பசிலுக்கு வாக்கு சேகரிக்க தயாராகும் முஸ்லிம் எம்.பி.க்கள்

0 542

றிப்தி அலி

இலங்­கையில் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற கோஷத்­தினை முன்­வைத்தே ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான ஆளும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி கடந்த 2019ஆம் ஆண்டு நவம்­பரில் ஆட்­சி­பீ­ட­மே­றி­யது. எனினும் 20 மாதங்கள் கழிந்­துள்ள நிலை­யிலும் குறித்த கட்­சி­யினால் முன்­வைக்­கப்­பட்ட கோஷத்­தினை இது­வரை நிறை­வேற்ற முடி­யா­துள்­ளது. பல சந்தர்ப்பங்­களில் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற கோஷத்­தினை மீறும் வகையில் இந்த அர­சாங்கம் செயற்­பட்­டமை சமூக ஊட­கங்­களில் விமர்சனத்­துக்­குள்­ளா­கி­யி­ருந்­தன.

கொரோனா வைர­ஸினை கட்­டுப்­ப­டுத்­து­வதில் இந்த அர­சாங்கம் தற்­போது பாரிய சிக்­கல்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளது. அது மாத்­தி­ர­மல்­லாமல் நாட்டில் பொரு­ளா­தார நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. இதனால் தினந்­தோறும் அனைத்து வகை­யான பொருட்­களின் விலை­களும் அதி­க­ரிக்­கின்­றன.

இதனால் 69 இலட்சம் மக்­களின் வாக்­கு­களைப் பெற்று ஆட்சி பீட­மே­றிய இந்த அர­சாங்­கத்தின் செல்­வாக்கு நாளுக்கு நாள் குறை­வ­டை­வ­துடன் இது தொடர்பில் சமூக ஊட­கங்­களில் பாரிய விமர்சனங்­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

இந்த சந்தர்ப்பத்தில் மக்­களை திசை திருப்ப அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. இதற்­காக முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்­கப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான சந்தர்ப்பங்­களில் முஸ்லிம் சமூ­கத்­துடன் நேர­டி­யாக தொடர்புபடும் வகை­யான தீர்­மா­னங்­களை ஆளும் அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது.

நிகாப் மற்றும் புர்கா ஆகி­ய­வற்­றுக்கு தடை, மாட­றுத்­த­லுக்கு தடை, காதி நீதி­மன்ற முறை­யினை இல்­லா­ம­லாக்கல், முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்தம் ஆகி­ய­வற்­றினை இதற்­கான உதா­ர­ணங்­க­ளாக குறிப்­பிட முடியும்.
இவை தொடர்பில் அமைச்­ச­ர­வையில் மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னங்­க­ளுக்கு அமைய சட்ட வரைஞர் திணைக்­களம் தற்­போது சட்ட வரை­பினை மேற்­கொண்டு வரு­கின்­றது.
இதே­வேளை, “முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்­டத்தில் நிச்­சயம் திருத்தம் மேற்­கொள்­ளப்­படும்” என நீதி அமைச்சர் அலி சப்ரி அண்­மையில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் தெரி­வித்­தி­ருந்தார்.

எனினும், இதற்கு முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து பாரிய எதிர்ப்­ப­லைகள் தோன்­றி­யுள்­ளன. இவ்­வாறு முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் விரைவில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள இந்த சட்­டங்கள் தொடர்பில் எதிர்க்­கட்­சி­யி­லி­ருந்து கொண்டு ஆளும் கட்­சி­யுடன் நெருங்கி செயற்­படும் ஏழு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என்ன செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்ற கேள்வி தற்­போது எழுந்­துள்­ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் தீர்­மா­னங்­களை மீறி குறித்த கட்­சி­யினை ேசர்ந்த ஏழு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் 20ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்­தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த இரண்டு கட்­சி­களின் ஆத­ர­வா­ளர்­க­ளினால் இந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதிர்ப்­ப­லைகள் தோன்­றின. இதற்கு முடிவு கட்டும் வகையில் இவர்கள் ஏழு பேரும் கட்சி பேதங்­களை மறந்து ஒரு அணி­யாக செயற்­படத் தொடங்­கினர்.

