ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் 10 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலி

0 489

(எம்.ஐ.அப்துல் நஸார்)
முக­மூடி அணிந்த துப்­பாக்­கி­தா­ரிகள் வடக்கு ஆப்­கா­னிஸ்­தானில் கண்­ணி­வெடி அகற்றும் அமைப்பின் வளா­கத்தில் மேற்­கொண்ட தாக்­கு­தலில் குறைந்­தது 10 பணி­யா­ளர்கள் கொல்­லப்­பட்­ட­தோடு 16 பேர் காய­ம­டைந்­தனர்.

பக்லான் மாகா­ணத்தில் உள்ள ஹாலோ டிரஸ்ட் தொண்டு முகாம் மீது கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு இத் தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­போது 110 பணி­யா­ளர்கள் தங்கி இருந்­தனர்.

இங்­கி­லாந்தை தள­மாகக் கொண்ட அவ்­வ­மைப்பின் தலைமை நிறை­வேற்­ற­தி­காரி ஜேம்ஸ் கோவன், சர்­வ­தேச ஊட­க­மொன்­றிடம் தகவல் தெரி­விக்­கையில், துப்­பாக்­கி­தா­ரிகள் ‘ஒரு குறிப்­பிட்ட இனக்­கு­ழுவைச் சேர்ந்­த­வர்­களை தனி­யாக இலக்கு வைத்­துள்­ளனர்’ எனத் தெரி­வித்தார்.

புதன்­கி­ழமை இந்தத் தாக்­கு­த­லுக்கு ஐ.எஸ் பயங்­க­ர­வாத அமைப்பு உரிமை கோரி­யுள்­ள­தாக SITE புல­னாய்வு கண்­கா­ணிப்புக் குழு தெரி­வித்­துள்­ளது.

இதற்கு முன்­ன­தாக, இத் தாக்­கு­த­லுக்கு தலிபான் அமைப்பே பெறுப்பு என அர­சாங்கம் குற்றம் சாட்­டி­யி­ருந்­தது, எனினும் குறித்த ஆயுதக் குழு அதனை மறுத்­தி­ருந்­தது.

குறித்த தினத்தில் அந்த பகு­தியில் கண்ணி வெடி­களை அப் பிர­தே­சத்­தி­லி­ருந்து அகற்­றி­யதன் பின்னர் பணி­யா­ளர்கள் வளா­கத்தில் ஓய்­வெ­டுத்துக் கொண்­டி­ருந்த போது மேற்­கொள்­ளப்­பட்ட இந்தத் தாக்­கு­தலை முடி­வுக்குக் கொண்­டு­வர உண்­மையில் தலி­பானின் போரா­ளிகள் உத­வி­ய­தாக ஹாலோ டிரஸ்ட் அமைப்பு தெரி­வித்­தி­ருந்­தது.

‘உண்­மையில் உள்ளூர் தலி­பான்கள் எமக்கு உத­வி­னார்கள், தலி­பான்­களும் பொறுப்பை மறுத்­து­விட்­டனர் – எனவே இது வேறு அமைப்­பினால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லாக இருக்­கலாம் என்­பது என் சந்­தேகம்’ என கோவன் தெரி­வித்தார்.

ஐந்து அல்­லது ஆறு ஆயு­த­தா­ரிகள் வளாகச் சுற்­று­மதில் மேலாக ஏறி உள்ளே வந்து அனை­வ­ரையும் ஒன்று சோர்த்து ஹசாரா இனத்­த­வர்கள் யாரேனும் இருக்­கின்­ற­னரா என வின­வி­ய­தாக தாக்­கு­தலில் இருந்து தப்­பிய ஒருவர் சர்­வ­தேச ஊட­க­மொன்­றிடம் தெரி­வித்தார்

‘அதற்கு யாரும் பதி­ல­ளிக்­க­வில்லை,’ என தன்னை அடை­யா­ளப்­ப­டுத்த விரும்­பாத ஒருவர் தெரி­வித்தார். துப்­பாக்கிச் சூடு நடத்­தி­யவர் வளாகத் தலை­வ­ரிடம் அவரை யாரென்று கூறு­மாறு கேட்­டு­விட்டு அவரைச் சுட்டுக் கொன்றார்.

‘பின்னர் ஆயு­த­தா­ரி­களுள் ஒருவன் ‘அனை­வ­ரையும் கொல்­லுங்கள்’ என்று கூறினான், அவர்கள் அனை­வரும் எங்கள் மீது சர­மா­ரி­யாக துப்­பாக்கிச் சூடு நடத்­தி­னார்கள், நாங்கள் அனை­வரும் தப்­பிக்க முயன்றோம். சிலர் கொல்­லப்­பட்­டனர், என்னைப் போலவே சிலர் காய­ம­டைந்­தனர்.’ என அவர் மேலும் தெரி­வித்தார்.

ஆப்­கா­னிஸ்­தானின் 30 மில்­லியன் மக்கள் தொகையில் 15 சத­வி­கிதம் வரை­யானோர் ஷியா ஹசாரா சமூ­கத்­தி­ன­ராவர். இச் சமூ­கத்­தினர் ஐ.எஸ் பயங்­க­ர­வா­தி­காளால் தொடர்ச்­சி­யாக இலக்கு வைக்­கப்­ப­டு­கின்­றனர்.

தாக்குதலுக்குப் பின்னர் உயிர்பிழைத்த தொழிலாளர்களுள் பெரும்பாலானோர் அருகிலுள்ள கிராமங்களுக்கு தப்பி ஓடிவிட்டதாகவும், அவர்களுக்கு உதவுவதற்காக பொலிஸார் செயற்பட்டு வருவதாகவும் அப்பகுதியில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.