சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஏறாவூரில் இராணுவத்தினர் வழங்கிய தண்டனை

0 293

றிப்தி அலி

“நீரி­ழிவு நோய்க்­கான மருந்­து­க­ளையும், சிறிது அரி­சி­யையும் வாங்­கு­வ­தற்­காக சைக்­கிளில் சென்ற போது இரா­ணு­வத்­தினர் என்னைப் பிடித்து கையை உயர்த்­தி­ய­படி முழங்­காலில் அம­ரு­மாறு உத்­த­ர­விட்­டனர்” என கூறு­கின்றார் ஏறாவூர் பிர­தே­சத்­தினைச் சேர்ந்த 43 வயது முகமட் இஸ்­மாயில் மர்சூக்.

கொரோ­னா­வினால் வரு­மானம் இல்­லா­ம­லாகி ஏற்­க­னவே கடும் நெருக்­க­டியில் உள்ள நிலை­யி­லேயே இவ்­வாறு தாக்­கப்­பட்டு, அவ­மா­னப்­ப­டுத்­த­லுக்கு உள்­ளாவேன் என ஒரு­போதும் எதிர்­பார்க்­க­வில்லை எனவும் அவர் தனது ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்­தினார்.

“நான் ஒரு நோயாளி என சிங்­க­ளத்தில் அவர்­க­ளிடம் தெரி­வித்தேன். மருந்து வாங்­கு­வ­தற்­காக வெளியில் செல்ல அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது என குறிப்­பிட்­டது மாத்­தி­ர­மன்றி எனது மருந்துப் பெட்­டி­யையும் அவர்­க­ளிடம் காண்­பித்தேன். ஆனால் இரா­ணு­வத்­தினர் அதனை செவி­ம­டுக்­காமல் ஆடு, மாடு­களை அடிப்­பது போல அடித்­தனர்” என முகமட் இஸ்­மாயில் மர்சூக் கூறினார்.

கடந்த ஒரு மாதங்­க­ளுக்கு மேலாக நாட­ளா­விய ரீதியில் பிரயாணத் தடை அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. எனினும் அத்­தி­ய­வா­சிய சேவை­களை மேற்கொள்வதற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

சுகா­தார வழி­மு­றை­களைப் பேணி சில்­லறைக் கடைகள் மற்றும் பாம­சி­களை திறப்­ப­தற்கும், அங்கு பொது­மக்கள் பொருட் கொள்­வ­னவில் ஈடு­ப­டு­வ­தற்கும் அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

நடந்­தது என்ன?
இதற்­க­மைய, நீரி­ழிவு நோய்க்­கான மருந்து கொள்­வ­ன­விற்கு சென்­றவர் உள்­ளிட்ட பொது­மக்கள் சிலரை கடந்த சனிக்­கி­ழமை (19) காலை ஏறாவூர் – “மிச் நகர்” எனும் பகு­தியில் இரா­ணு­வத்­தினர் கைகளை உயர்த்­தி­ய­வாறு முழங்­காலில் இருக்க வைத்து தண்­டித்த சம்­பவம் தொடர்­பான புகைப்­ப­டங்கள் சமூக ஊட­கங்க­ளான பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ்அப் போன்­ற­வற்றில் வைர­லா­கின.

இத­னை­ய­டுத்து இரா­ணு­வத்­தி­னரின் இந்த செயலை இன, மத, மொழி வேறு­பா­டின்றி பல்­வேறு தரப்­பி­னரும் விமர்­சிக்கத் தொடங்­கினர். எனினும், “குறித்த தண்­டனை வீதிக்கு வந்­த­தற்­காக கொடுக்­கப்­பட்­டது அல்ல. உண­வ­கத்­தினை திறந்து வியா­பாரம் செய்­த­மைக்­கா­கவே வழங்­கப்­பட்­டது” என சம்­பவ இடத்தில் நின்­று­கொண்டு இருந்த பிர்தௌஸ் முஹம்மத் என்­பவர் கூறு­கின்றார்.

இது தொடர்பில் அவர் பேஸ்­புக்கில் பதி­வொன்­றினை பதி­வேற்­றி­யி­ருந்தார். குறித்த பதிவில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

“பிர­யாணத் தடைக்கு மத்­தியில் திறக்­கப்­பட்ட உண­வ­கத்தின் வேலை­யாட்­களும் அதில் உள்ளே இருந்து உணவு உண்­ட­வர்­க­ளுமே இந்த தண்­டனை பெற்­ற­வர்­க­ளாவர்.

இரா­ணு­வத்தினர் மூன்று முறை வந்து இவர்­களை எச்­ச­ரிக்கை செய்­தனர். இதனை மீறி ஹோட்­டலில் உணவு அருந்திகொண்­டி­ருந்த போது இரா­ணு­வத்­தினர் வரு­வதை கண்டு அவர்கள் வரும் முன் கதவை சாத்­தி­விட்டு உள்ளே அரை மணி நேர­மாக திறக்­காமல் அவர்­களை கோபப்­ப­டுத்­தி­னார்கள்.

