நியூசிலாந்து சம்பவத்தை இலங்கையிலுள்ள சிலர் இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி பழி சுமத்த முனைவது கவலை தருகிறது

ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர்

0 200

நியூ­சி­லாந்தின் ஆக்­லாந்து நகரில் இடம்­பெற்ற சம்­பவம் தொடர்பில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர் ஊடக அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்ளார். அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நியூ­சி­லாந்தின் பிர­த­ம­ரான ஜசிந்தா ஆர்­டெர்­னிடம் இருந்து இலங்கை கற்றுக் கொள்ள வேண்­டிய முக்­கி­ய­மான பாடங்கள் உள்­ளன.

கடந்த செப்­டம்பர் 3 ஆம் திகதி நியூ­சி­லாந்தின் ஆக்­லாந்து நகரில் உள்ள நியூலின் சூப்பர் மார்க்­கெட்டில் அப்­பாவி பொது­மக்கள் மீது கத்­திக்­குத்து தாக்­குதல் நடத்­திய சம்­பவம் பர­ப­ரப்­பான செய்­தி­யாக ஊட­கங்­களில் வெளி­வந்­தது. வெறுக்­கத்­தக்க இத்­தாக்­குதல் குறித்து அதி­க­மான கண்­டன அறிக்­கை­களும் வெளி­வந்­துள்­ளன.

இது குறித்து நியூ­சி­லாந்து பிர­தமர் ஜசிந்தா ஆர்டெர்ன் மக்­க­ளுக்கு ஆற்­றிய உருக்­க­மான அனு­தாப உரையில் உணர்ச்­சி­களை உசுப்­பேற்­றாது முக்­கி­ய­மான ஒரு செய்­தியை அழுத்­த­மாக முன்­வைத்தார். அதில் அவர் “ இந்த செயல் எந்த நம்­பிக்­கையின் சார்­பா­கவும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இது ஒரு தனிப்­பட்ட நபரால் மேற்­கொள்­ளப்­பட்­டது. இந்த வெறுக்­கத்­தக்க செய­லா­னது எந்­த­வொரு கலாச்­சாரம் அல்­லது இனம் சார்ந்து மேற்­கொள்­ளப்­பட்­டது அல்ல. இது யாராலும் அல்­லது எந்த சமூ­கத்­தாலும் ஆத­ரிக்­கப்­ப­டாத ஒரு சித்­தாந்­தத்தால் பீடிக்­கப்­பட்ட ஒரு தனி­ந­பரின் செய­லாகும்” எனக் குறிப்­பிட்டார். இந்த செய்தி குறிப்­பாக உல­கெங்­கிலும் உள்ள முஸ்­லிம்­க­ளி­டையே வைர­லாக பரவி வரு­கி­றது.

நியூ­சி­லாந்து பிர­தமர் அவர்கள் தாக்­குதல் சம்­பவம் நிகழ்ந்த உட­னேயே மக்­க­ளுக்கு மத்­தியில் மிகவும் தெளி­வா­கவும் நுணுக்­க­மா­கவும் முன்­வைத்த செய்தி கூர்ந்து கவ­னிக்க வேண்­டிய ஒன்­றாகும். உரிய நேரத்தில் காலத்­துக்குப் பொருத்­த­மான ஒரு செய்­தி­யாக அது அமைந்­தது. அவ்­வ­ளவு முக்­கி­யத்­துவம் வாய்ந்த அந்த உரையில் பிர­தமர் ஜசிந்தா கூறிய விட­யங்கள் வரு­மாறு:

தாக்­கு­தலை நடத்­திய இலங்­கை­யரை ‘ஒரு தனி நப­ராக’ மாத்­திரம் அடை­யாளம் காட்­டினார். அந்த நபரின் சமய நம்­பிக்கை, கலாச்­சாரம் மற்றும் இனம் என்­ப­வற்­றுடன் தொடர்­பு­ப­டுத்தி பார்க்கும் பார்­வையை நீக்கி அது ஒரு தனிப்­பட்ட நபரின் வெறுக்­கத்­தக்க செய­லாக குறிப்­பிட்டார். அதன் மூலம் ஐஎஸ் தீவி­ர­வாதக் குழு­வி­னரால் ஊக்கம் பெற்று தாக்­கு­தலில் ஈடு­பட்ட அவ­ரது செயல் வெறுப்­பு­ணர்வு நிறைந்த ஒரு தனி நபரின் தவ­றான செயல் என்றே வரை­யறை செய்தார். அத்­த­கைய பார்வை கார­ண­மாக தாக்­குதல் நடத்­தி­ய­வரின் தாய்­நாட்டில் உள்ள மக்கள் மத்­தி­யிலும் பாதிப்பு ஏற்­ப­டா­த­வாறு பார்த்துக் கொண்டார். இது பல்­லின மக்கள் வாழும் ஒரு தேசத்­திற்கு மிகவும் சிறந்த படிப்­பி­னையை தரும் முன்­மா­தி­ரி­யான நடத்­தை­யாகும்.

