நளீமியாவுக்கு எதிராக சாட்சியமளிக்குமாறு கூறி சிறையில் சித்திரவதை

அஹ்னாப் சார்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சுட்டிக்காட்டு

0 550

(எம்.எப்.எம்.பஸீர்)
“நவ­ரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவில் நீண்­ட­காலம் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில், குறித்த கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோ­த­மா­னது எனக் கூறி உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பின் 17ஆவது உறுப்­பு­ரை­யுடன் இணைத்து வாசிக்­கப்­படும் அர­சி­ய­ல­மைப்பின் 126 ஆவது உறுப்­பு­ரைக்கு அமைய, வெள்­ள­வத்­தையைச் சேர்ந்த சட்­டத்­த­ரணி செல்­லையா தேவ­பாலன், அஹ்னாப் சார்பில் இம்­ம­னுவை தாக்கல் செய்­துள்ளார்.

எஸ்.சி.எப்.ஆர். 114/ 2021 எனும் இலக்­கத்தின் கீழ் உயர் நீதி­மன்றில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள இம்­மனு தொடர்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கலா­நிதி கனக ஈஸ்­வ­ரனின் கீழ் வாதங்கள் உயர் நீதி­மன்றில் முன் வைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

பாது­காப்பு செயலர் கமல் குண­ரத்ன, பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன, பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வு பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன டி அல்விஸ், குறித்த பிரிவின் வவு­னியா கிளை பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் கே.கே.ஜே. அனு­ர­சாந்த, குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

26 வய­தான கவிஞர் அஹ்னாப், கவி­ஞ­ரா­கவும் ஆசி­ரி­ய­ரா­கவும் செயற்­ப­டு­வ­தா­கவும் அவர், பேரு­வளை ஜாமியா நளீ­மியா கலா­பீ­டத்தில் தனது கல்­வியை நிறைவு செய்­துள்­ள­தா­கவும் மனு­தாரர் சார்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்நிலையில் கடந்த 2020 மே 16ஆம் திகதி இரவு 8 மணி­ய­ளவில், சிலா­வத்­துறை, பண்­டா­ர­வெ­ளியில் அமைந்­துள்ள வீட்டில் வைத்து 4 ஆம் பிர­தி­வா­தி­யான வவு­னியா ரி.ஐ.டி. கிளை பொறுப்­ப­தி­கா­ரி­யினால் கைது செய்­யப்­பட்­ட­தாக மனுவில் கூறப்­பட்­டுள்­ளது.

இதன்­போது அவ­ரது வீட்­டி­லி­ருந்து 50 இற்கும் அதி­க­மான நவ­ரசம் கவிதை தொகுப்பு புத்­த­கங்­களும் மேலும் சில புத்­த­கங்­களும் பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­ட­தாக மனு­தாரர் மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

முதலில் கோட்டை நீதி­மன்றில் உள்ள பீ 13101/19 வழக்கு தொடர்பில் அஹ்னாப் கைது செய்­யப்­பட்­ட­தாக கூறப்­பட்­டாலும், கடந்த மார்ச் 3ஆம் திகதி பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோட்டை நீதி­மன்றின் குறித்த வழக்கில் அஹ்னாப் சந்­தேக நப­ரில்லை என நீதி­மன்றில் அறி­வித்­தி­ருந்தார்.

