தனியார் சட்டத்தில் திருத்தம் செய்யும்போது முஸ்லிம் எம்.பி.களிடம் ஆலோசிக்க வேண்டும்

0 38

முஸ்­லிம்­களின் தனியார் சட்டம் மற்றும் ஏனைய முஸ்­லிம்­களின் விட­யங்­களில் அர­சாங்கம் திருத்­தங்கள் மேற்­கொள்ளும் போது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கலந்­து­ரை­யாடி முடிவு எடுக்க வேண்டும் என திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம். எம் ஹரீஸ் கோரிக்கை விடுத்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற ஏற்­று­மதி அபி­வி­ருத்தி திருத்தச் சட்­ட­மூல விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்றுகையில்,

ஜி.எஸ்.பி பிளஸ் என்ற ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் வரிச்­ச­லுகை நிறுத்­தப்­ப­டுமா? என்­கின்ற சந்­தேகம் ஏற்­பட்டு இருக்­கின்­றது. இந்­நி­லையில் பயங்­க­ர­வாத தடைச் சட்டம் இலங்­கையில் உள்ள சிறு­பான்மை மக்­களின் அடிப்­படை உரி­மைகள் மீறப்­ப­டு­கின்ற, மத உரி­மைகள் மீறப்­ப­டு­கின்ற விட­யங்­க­ளுக்­காக ஐரோப்­பிய யூனியன் இலங்கை சம்பந்­த­மான கடும் போக்கை கையாள உள்­ளது.

மத உரிமை சம்­பந்­த­மாக பல விமர்­ச­னங்கள் சர்­வ­தேச மட்­டத்தில் இருக்­கின்­றன. இப்­போது நீதி அமைச்சர் முஸ்­லிம்­களின் தனி­யார் திரு­மணச் சட்­டத்தை திருத்­து­வ­தற்­காக முயற்­சி­களை செய்து வரு­கின்றார். இது தொடர்பில் எங்­க­ளு­டைய 10 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவரை சந்­தித்து பேசி இருந்தோம். அவர் இது விட­ய­மாக மேல­திக சில திருத்­தங்­களை செய்­வ­தாக கூறி­யி­ருக்­கின்றார். ஆனால் இது விட­ய­மாக கிழக்கு மாகாண ஜம்­மி­யத்துல் உலமா சபை தலைவர் மெள­லவி ஆதம்­பாவா என்­னுடன் தொடர்பு கொண்டு எங்­க­ளு­டைய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் இது விட­ய­மாக காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு வேண்­டுகோள் விடுத்­துள்ளார். முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்பினர்களின் விருப்புக்கு மாறாக முஸ்லிம் சமூகம் சார்ந்த எந்தவொரு தீர்மானங்களும் எடுத்துவிட வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.