இருந்தும் அந்த இடத்தில் ஈரம் இருக்கும் நெஞ்­ச­மா­கத்தான் படை வீரர்கள் நடந்­து­கொண்­டார்கள்” எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கண்­ட­னங்கள்
எவ்­வா­றா­யினும் இந்த விடயம் தொடர்­பான விமர்­சனம் ஊட­கங்­களில் தொடர்ந்­து­கொண்டே இருந்­தன. இதே­வேளை, “நாடு சர்­வ­தி­கா­ரத்தை நோக்கிச் செல்­வ­தையே ஏறாவூர் பொது­மக்கள் இராணு­வத்­தி­னரால் முழங்­காலில் வைக்­கப்­பட்­டமை எடுத்துக் காட்­டு­கி­றது” என ஐக்­கிய மக்கள் சக்­தியின் திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் கூறினார்.

“ஏறாவூர் சம்­பவம் சட்­டத்­துக்கு புறம்­பா­னது. இந்த நட­வ­டிக்கை மனி­தா­பி­மா­ன­மற்­றது. வீதியில் முழங்­காலில் வைக்­கப்­பட்ட இந்த நிகழ்வு – சம்­பந்­தப்­பட்­ட­வர்­களின் சுய கௌர­வத்தைப் பாதித்­தி­ருக்­கி­றது” எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பய­ணத்­தடை அமுலில் உள்­ள­போது ஆயி­ரக்­க­ணக்­கானோர் பயணம் செய்­வதைக் காண முடி­வ­தா­கவும், ஏறா­வூரில் தமது அத்­தி­ய­ாவ­சியத் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்­காக வெளியில் வந்­த­வர்கள் இவ்­வாறு இரா­ணு­வத்­தி­னரால் தண்­டிக்­கப்­பட்­டுள்­ளமை கண்­டிக்­கத்­தக்­கது என்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தனது நிலைப்­பாட்டை பதிவு செய்தார்.

“இரா­ணு­வத்தால் வழங்­கப்­பட்ட இந்தத் தண்­டனை, இழி­வான ஒரு செயற்­பா­டாகும். இந்த நட­வ­டிக்கை சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான உடன்­ப­டிக்­கையின் படி ஒரு குற்­ற­மாகும்” என இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் முன்னாள் ஆணை­யா­ளரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான அம்­பிகா சற்­கு­ண­நாதன் குறிப்­பி­டு­கின்றார்.

“இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் 11ஆவது உறுப்­பு­ரை­யா­னது மனி­தா­பி­மா­ன­மற்ற அல்­லது இழி­வான தண்­ட­னையை தடை­செய்­கி­றது என அவர் மேலும் சுட்­டிக்­காட்­டினார்.

நகர சபை மீதான குற்­றச்­சாட்டு
இரா­ணு­வத்­தினை ஊர் பிர­தே­சத்­திற்குள் அழைத்து வந்­தது ஏறாவூர் நகர சபை என்ற குற்­றச்­சாட்­டொன்று இந்த சம்­பத்­தினை அடுத்து முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது.
அது மாத்­தி­ர­மல்­லாமல், ஏறாவூர் பிர­தே­சத்தில் கட­மை­யாற்றும் இரா­ணு­வத்­தி­ன­ருக்­காக நகர சபை­யினால் விசேட வாக­ன­மொன்றும் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பொது­மக்­களை முழங்­கா­லிட வைத்த சம்­பவம் ஏறாவூர் மக்கள் மத்­தியில் பாரிய அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்­டு­கின்­றனர்.
எனினும் இந்த குற்­றச்­சாட்­டுகள் அனைத்­தி­னையும் ஏறாவூர் நகர பிதா எம்.எஸ்.நளீம் நிரா­க­ரிக்­கின்றார்.

“ஏறாவூர் நகர சபைக்­குட்­பட்ட பிர­தே­சங்­களில் கொரோனா வைரஸின் பரவல் அதி­க­ரித்­துள்­ளது. இதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான தேவை­யான உத­வி­களை வழங்­கு­வ­தற்­கா­கவே இரா­ணு­வத்­தினர் வர­வ­ழைக்­கப்­பட்­டனர்” என்றார் நகர பிதா.

இந்த பணிக்­காக இரா­ணு­வத்­தி­ன­ருக்கு தேவைப்­பட்ட வாகன வச­திகள் இல்­லா­மை­யினால் சபையின் அனு­ம­தி­யுடன் ஏறாவூர் நகர சபை­யினால் வாக­ன­மொன்று வழங்­கப்­பட்­டது என அவர் குறிப்­பிட்டார்.