பிர­தமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இந்த சம்­ப­வத்தை அணு­கிய முறை­மை­யா­னது தாக்­கு­தலை நடத்­திய நபர் விசு­வாசம் வைத்­துள்ள ஐஎஸ் தீவிர சிந்­த­னை­யா­ளர்­க­ளுக்கும் மற்றும் உண்­மை­யான பயங்­க­ர­வா­தத்­திற்கும் எதி­ராக முஸ்­லிம்­களும் ஒன்­றி­ணைந்து போராட வழி காட்­டு­கி­றது.

நியூ­சி­லாந்து உலக்கு வழங்­கி­யுள்ள மூலோ­பா­ய­மா­னது, எல்லை மீறிய தீவி­ர­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்­து­வதில் நிச்­ச­ய­மாக வெற்­றியை கொண்டு வரும். அவ்­வாறே முடி­வில்­லாமல் தொடரும் உல­க­ம­ய­மாக்­கப்­பட்ட போர்கள் கார­ண­மா­க, தாம் பலிக்­க­டா­வாக்­கப்­பட்­ட­வர்கள் எனவும் மில்­லியன் கணக்­கான சிவி­லி­யன்­களை அக­தி­க­ளாக மாற்றி அக­தி­வாழ்க்­கையின் பிழைப்­புக்­காக நவீன ‘அடி­மை­க­ளாக’ மாறி­யுள்ளோம் எனவும் மான­சீ­க­மாக உணர்ந்­த­வர்­களும் தங்­க­ளது எதிர்ப்பை விரி­வாக்­காமல் தடுப்­ப­திலும் நியூ­சி­லாந்தின் வியூகம் வெற்­றியை தரும் என உறு­தி­யாக நம்ப முடியும்.

தீவி­ர­வா­தியை அவ­ரது உற­வி­னர்கள், குடும்­பத்­தி­னர்கள் மற்றும் அவ­ரது நம்­பிக்கை சார்ந்த சமூ­கத்­தி­னர்­களை விட்டும் வேறு­ப­டுத்தி நோக்கும் ஒரு இலக்­கு­மை­யப்­பட்ட மூலோ­பாய பார்வை இல்­லாத சூழலில் “எதிர்ப்பு நட­டி­வ­டிக்­கைகள், வன்­மு­றை­யுடன் கூடிய எதிர்ப்­புகள் மற்றும் பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள்” கட்­டுப்­ப­டுத்த முடி­யாத அள­விற்கு தீமை­ப­யக்கும் சுழற்­சி­யாக வெடித்துச் சிதறும். நியூ­சி­லாந்து நாட்டின் அமை­திக்கும், சமா­தான சக­வாழ்­வுக்கும், மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்கும் பெரும் பங்கம் ஏற்­படும் வகையில் பேரி­டி­யாக விழுந்த இரண்டு நிகழ்­வு­களின் போது பிர­தமர் ஆர்டெர்ன் துணி­வுடன் கையாண்ட அணு­கு­மு­றை­யி­லி­ருந்து இலங்கை கற்றுக் கொள்ள வேண்­டிய பாடங்­களே இவை­யாகும்.

