கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர்

0 137

கல்­முனை மாந­கர சபையின் புதிய பிரதி மேய­ராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பி­ன­ரான ரஹ்மத் மன்சூர் போட்­டி­யின்றித் தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

கல்­முனை மாந­கர சபையின் பிரதி மேய­ராகப் பதவி வகித்­து­வந்த காத்­த­முத்து கணேஷ் மாந­கர சபையின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­மை­யினால் அப்­ப­தவி வெற்­றி­ட­மா­ன­தை­ய­டுத்து, பிரதி மேயரை தெரிவு செய்­வ­தற்­கான விசேட அமர்வு நேற்று மாந­கர மேயர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஏ.எம்.றகீப் தலை­மையில், நடை­பெற்­றது.

இதன்­போது பிரதி மேயரை தெரிவு செய்­வ­தற்­கான தேர்­தலை கிழக்கு மாகாண உள்­ளூ­ராட்சி ஆணை­யாளர் எம்.மணி­வண்ணன் நடாத்­தி­வைத்தார்.
தேர்­த­லுக்­கான வேட்­பா­ளர்­களை முன்­மொ­ழி­யு­மாறு அவர் சபையைக் கோரி­ய­போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் ஏ.ஆர்.அமீர், மு.கா.உறுப்­பினர் ரஹ்மத் மன்­சூரின் பெயரை பிரே­ரித்தார். அதனை மு.கா. உறுப்­பினர் சட்­டத்­த­ரணி ரொஷான் அக்தர் ஆமோ­தித்தார். இதன்­போது வேறு பெயர்கள் எதுவும் முன்­மொ­ழி­யப்­ப­டா­ததால் வாக்­கெ­டுப்­பின்றி, பிரதி மேய­ராக ரஹ்மத் மன்­சூரை பிர­க­டனம் செய்­வ­தாக கிழக்கு மாகாண உள்­ளூ­ராட்சி ஆணை­யாளர் எம்.மணி­வண்ணன் அறி­வித்தார்.

இந்த சபை அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உள்­ளிட்ட ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பி­னர்­களும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி உறுப்­பி­னரும் ஹெலி­கொப்டர் மற்றும் மான் சின்­னங்­களைக் கொண்ட சுயேச்சைக் குழுக்­களின் உறுப்­பி­னர்­களும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

அதே­வேளை, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தமிழர் விடு­தலைக் கூட்­டணி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, தேசிய காங்­கிரஸ் மற்றும் சாய்ந்­த­ம­ருது சுயேச்­சைக்­குழு உறுப்­பி­னர்கள் சபையில் பிர­சன்­ன­மா­கி­யி­ருக்­க­வில்லை.

ரஹ்மத் மன்சூர், பிரதி மேய­ராக தெரிவு செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து, அவ­ருக்கு மாந­கர மேயர் ஏ.எம்.றகீப் உட்­பட உறுப்­பி­னர்கள் பலரும் வாழ்த்­துக்­களை தெரி­வித்து உரை­யாற்­றினர்.

இந்த சபை அமர்­வின்­போது கிழக்கு மாகாண உள்­ளூ­ராட்சி உதவி ஆணை­யாளர் ஏ.எல்.எம்.இர்ஷாத், கல்­முனை மாந­கர ஆணை­யாளர் எம்.சி.அன்சார், கணக்­காளர் ஏ.எச்.தஸ்தீக் ஆகி­யோரும் காரை­தீவு பிர­தேச சபை தவி­சாளர் கே.ஜெய­சிறில் உள்­ளிட்ட பல பிர­மு­கர்­களும் பெரு­ம­ள­வி­லான பொது­மக்­களும் பார்­வை­யா­ளர்­க­ளாகக் கலந்து கொண்­டனர்.

பிரதி மேயர் தெரிவை முன்­னிட்டு சபை அமர்வு இடம்­பெற்ற கல்­முனை நகர மண்­டப பகு­தியில் பொலிஸார் பாது­காப்புக் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். சபை அமர்வு நிறை­வுற்ற பின்னர் ஆத­ர­வா­ளர்­க­ளினால் பிரதி மேயர் ரஹ்மத் மன்­சூ­ருக்கு பெரும் வர­வேற்­ப­ளிக்­கப்­பட்­டது. திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பிரதித் தலை­வ­ரு­மான சட்­டத்­த­ரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கல்­முனை மாந­கர சபைக்கு விஜயம் செய்து, புதிய பிரதி மேயர் ரஹ்மத் மன்­சூ­ருக்கு வாழ்த்துத் தெரி­வித்தார்.
பிரதி மேய­ராக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ரஹ்மத் மன்சூர், முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்­சூரின் புதல்­வரும் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் கேட்முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பேரனுமாவார் என்பதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய ஒருங்கிணைப்பு செயலாளராகவும் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளராகவும் பணியாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • அஸ்லம் எஸ்.மௌலானா

Leave A Reply

Your email address will not be published.