நவீன இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் மூலம் திரு­மண ஒப்­பந்தம் செய்­ய­லாமா?

0 676

தற்­போது உல­க­ளா­விய ரீதியில் தொடர்ந்தும் ஏற்­பட்­டி­ருக்­கின்ற சிக்கல் நிலை கார­ண­மாக வெளி­நா­டு­களில் பணி­பு­ரி­கின்­ற­வர்கள் சொந்த நாடு­க­ளுக்கு திரும்­பு­வதில் நடை­முறைச் சிக்கல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. குறிப்­பாக திரு­மணம் முடிப்­ப­தற்கு உத்­தே­சித்­தி­ருக்­கின்ற இளை­ஞர்கள் தமது நாட்­டிற்கு வந்து திரு­மணம் முடிக்க முடி­யாத அவல நிலை தோன்­றி­யுள்­ளது. அதனால் நவீன இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் மூலம் திரு­மண ஒப்­பந்­தங்­களை நடாத்த முடி­யுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது. திரு­மணம் என­பது இறைத் தூதர்­க­ளது வழி­காட்­டல்­களில் ஒன்­றாகும். அதற்­கான நெறி­மு­றைகள் மற்றும் விதிகள் என­பன தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. அதன் மூலம் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற இலக்­குகள், அடை­வுகள் என்ற விட­யத்தில் இஸ்லாம் கூடுதல் கரி­சனை காட்­டு­கின்­றது. இஸ்­லாத்தில் திரு­மண உடன்­ப­டிக்கை செல்­லு­ப­டி­யா­வ­தற்கு சில நிபந்­த­னைகள் உள்­ளன. அவை­யா­வன

  • ஈஜாப் : இது மண­ம­களின் பொறுப்­பு­தா­ரி­யான வலியால் சொல்­லப்­படும் வார்த்தை
  • கபூல் : இது மண­ம­கனால் சொல்­லப்­படும் வார்த்தை. இது மண­ம­களை ஏற்றுக் கொள்­வ­தாக குறிப்­பி­டு­வதைக் குறிக்கும்.
  • வலி
  • சாட்­சிகள் : இரண்டு நீதி­யான சாட்­சிகள் இருக்க வேண்டும்.

நவீன தொலைத் தொடர்பு சாத­னங்கள் மூலம் இடம்­பெ­று­கின்ற திரு­மண ஒப்­பந்­தங்­களைப் பொறுத்­த­வ­ரையில் அதற்­கு­ரிய நிலைப்­பாட்டை பின்­வ­ரு­மாறு பார்க்க முடியும். திரு­மண ஒப்­பந்தம் இடம்­பெ­று­கின்ற போது மண­மகன், மண­ம­களின் பொறுப்­பு­தாரி மற்றும் சாட்­சிகள் ஆகியோர் ஓரி­டத்தில் நேர­டி­யாக ஒன்று சேர்ந்து உடன்­ப­டிக்­கையில் ஈடு­ப­டு­வது தான் அடிப்­ப­டை­யாகும்.

குறிப்­பாக நவீன ஊட­கங்­களின் மூல­மாக இடம்­பெ­று­கின்ற திரு­மண ஒப்­பந்­தங்­களின் அங்­கீ­காரம் தொடர்பில் அறி­ஞர்­க­ளுக்கு மத்­தியில் பல­த­ரப்­பட்ட கருத்­துக்கள் நில­வு­கின்­றன. இலத்­தி­ர­னியல் ஊட­கங்­க­ளி­னூ­டாக இடம்­பெறும் திரு­ம­ணங்கள் பல வழி­களில் இடம்­பெ­றலாம். குறுஞ்­செய்­திகள் (SMS) மூலம், மின்­ன­ஞசல் (E mail) மூலம், குரல் செய்தி (Voice Message) மூலம், தொலை­பேசி மூலம் அல்­லது காணொளி அழைப்பு (Video Call) மூலம் திரு­ம­ணங்கள் இடம்­பெ­றலாம்.