எனினும் அவ­ருக்கு எதி­ராக புதுக் கடை நீதிவான் நீதி­மன்றில் உள்ள வழக்­கொன்று தொடர்பில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ரணை செய்­வ­தாக பிர­சாந்த ரத்­னா­யக்க எனும் ரி.ஐ.டி.யின் உப பொலிஸ் பரி­சோ­தகர் ஊடாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. என மனு­தாரர் தனது மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இவ்­வா­றான நிலையில் நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அஹ்னாப், தடுப்புக் காவலில் பெரும்­பா­லான நேரங்­களில் கை விலங்­கிட்டே வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், நித்­தி­ரைக்கு செல்லும் நேரம் கூட அவ்­வா­றன நிலை­யி­லேயே அவர் வைக்­கப்பட்­டுள்­ள­தா­கவும் மனுவில் கூறப்­பட்­டுள்­ளது. அத்­துடன் கைது செய்­யப்­படும்போது கூறப்­பட்ட கார­ணத்தை விட, தற்­போது, பேரு­வளை ஜாமியா நளீ­மியா கலா­பீ­­டத்தில் அடிப்­ப­டை­வாதம் போதனை செய்­யப்­பட்­ட­தாக ஒப்­புதல் வாக்கு மூலம் ஒன்­றினை வழங்­கு­மாறு பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் அஹ்­னாபை சித்­தி­ர­வதை செய்­வ­தா­கவும் மனுவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தடுப்புக் காவலில் உள்ள அஹ்­னாபை அங்கு எலி கடித்­துள்­ள­தா­கவும் அவ­ருக்கு முறை­யான சிகிச்­சைகள் கூட அளிக்­கப்­ப­ட­வில்லை என அம்­ம­னுவில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் உள்ள பீ 44230/8/20 எனும் வழக்கில் தனக்கு எதி­ர­கவே ஒப்­புதல் வாக்கு மூலம் வழங்க அஹ்னாப் கட்­டா­யப்­ப­டுத்­த­ப்­படு­வ­தா­கவும் மனுவில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் பயங்­கர­வாத புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர், அஹ்­னாபின் தந்­தை­யிடம், ஜாமியா நளி­மீயா கலா­பீ­டத்தில் அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­பட்­ட­தாக வாக்குமூலம் வழங்க அஹ்­னாபை சம்­ம­திக்க வைக்­கு­மாறு பேசி­ய­தா­கவும், அவ்­வாறு வாக்குமூலம் அளித்தால் சிறிது நாட்­களில் அவரை விடு­விக்க முடியும் என கூறி­ய­தா­கவும் மனுவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் அஹ்­னாபை அவ­ரது சட்­டத்­த­ர­ணிகள் பார்வையிட முதலில் அனு­ம­திக்­கப்­ப­டாத நிலையில், பின்னர் வழங்­கப்­பட்ட அனு­ம­தியின்போது சட்­டத்­த­ர­ணி­யுடன் அவர் உரை­யா­டு­வதை ரி.ஐ.டி. அதி­கா­ரிகள் ஒலிப்­ப­திவு செய்­த­தா­கவும் மனுவில் கூறப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான பின்­ன­ணியில் நீண்­ட­காலம் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அஹ்­னாபின், அரசியல் அமைப்பு ஊடாக உறுதி செய்­யப்­பட்­டுள்ள சிந்­தனை செய்யும், மனச் சாட்­சியை பின்­பற்றும் மதச் சுதந்­திரம் (10ஆம் உறுப்­புரை), சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளா­காமல் இருப்­ப­தற்­கான சுதந்­திரம் (11ஆம் உறுப்­புரை), சமத்­து­வத்­துக்­கான உரிமை (12ஆம் உறுப்­புரை), எதேச்­ச­தி­கா­ர­மாக கைது செய்­யப்­ப­டா­மலும், தடுத்து வைக்­கப்­ப­டா­மலும் தண்­டிக்­கப்­ப­டா­மலும் இருப்பதற்கான உரிமை (13ஆம் உறுப்புரை), பேச்சு, தடையின்றி நடமாடுவதற்கான சுதந்திரம் (14ஆம் உறுப்புரை) உள்ளிட்டவை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பறிவிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றைக் கோரியுள்ளனர்.

அத்துடன் அஹ்னாபின் தடுப்புக் காவலுக்கு எதிராக இடைக்கால தடை விதித்து அவரை உடனடியாக விடுவிக்கவும், மனுவை விசாரணை செய்து நட்ட ஈடாக 100 மில்லியன் ரூபாவைப் பெற்றுத் தருமாறும் மனுதாரர் சார்பில் உயர் நீதிமன்றிடம் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவூடாக கோரப்பட்டுள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.