“எவ்­வா­றா­யினும், இந்த சம்­பவம் தவ­று­த­லாக இடம்­பெற்ற ஒன்­றாகும். இதனைப் பயன்­ப­டுத்தி சிலர் குளிர்­காய முயற்­சி­கின்­றனர். இதனை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது என நகர பிதா நளீம் சுட்­டிக்­காட்­டினார்.

“இந்த சம்­ப­வத்­தினை அடுத்து எமது பிர­தே­சத்தின் கொரோனா ஒழிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்க பாது­காப்பு படை­யினர் தயக்கம் வெளி­யி­டு­கின்­றனர். இதனால், எமது பிர­தேசம் இன்று கொரோனா பரவல் விட­யத்தில் பாரிய நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கி­யுள்­ள­தாக அவர் மேலும் குறிப்­பிட்டார்.

இரா­ணுவ விசா­ரணை
சுகா­தார துறை­யி­ன­ருடன் இணைந்து நாட்டில் கொரோனா வைர­ஸினை கட்­டுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு இரா­ணுவம் தலைமை தாங்கி பல்­வேறு செயற்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­­கின்­றது.

இதனால் கொவிட் – 19 தொடர்­பான தேசிய செய­ல­ணிக்கு இரா­ணுவ தள­பதி ஜெனரல் சவேந்­திர சில்வா தலைமை வகிக்­கின்றார். இதனால் அர­சாங்­கத்தை விமர்­சிப்­ப­வர்கள் பொதுச் சுகா­தார நெருக்­க­டிக்கு படை­யி­னரை பயன்­ப­டுத்­து­வதை கடு­மை­யாக கண்­டித்து வரு­கின்­றனர்.

இலங்­கையின் 22 மில்­லியன் சனத்­தொ­கையில் 10 சத­வீ­த­மாக உள்ள முஸ்­லிம்கள் மீதான இலக்­கு­வைக்­கப்­பட்ட தாக்­கு­தல்கள் குறித்து ஐக்­கிய நாடுகள் உட்­பட சர்­வ­தேச நிறு­வ­னங்கள் தொடர்ச்­சி­யாக கரி­சனை செலுத்தி வரு­கின்ற தரு­ணத்தில் இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இதனால், குறித்த சம்­ப­வத்தில் ஈடு­பட்ட இரா­ணு­வத்­தினர் உட­ன­டி­யாக (சனிக்­கி­ழமை மாலை) பணி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும், இது தொடர்பில் இரா­ணுவ பொலிஸார் ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களைத் தொடங்­கி­யுள்­ள­தாக இரா­ணுவம் தெரி­வித்­தது.

இரா­ணு­வத்­தினர் ஒரு சிலரின் முறை­யற்ற நடத்தை குறித்து தங்­க­ளது கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதை அடுத்து, இரா­ணுவ தள­ப­தியின் உத்­த­ர­வுக்கு இணங்க இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் இரா­ணுவம் விடுத்­துள்ள விசேட அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

“இந்த சம்­பவம் தொடர்பில் சுமார் நான்கு மணித்­தி­யா­ல­மாக இரா­ணுவ தலை­மை­ய­கத்தில் வாக்­கு­மூலம் கொடுத்­த­வண்ணம் உள்ளேன். அந்த இடத்தில் நான் இருந்­தது நல்­லது தானே இல்லை என்றால் உண்மை புதைந்து இருக்கும்” என சம்­பவ இடத்தில் நின்­று­கொண்டு இருந்த பிர்தௌஸ் முஹம்மத், தனது முகநூலில் கடந்த 20ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை பதி­வேற்­றி­யி­ருந்தார்.

இதே­வேளை, கொழும்பு வீதி­களில் வாக­னங்கள் நிறைந்து காணப்­படும் படத்­தையும் ஏறா­வூர் சம்­ப­வத்தின் படத்­தையும் டுவிட்டர் பதி­வாக வெளியிட்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், “இந்த அரசாங்கத்தை பொறுத்தவரை ஒரு நாடு இரண்டு சட்டங்கள் என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

“குறித்த படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதன் காரணமாகவே இராணுவம் சம்பவம் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டது” எனவும் அவர் கூறினார்.

அவர்­களால் இந்த சம்­ப­வத்தை தற்­போது விசா­ரணை செய்ய முடி­யு­மென்றால் யுத்­தத்தின் இறு­தியில் இடம்­பெற்­ற­தாக குற்­றம்­சாட்­டப்­படும் மனித குலத்­திற்கு எதி­ரான குற்­றங்கள் குறித்து ஏன் அவர்­களால் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள முடி­யாது எனவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா. சாணக்­கியன் கேள்வி எழுப்­பினார்.
எவ்­வா­றா­யினும், இந்த சம்­பவம் தொடர்பில் நீதி­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு குற்­ற­வா­ளிகள் தண்­டிக்கப்­பட வேண்டும் என்­பதே அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்­பாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.