இலங்கையில் நாளாந்தம் புற்று நோயால் 38 பேர் மரணம்

தினமும் 64 புதிய நோயாளர்கள் கண்டு பிடிப்பு

0 327

இலங்­கையில் தினமும் 64 புதிய புற்று நோயா­ளர்கள் கண்­ட­றி­யப்­ப­டு­கின்ற அதே­வேளை தினமும் 38 பேர் புற்று நோயினால் மர­ணிப்­ப­தா­கவும் தேசிய புற்று நோய் கட்­டுப்­பாட்டு நிகழ்ச்­சித்­திட்­டத்தின் பணிப்­பாளர் டாக்டர் ஜானகி விதா­ன­பத்­தி­ரண தெரி­வித்­துள்ளார்.இலங்­கையில் அதிக மர­ணங்கள் சம்­ப­விப்­ப­தற்­கான இரண்­டா­வது கார­ணி­யாக புற்று நோய் விளங்­கு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

தற்­ச­மயம் இலங்­கையில் மொத்­த­மாக 56054 புற்று நோயா­ளர்கள் உள்­ளனர். 2018 இல் மொத்­த­மாக 23530 புற்று நோயா­ளர்கள் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­த­துடன் இவர்­களில் 14013 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என தேசிய புற்று நோய் கட்­டுப்­பாட்டு நிகழ்ச்­சித்­திட்­டத்தின் வைத்­திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரி­வித்­துள்ளார்.

நேற்று முன்­தினம் கொழும்பில் நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே இவ்­வி­ப­ரங்கள் வெளி­யி­டப்­பட்­டன.

புற்று நோய்­களில் மூன்றில் ஒன்றை முற்­றாக குணப்­ப­டுத்த முடியும். ஏனைய புற்று நோய்­களை ஆரம்­பத்­தி­லேயே கண்­ட­றி­வதன் மூலம் குணப்­ப­டுத்த முடியும். நாட­ளா­விய ரீதியில் 24 அர­சாங்க புற்று நோய் சிகிச்சை நிலை­யங்கள் இயங்கி வரு­கின்­றன.

இலங்­கையில் மார்பு, வாய், நுரை­யீரல், தைரோயிட், வயிறு, உண­வுக்­குழாய், கர்ப்­பப்பை வாய், கருப்­பைகள், கல்­லீரல் மற்றும் லியூ­கே­மியா ஆகிய புற்று நோய்­களே முதல் 10 இடங்­களில் உள்­ள­தாக குறிப்­பிட்ட வைத்­திய நிபுணர் சுராஜ் பெரேரா, ஆண்­களில் வாய் மற்றும் நுரை­யீரல் புற்­று­நோய்­களே பொது­வாக தாக்­கு­வ­தா­கவும் பெண்­க­ளுக்கு மார்பு மற்றும் கர்ப்­பப்பை வாய் புற்று நோய்­களே பொது­வ­னது என்றும் அவர் மேலும் குறிப்­பிட்டார். அதிலும் பெண் புற்றுநோயாளர்களில் நால்வரில் ஒருவர் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.