குறிப்­பாக கடி­தத்தின் மூலம் அல்­லது குரல் செய்­திகள் மூலம் இடம்­பெறும் திரு­ம­ணத்தை பெரும்­பா­லான அறி­ஞர்கள் ஏற்றுக் கொள்­ள­வில்லை. சில அறி­ஞர்கள் திரு­ம­ணத்தை பாது­காப்­ப­தற்­கான முன்­னெச்­ச­ரிக்­கை­யாக இது அனு­ம­திக்­கப்­ப­டக்­கூ­டாது என்று கரு­து­கின்­றனர். ஏனென்றால் ஒரு நபரின் குரலைப் பின்­பற்றி மற்­ற­வர்­களை ஏமாற்ற முடியும். இவர்­க­ளது பார்­வையில் ஈஜாப் மற்றும் கபூல் ஆகி­யன கட்­டாயம் வாய் மொழி மூலமே இடம்­பெற வேண்டும் என்­ப­தாகும். இந்த நிலைப்­பாட்டில் இமாம் நவவி (றஹ்) அவர்கள் இருக்­கின்­றார்கள். குரல் பதிவு மூலம் திரு­ம­ணங்கள் இடம்­பெ­று­வ­தையும் மேற்­கு­றிப்­பிட்ட இமாம்­களின் குழு ஏற்றுக் கொள்­ள­வில்லை. திரு­மண உடன்­ப­டிக்கை இடம்­பெறும் போது வலி மற்றும் சாட்­சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்ற நிபந்­தனை இந்த கட்­டத்தில் அற்றுப் போகின்­றது.

இப்னு குதாமா (றஹ்) அவர்கள் திரு­மண ஒப்­பந்தம் வியா­பார ஒப்­பந்­தத்தைப் போன்­றது. ஈஜாப் கூறப்­ப­டு­கின்ற அதே சபையில் கபூ­லுக்­கு­ரிய வார்த்­தையும் பகி­ரப்­பட வேண்டும். ஈஜா­புக்­கான வார்த்தை பகி­ரப்­ப­டு­கின்ற போது கபூ­லுக்­கான வார்த்தை குறிப்­பி­டப்­ப­டாத போது அந்த உடன்­ப­டிக்கை நிறை­வே­றாது.

அதே­போல தொலை­பேசி மூலம் இடம்­பெறும் திரு­மண உடன்­ப­டிக்­கையை சில இமாம்கள் அங்­கீ­க­ரிக்­க­வில்லை. இதில் சந்­தேக நிலை தோன்­று­வ­தற்­கான வாய்ப்­புள்­ளது என்­ப­த­னா­லாகும். ஆனால் காணொளி அழைப்பு மூலம் திரு­மண உடன்­ப­டிக்கை இடம்­பெ­று­வதை பெறும்­பா­லான அறி­ஞர்கள் ஏற்றுக் கொள்­கின்­றனர். இந்த நிலையில் திரு­மண ஒப்­பந்தம் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்­கான அனைத்து நிபந்­த­னை­களும் முழுமை பெறு­கின்­றது. ஈஜா­புக்­கான வார்த்­தையை மண­மகன் செவி­மெ­டுக்­கின்றார். கபூ­லுக்­கான வார்த்­தை­யினை மண­ம­களின் வலி செவி­மெ­டுக்­கின்றார். அந்த சபையில் திரு­ம­ணத்­திற்­கான அனைத்து நிபந்­த­னை­களும் ஒரே சபையில் இருக்­கின்­றனர். ஆகவே இத்­த­கைய திரு­மண ஒப்­பந்­தத்தை இமாம்கள் அங்­கீ­க­ரிக்­கின்­றனர். காணொளி அழைப்பு (Video Call) மூலம் திரு­மண ஒப்­பந்­தங்­களை அனைத்து வரை­ய­றை­க­ளையும் பேணி நடாத்­து­வது வர­வேற்­கத்­தக்­க­தாக அமை­கின்­றது. மேலும் காணொளி அழைப்பு (Video Call) மூலம் இடம்­பெ­று­கின்ற திரு­ம­ணங்­களில் ஏமாற்றும் நிலமை தோன்­று­வது அரி­தா­ன­தாகும். இதன் மூலம் ஒப்­பந்­தத்தில் பங்­கு­பற்றும் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் உண்மைத் தன்­மையை நேர­டி­யாக அவ­தா­னிக்க முடியும். இவ்­வாறு உண்மைத் தன்மை உறு­திப்­ப­டுத்­தப்­படும் சந்­தர்ப்­பத்தில் இவ்­வொப்­பந்­தத்தை அங்­கீ­க­ரிக்க முடியும் என இமாம் இப்னு பின் பாஸ் (றஹ்) அவர்கள் குறிப்­பி­டு­கின்­றார்கள்.

