கவிஞர் அஹ்னாப் சிறையில் உடல், உள ரீதியாகவும் பாதிப்பு

எலியும் கடித்துள்ளது; மன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு

0 272

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இளம் கவி­ஞ­ரான அஹ்னாப் ஜெஸீமை சிறையில் எலி கடித்­துள்­ளது. அவர் சிறு­நீ­ரக நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ளார். இதனால் அவர் உள­வியல் ரீதி­யிலும் உட­லியல் ரீதி­யிலும் பாதிக்­கப்­பட்­டுள்ளார். அவ­ருக்கு தகுந்த வைத்­திய உத­வி­களை வழங்க வேண்டும் என அஹ்னாப் ஜெஸீமின் சார்பில் கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் ஜய­சே­கர கோரிக்கை விடுத்தார்.

அஹ்னாப் ஜெஸீம் எழு­திய நவ­ரசம் எனும் புத்­த­கத்தில் தீவி­ர­வாத கருத்­துகள் அடங்­கி­யுள்­ள­தாக அவர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இது அப்­பட்­ட­மான பொய். இந்தப் புத்­தகம் சிங்­கள மொழியில் மொழி பெயர்க்­கப்­பட்­டுள்­ளது. இந்தப் புத்­த­கத்தில் தீவி­ர­வா­தத்தைப் போதிக்கும் எந்தக் கருத்தும் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என்றும் சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் ஜய­சே­கர சுட்­டிக்­காட்­டினார்.

சட்­டத்­த­ர­ணியின் கோரிக்­கையை ஏற்­றுக்­கொண்ட கொழும்பு பதில் நீதிவான் திலானி பெரேரா, கவிஞர் அஹ்னாப் ஜெஸீ­முக்கு தகுந்த வைத்­திய ஏற்­பா­டு­களை செய்து கொடுக்­கு­மாறு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வுரை வழங்­கினார்.

இவரது வழக்கு விசாரணைகளை சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர தன்னிச்சையாக முன்வந்து ஆஜராகி நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வாதங்களை பரிசீலித்த நீதிவான் வழக்கினை மார்ச் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.