இவர்களுடன் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான காதர் மஸ்தான் மற்றும் மர்ஜான் பழீல் ஆகி­யோரும் இணைந்து செயற்­ப­டு­கின்­றனர்.
இவர்கள் ஒன்­பது பேரும் இணைந்தே அர­சாங்க தரப்­பி­ன­ரு­ட­னான பேச்­சுக்­களை முன்­னெ­டுக்­கின்­றனர். நிதி அமைச்சர் பசில் ராஜ­ப­க் ஷவின் ஆசிர்­வா­தத்­து­ட­னேயே இவர்கள் அனை­வரும் ஓர­ணி­யாக செயற்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பா­ள­ராக செயற்­பட்ட ஏ.பீ.எம். அஷ்­ர­பினை இட­மாற்றும் விட­யத்­திலும் மேற்­கு­றிப்­பிட்ட ஒன்­பது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இணைந்து செயற்­பட்­ட­தா­கவும் இப்­போது தெரிய வரு­கி­றது.
இது போன்றே, கொழும்­பினைத் தள­மாகக் கொண்டு செயற்­படும் முஸ்லிம் அமைப்­புக்கள் சில­வற்றின் பிர­தி­நி­தி­களை மேற்­கு­றிப்­பிட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அண்­மையில் கொழும்பில் சந்­தித்து முஸ்லிம் சமூகம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். எனினும், இந்த ஒன்­பது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு யார் தலை­மைத்­துவம் வழங்­கு­வது என்­பது தொடர்பில் நீண்ட இழு­ப­றி­யொன்று அவர்களி­டையே காணப்­ப­டு­கின்­றது.
இதே­வேளை, இவர்களில் சில­ருக்கு விரைவில் இரா­ஜாங்க அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற செய்­தியும் சமூக ஊட­கங்­களில் பரவி வரு­கின்­றன. இத­னா­லேயே முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்பில், (அர­சாங்­கத்­திற்கு அசௌ­க­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தாது) இவர்கள் பாரா­ளு­மன்­றத்தில் பேசு­வ­தனை தவிர்த்து வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்த ஒன்­பது பேரில் ஐந்து ேபர் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளாவர். இவர்கள் ஐந்து பேருக்­குமே அமைச்சுப் பத­வி­யினை அர­சாங்கம் ஒரு­போதும் வழங்­காது. இதனால் கிடைக்கும் ஒன்­றையோ அல்­லது இரண்­டையோ யார் பெறு­வது என்­பது தான் இங்­குள்ள பிரச்­சி­னை­யாகும்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே, “20க்கு ஆத­ர­வ­ளித்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் யாரும் அமைச்சர் பத­வி­யினை பெற­மாட்டோம்” என அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அண்­மையில் தெரி­வித்­தி­ருந்தார்.
இந்த அறி­விப்பின் ஊடாக குறித்த பிரச்­சி­னைக்கு தற்­கா­லிக தீர்­வினை கண்­டுள்ள இவர்கள், அடுத்த ஜனா­தி­பதித் ேதர்தலில் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­குவார் என எதிர்­பார்க்­கப்­படும் நிதி அமைச்சர் பசில் ராஜ­ப­க் ஷ­விற்கு ஆத­ர­வான பிரச்­சா­ரங்­களை தற்­போ­தி­ருந்தே முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் ஆரம்­பித்­துள்­ளனர். மேற்­படி முஸ்லிம் எம்.பி.க்கள் தமது அபி­வி­ருத்திப் பணிகள் தொடர்­பான விளம்­பரப் பதா­தை­களில் பசில் ராஜ­பக்­சவின் புகைப்­ப­டத்­தையே பெரிய அளவில் பிர­சு­ரிக்­கின்­றமை இதற்கு ஓர் உதா­ர­ண­மாகும்.

குறிப்­பாக அடுத்த ஜனா­தி­பதி ேதர்தலில் பசில் ராஜ­ப­க் ஷ­விற்கு 5 இலட்சம் முதல் 10 இலட்சம் வரை­யான முஸ்லிம் வாக்­குளை பெற்­றுக்­கொ­டுப்­பதே இந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் இலக்கு என்றும் அவர்­க­ளுக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்கள் கூறு­கின்­றன.

மேற்­படி விட­யங்­களை அண்­மையில் கொழும்பில் இடம்­பெற்ற முஸ்லிம் அமைப்­புக்­க­ளு­ட­னான சந்­திப்பின் போது குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரி­வித்­துள்­ள­துடன் அவர்களின் எதிர்­கால திட்­டங்கள் தொடர்பிலும் விளக்­கி­யுள்­ளனர். முஸ்லிம் அமைப்­புகள் பசில் ராஜ­பக்­சவை ஆத­ரிக்க முன்­வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்­துள்­ளனர்.

இத­னா­லேயே, இவர்கள் முஸ்லிம் சமூகம் இன்று எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை மறந்­து­விட்டு பசில் ராஜ­ப­க்ஷ­விற்கு ஆத­ர­வான பிர­சா­ரத்­தினை முன்­னெ­டுக்கும் பணியில் தீவி­ர­மாக உள்­ளனர்.

அடுத்த ஜனா­தி­பதி தோர்தலுக்கு இன்னும் மூன்று வரு­டங்கள் உள்­ளன. அடுத்த ஜனா­தி­ப­தியைப் பற்றி சிந்திக்கின்ற நிலைமையில் இன்று நாடு இல்லை. அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையில் உலகில் எவ்வாறான மாற்றங்கள் இடம்பெறும் என்பதையும் யாராலும் கூற முடியாது.

அவ்வாறான நிலையில் இவர்கள் சமூகப் பிரச்சினைகளை மறந்து விட்டு அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தினை ஆரம்பித்திருப்பது கவலைக்குரியதாகும்.
முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­களை முன்­வைத்து பாரா­ளு­மன்றம் சென்ற இவர்கள், அது பற்றி வாய்­தி­றக்­காது ஆளும் அர­சாங்­கத்­தையும் அதன் தலை­வர்­க­ளையும் திருப்­திப்­ப­டுத்­து­வ­தையே தமது ஒரே குறிக்­கோ­ளாகக் கொண்டு செயற்­ப­டு­கின்­றனர். இது முஸ்லிம் அர­சி­யலை மென்­மேலும் பல­வீ­னப்­ப­டுத்­துமே அன்றி ஒருபோதும் பலப்படுத்தாது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.