.யின் நான்காம் மாடிக்கு அழைத்துச் செல்­லப்­பட்டார். சி.ஐ.டி யின் தலைமைக் காரி­யா­ல­யத்தின் நான்காம் மாடியின் அமைப்பை நினைவு கூர்ந்தார். அங்கு அதி­க­மானோர் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 3 அறைகள் உள்­ளன. பிர­பல போதைப்­பொருள் கடத்தல் காரன் மாகந்­துரே மதூஸ் என்­ப­வனும் அங்கு இருப்­ப­தாக டாக்­ட­ரிடம் தெரி­விக்­கப்­பட்­டது.

‘நான் அதிர்ச்­சிக்­குள்­ளானேன். மாகந்­துர மதூஸின் மட்­டத்தில் நான் நடத்­தப்­ப­டு­வ­தற்கு இந்த சமூ­கத்­துக்கு நான் என்ன குற்றம் செய்து விட்டேன்’ என்ற கவலை என்னுள் எழுந்­தது. ‘நான் அழ­வில்லை. அழு­வ­தினால் பய­னில்லை. எனது இலக்கு அங்­கி­ருந்து எப்­ப­டி­யேனும் வெளியில் வரு­வதே. எனக்கு தீங்கு விளை­விக்­கப்­ப­ட­மாட்­டாது என்ற நம்­பிக்கை என்­னி­ட­மி­ருந்­தது. இறைவன் என்னைப் பாது­காப்பான். எல்­லா­வற்­றுக்கும் அல்லாஹ் இருக்­கிறான். அவர்கள் என் கையில் விலங்­கிட்­ட­போதும் அல்­லாஹ்வே நினை­வுக்கு வந்தான்’ என்றார்.

டாக்டர் சாபி சிஹாப்தீன் 46 தினங்­களை சிஐ­டியில் கழித்தார். ஜூலை 25 ஆம் திகதி அவ­ருக்குப் பிணை வழங்­கப்­பட்­டது. பிணை வழங்­கப்­பட்ட பின்பும் அவர் கேகாலை சிறைச்­சா­லையில் இரு வாரங்­களைக் கழித்தார். அவர் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் பல­கட்ட விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார். சில வேளை­களில் சாட்­சி­யா­ளர்கள் சி.ஐ.டி.க்கு அழைத்து வரப்­பட்டு வாக்கு மூலங்கள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டன.
‘எனக்­கெ­தி­ரான அனைத்து குற்­றச்­சாட்­டுக்­களும் என்­னுடன் தொடர்­பு­ப­டா­தவை. சோடிக்­கப்­பட்­டவை என்று பிடி­வா­த­மாகக் கூறினேன். குற்­றச்­சாட்­டுக்கள் என்­னுடன் தொடர்­பு­பட்­டவை அல்ல என்று விசா­ர­ணை­களில் தெரி­வித்தேன். இம்­முறை அவர்கள் நிலை­மையை விளங்கிக் கொண்­டார்கள்’ என்றார் டாக்டர் சாபி.

டாக்டரின் குடும்பம் அதிகளவில் பாதிக்கப்பட்டது. அவர் பொலிஸுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அன்று இரவு குடும்பத்தினர் வீட்டை விட்டும் வெளியேறினர். அவரது மனைவி இமாரா பிள்ளைகளை அவர்களது பாடசாலைகளிலிருந்தும் வெளியேற்றி கொழும்புக்கு வந்து சேர்ந்தார். ஆனால் முஸ்லிம்கள் கூட டாக்டர் சாபியின் மனைவிக்கு இடமளிக்கவில்லை. அவர் வாடகைக்கு பெற்றுக்கொண்ட வீட்டுத் தொகுதியில் 7 மாடிகள் ஏறிச் செல்ல வேண்டியிருந்தது. அவரது நண்பரான குடும்பமொன்று இந்த தங்குமிடத்தை ஏற்பாடு செய்திருந்தது.

‘மனைவி மிகவும் பாரிய அளவில் அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்தார். முழு­மை­யாக தொடர்ந்து பீதியில் இருந்தார். பிள்­ளை­க­ளுக்கு பாட­சாலை தேட வேண்­டி­யி­ருந்­தது. அவரால் தொடர்ந்தும் குரு­நா­க­லையில் தனது வேலையைத் தொடர முடி­யா­ம­லி­ருந்­தது. அதனால் இட­மாற்­றத்­துக்­கான ஏற்­பா­டு­களைச் செய்ய வேண்­டி­யி­ருந்­தது. அவ­ரிடம் கையில் பணம் இருக்­க­வில்லை.’

‘எனது வங்­கிக்­க­ணக்கு முடக்­கப்­பட்­டி­ருந்­தது. ஊட­க­வி­ய­லா­ளர்கள் மனைவியைத் துரத்திக் கொண்­டி­ருந்­தார்கள். எனது பிள்­ளை­களை பாது­காக்க முடி­யா­ம­லி­ருந்­தது. மனைவிக்கு வெளியில் பகிரங்கமாக பேசமுடியாமலிருந்த தான் இலக்கு வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அச்­ச­ம­டைந்தார். தான் கொலை செய்­யப்­ப­டலாம் என்று மனைவி பீதி­யுற்றார்.