அதே­நேரம் ஒரு பெண்ணின் வலி வெளி­நாட்டில் இருக்­கிறார், அவரால் தற்­போது நாட்­டிற்கு வந்து வலி சொல்ல முடி­யாத நிலை ஏற்­ப­டு­மாயின் அந்த நிலை­யிலும் இவ்­வாறு காணொளி அழைப்பு (Video Call) மூலம் அந்த திரு­மண ஒப்­பந்­தத்­திற்கு வலி சொல்ல முடியும் என்­பதை நாம் பார்க்­கலாம்.

ஆகவே காணொளி அழைப்பு (Video Call) மூலம் இடம்­பெறும் திரு­மண ஒப்­பந்­தங்கள் மாத்­தி­ரமே ஏற்றுக் கொள்­ளப்­பட்­ட­தாக அமை­கின்­றது. மாற்­ற­மாக குரல் பதிவு அல்­லது மின்­னஞ்சல் மூலம் இடம்­பெறும் திரு­மண ஒப்­பந்­தங்­களை ஏற்றுக் கொள்ள முடி­யாது. காணொளி அழைப்பு மூலம் இடம்­பெறும் திரு­மண ஒப்­பந்­தங்கள் கீழ்­வரும் நிபந்­த­னை­களை பூர­ணப்­ப­டுத்தி இருந்­தாலே அவ்­வொப்­பந்தம் செல்­லு­ப­டி­யா­ன­தாக கரு­தப்­படும்.
• மண­மகன், மண­ம­களின் வலி மற்றும் சாட்­சிகள் ஒரு­வரை ஒருவர் முகம் பார்க்க கூடிய நிலையில் இருத்தல்
• அந்த அமர்வில் இருக்­கின்ற சாட்­சிகள் நம்­பிக்கை விட­யத்தில் உயர் தரத்தில் இருப்­ப­வர்­க­ளாக அமைதல் வேண்டும்.
• ஈஜா­புக்­கான வார்த்­தையை மண­ம­கனும் கபூ­லுக்­கான வார்த்­தையை வலியும் தெளிவான முறையில் (எவ்­வித தடையும் இன்றி) செவி­மெ­டுத்தல்
• திரு­மண ஒப்­பந்தம் என்­பது முக்­கி­ய­மான ஒப்­பந்தம் என்ற அடிப்­ப­டையில் அதனை கட்­டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதனால் அந்த இடத்தில் ஒரு பதிவாளரை வைத்திருப்பது கட்டாயமாகும்.
• இவ்வொப்பந்தத்தில் எவ்­வித விளை­யாட்டும் அல்­லது சந்­தே­கத்­திற்­கி­ட­மான விட­யங்­களும் இடம்­பெ­றா­தி­ருத்தல்.
எனவே இந்த விடயத்தைப் பொறுத்தவரை மிகவும் சரியான கருத்து என்னவென்றால் காணொளி அழைப்பு மூலம் திருமண ஒப்பந்தம் செய்ய அனுமதிக்கப்படுகிறது, இதில் எந்த ஆபத்தும் இல்லை. ஏனென்றால், மணமகன் மற்றும் வலியின் அடையாளம் நிரூபிக்கப்படுகி­றது. மேலும் இரண்டு சாட்சிகளும் ஈஜாப் மற்றும் கபூலை கேட்க முடியும். மேலே கூறியது போல் ஷேக் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் வழங்கிய பத்வாக்களில் இந்த விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.