அமை­தியின் மடியில் இடி­யாக விழுந்த முதல் நிகழ்வு 2019 மார்ச் 15 அன்று நியூ­சி­லாந்து, கிறைஸ்ட்சேர்ச் நகரில் உள்ள அல் நூர் பள்­ளி­வாசல் மற்றும் லின்வுட் இஸ்­லா­மிய மையம் ஆகி­ய­வற்றில் வெள்ளி தொழு­கையின் போது இடம்­பெற்ற பயங்­க­ர­வாத துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வ­மாகும். இரண்­டா­வது செப்­டம்பர் 3 ஆம் திகதி ஆக்­லாந்து நகரில் உள்ள சூப்பர் மார்க்­கெட்டில் இடம்­பெற்ற கத்­திக்­குத்து தாக்­குதல் சம்­ப­வ­மாகும். நாம் ஆக்­லாந்து நகர தாக்­கு­தலை கண்­டிக்கும் அதே­வேளை, நியூ­சி­லாந்து பிர­தமர் ஜசிந்தா ஆர்டன் அவர்கள் ஆக்­லாந்து தாக்­கு­தலை அணு­கிய முறை, மக்­க­ளுக்கு அதனை முன்­வைத்த விதம், அதற்­காக அவர் பயன்­ப­டுத்­திய வார்த்­தைகள் குறித்து அவரை பாராட்­டு­கிறோம். எனினும் இந்தப் பாராட்டு நியூ­சி­லாந்து காவல்­து­றைக்கு சேராது. அது வேறொரு விடயம்!

ஆக்­லாந்து தாக்­குதல் நடத்­திய நபரின் குடும்­பத்­தினர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், அவர் மேற்­கொண்ட அந்த தாக்­குதல் தவ­றா­னது என்றும் அதனால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக மிகுந்த வருத்­தத்­தையும் தெரி­வித்­துள்­ளனர். அந்த அறிக்­கையில் குறித்த நபர் நீண்ட கால­மாக மன­நலப் பிரச்­சி­னை­களால் அவ­திப்­பட்டு வந்துள்ளார் என்றும் அவரைக் காப்­பாற்ற முடி­ய­வில்­லையே என குடும்­பத்­தினர் கவலை கொண்­டுள்­ள­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. சூப்பர் மார்க்­கெட்டில் இடம்­பெற்ற தாக்­குதல் சம்­ப­வத்தை நேரில் பார்த்த ஒருவர் தாக்­குதல் நடத்­தி­யவர் “பைத்­தியம் பிடித்­தவர் போல் ஓடு­கிறார்” என்று கூறி­யது இங்கு கவ­னத்தில் கொள்­ளத்­தக்­க­தாகும். தாக்­குதல் நடத்­திய நபர் உண்­மையில் பயங்­க­ர­வா­தியா அல்­லது மன­நலப் பிரச்­சி­னை­க­ளால் பாதிக்­கப்­பட்­ட­வரா என்­பதை ஆராய்ந்து நிரூ­பிக்கும் பொறுப்பு நியூ­சி­லாந்து அதி­கா­ரிகள் மீதுள்ள பொறுப்­பாகும். மன­நலப் பிரச்­சி­னை­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மன்­னிக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள். அவர்கள் பயங்­க­ர­வா­திகள் அல்லர்.

கிவி பிர­தமர் ஆர்டெர்ன் மேற்­படி தாக்­கு­தலை நடத்­திய இலங்­கை­யரை ‘ஒரு தனி நப­ராக’ மாத்­திரம் அடை­யாளம் காட்டி, அந்த நபரின் மதம், கலா­சாரம், இனம் சார்ந்து நின்று பார்க்கும் குறு­கிய பார்­வையை நீக்­கி­யதன் மூலம் மனி­த­நேய உணர்­வுக்கு வாழ்வு கொடுத்துள்ளார். ஆர்டெர்ன் இவ்வளவு துல்லியமாக இந்த சம்பவம் குறித்து பேசி, சிறந்த முறையில் அதனை அணுகியதன் காரணமாக மதங்கள் மீது வீண் பழிகள் சுமத்தப்படுவதை தடுத்துள்ளார்;. இனக் குழுமங்கள் மத்தியில் மோதல்கள் ஏற்படாமல் பாதுகாத்துள்ளார். அதேவேளை இலங்கையில் சிலர் இந்த தாக்குதல் சம்பவத்தை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி முஸ்லிம்களை குற்றம் சுமத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருப்பது கவலை தருகிறது. கிவி பிரதமர் ஆர்டெர்ன் குறிப்பிட்டது போல இந்த சம்பவம் குறித்து மிகுந்த நிதானத்துடன் நடுநிலையாக அணுகும் போதுதான் இலங்கையர்கள் மத்தியில் நல்லுறவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வழி வகுக்கும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.