பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து அணிக்கு பாதுகாப்பு வழங்கிய இரு பொலிஸார் சுட்டுக் கொலை

0 446

(எம்.ஐ.அப்துல் நஸார்)
வட­மேற்கு பாகிஸ்­தானில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் பணி­யா­ளர்­களைப் பாது­காக்க நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த இரண்டு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களை மோட்டார் சைக்­கிளில் சென்ற துப்­பாக்­கி­தா­ரிகள் சுட்டுக் கொன்­ற­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

கைபர் பக்­துன்க்வா மாகா­ணத்தின் மர்தான் மாவட்­டத்தில் கடந்த புதன்­கி­ழமை போலியோ தடுப்பு மருந்து வழங்கும் குழு­வி­ன­ருக்கு பாது­காப்பு அளித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் கடமை முடிந்து பொலிஸ் நிலை­யத்­திற்கு திரும்பிக் கொண்­டி­ருக்­கையில் இந்த தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

சம்­பவ இடத்தில் பொலிசார் இரு­வரும் கொல்­லப்­பட்­ட­தோடு, தாக்­குதல் நடத்­தி­ய­வர்கள் அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்­ளனர். போலியோ தடுப்பு மருந்து வழங்கும் அனை­வரும் பாது­காப்­பாக உள்­ளனர். குற்­ற­வா­ளி­களைக் கண்­டு­பி­டிப்­ப­தற்­காக தேடுதல் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந்த ஆண்டு இறு­திக்குள் போலியோ நோயை முற்­றாக ஒழிப்­ப­தற்­காக நாடு தழு­விய திட்­டத்­தினை பாகிஸ்தான் ஆரம்­பித்து இரண்டு நாட்­க­ளுக்கு பின்னர் நடத்­தப்­பட்ட இந்தத் தாக்­கு­த­லுக்கு உட­ன­டி­யாக எந்த அமைப்பும் உரிமை கோர­வில்லை.

சுமார் 260,000 முன்­னிலை பணி­யா­ளர்­களின் உத­வி­யுடன் ஐந்து வய­திற்­குட்­பட்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான குழந்­தை­க­ளுக்கு தடுப்பு மருந்து வழங்­கு­வதே இந்த வாராந்தத் திட்­டத்தின் நோக்­க­மாகும்.

போலியோ தடுப்பு மருந்து செயற்­பாடு ஒரு மேற்­கத்­திய சதித்­திட்­டத்தின் ஒரு பகுதி எனத் தெரி­வித்து பாகிஸ்தான் போரா­ளிகள் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் பணி­யா­ளர்கள் மீதும் அவர்­க­ளுக்கு பாது­காப்பு வழங்கும் பொலிஸார் மீதும் தொடர்ந்து தாக்­கு­தல்­களை நடத்­து­கின்­றனர்.

2011 ஆம் ஆண்டு பாகிஸ்­தானில் அமெ­ரிக்க கமாண்­டோக்­களால் கொல்­லப்­பட்ட அல்-­கொய்தா தலைவர் ஒசாமா பின்­லே­டனை கண்­டு­பி­டிப்­ப­தற்­கான சூட்­சு­ம­மாக சிஐஏ இனால் ஒரு போலி ஹெப­டைடிஸ் தடுப்­பூசி பிரச்­சாரம் மேற்­கொள்­ளப்­ப­டது என்­பது தெரி­ய­வந்­ததை அடுத்து இந்த தாக்­கு­தல்கள் அதி­க­ரித்­தன.

கடந்த ஜன­வ­ரியில், மாகா­ணத்தில் இதே­போன்­ற­தொரு துப்­பாக்கிச் சூட்டில் ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் கொல்­லப்­பட்டார். கடந்த மார்ச் மாதத்தில், எல்லைப் பகு­தி­களில் போலியோ தடுப்பு மருந்து திட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த மூன்று பெண்­களை துப்­பாக்­கி­தா­ரிகள் கொன்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.