பிள்­ளைகள் குரு­நா­க­லி­லி­ருந்து கொழும்­புக்கும் கொழும்­பி­லி­ருந்து கல்­மு­னைக்கும் அதன் பின்பு மாற்­றப்­பட்­டார்கள். இப்­போது அவர்கள் கண்­டியில் வாழ்­கி­றார்கள். ஆனால் அவர்களது வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.

பல்வேறு போராட்டங்களை
எதிர்கொள்ள வேண்டிய நிலை

டாக்டர் சாபி சிஹாப்தீன் பல­த­ரப்­பட்ட நிறு­வ­னங்கள் முன்­னி­லை­யிலும் தான் நிர­ப­ராதி என நிரூ­பிக்க வேண்­டி­யுள்­ளது. அவர் கைது செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து சுகா­தார அமைச்சு அவரை கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பி­யது. அவர் பொதுச் சேவைகள் ஆணைக்­கு­ழுக்கு மேன்­மு­றை­யீடு ஒன்­றினை அனுப்பி வைத்தார். அதில் தன்னை மீளவும் பத­வியில் அமர்த்­தும்­ப­டியும் சம்­பள நிலு­வையைப் பெற்றுத் தரும்­ப­டியும் கோரி­யி­ருந்தார். இத­னை­ய­டுத்து பொது சேவைகள் ஆணைக்­குழு டாக்டர் சாபியின் சம்­பள நிலு­வையை வழங்­கும்­படி சுகா­தார அமைச்சை அறி­வு­றுத்­தி­யது. ஆனால் அவரை மீண்டும் சேவையில் அமர்த்தும் படி உத்­த­ர­வி­ட­வில்லை.

பொது சேவைகள் ஆணைக்­கு­ழுவின் உத்­த­ர­வுக்­க­மைய டாக்டர் சாபி இறு­தி­யாக கட­மை­யாற்­றிய குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சாலை அவ­ருக்கு அழைப்­பாணை ஒன்­றினை அனுப்பி வைத்­தது. இந்த அழைப்­பாணை டிசம்­பரில் அனுப்பி வைக்­கப்­பட்­டது. ஆரம்ப விசா­ர­ணை­யாக அவ­ரிடம் வாக்­கு­மூலம் கோரப்­பட்­டது. டாக்டர் சாபி சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கருத்­தடை சிகிச்சை செய்­வ­தாக குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்டு இரண்­டரை வரு­டங்­களின் பின்பே ஆரம்ப விசா­ர­ணைக்­காக அவ­ருக்கு கடிதம் அனுப்பி வைக்­கப்­பட்­டது.

கடந்த வருடம் பொதுச் சேவைகள் ஆணைக்­குழு டாக்­ட­ருக்கு எதி­ராக மூன்று குற்­றப்­பத்­தி­ரி­கை­களை சமர்ப்­பித்­தது. கட்­டிலின் பெயர் அட்­டையில் மாற்­றங்­களைச் செய்­தது, 2017 ஜூன் மாதத்­துக்கும் 2019 மே மாதத்­துக்­கு­மி­டையில் தனியார் நிறு­வ­ன­மொன்றின் பணிப்­பா­ள­ராக பதவி வகித்­தமை, அவ­ரது உத்­தி­யோ­க­பூர்வ தின­சரி குறிப்புப் புத்­த­கத்தில் மனைவி பதி­வொன்­றினை பதிவு செய்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்­தமை என்­ப­னவே குற்­றச்­சாட்­டு­க­ளாகும். அவர் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு தகுந்த பதில் வழங்­கிய போதும் கண்­டிக்­கப்­பட்­ட­துடன் அவ­ரது சம்­பள உயர்வு நிறுத்தி வைக்­கப்­பட்­டது. அத்­தோடு விசா­ரணை முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டது. இதே­வேளை டாக்டர் சாபி சிஹாப்தீன் ஜூன் 2019இல் அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்­றினை உயர்­நீ­தி­மன்றில் தாக்கல் செய்தார். இம்­மனு இன்னும் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இவ­ருக்கு எதி­ரான பிர­தான வழக்கு குரு­நாகல் நீதிவான் நீதி­மன்றில் நிலு­வையில் உள்­ளது. அவர் மீது இன்னும் குற்றம் சுமத்­தப்­ப­ட­வில்லை. குற்­ற­வியல் விசா­ரணை திணைக்­களம் நீதி­மன்­றுக்கு தொடர்ந்தும் அறிக்­கை­களை சமர்ப்­பித்து வரு­கி­றது.

இவர் கைது செய்­யப்­பட்ட பின்பு பாரி­ய­ளவில் சட்ட விரோ­த­மா­க­ செல் வம் ஈட்­டி­ய­தா­கவும் தீவி­ர­வாத அமைப்­புடன் தொடர்பில் இருந்­த­தா­கவும் மேல­தி­க­மாக குற்றம் சுமத்­தப்­பட்டார். வழக்கு நாளை வெள்­ளிக்­கி­ழமை விசா­ர­ணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வுள்ளது. நன்றி: சன்டே டைம்ஸ்.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.