ஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை

உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு

0 484

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்­புல்­லாஹ்­வினால் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்ற மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழ­கத்தை அர­சாங்கம் பொறுப்­பேற்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக உயர் கல்வி அமைச்சர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்தார்.

நாட்டின் நலன்­க­ரு­தியே இந்த தீர்­மா­னத்தை அமைச்சு மேற்­கொண்­டுள்­ளது எனவும் அவர் விடி­வெள்­ளிக்கு குறிப்­பிட்டார்.

இந்தப் பல்­க­லை­க­ழ­கத்­திற்கு எதி­ராக பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன், மக்கள் மத்­தி­யி­லி­ருந்து பாரிய எதிர்ப்­பு­களும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக உயர் கல்­வி­ய­மைச்சர் கூறினார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

SAITM என்று அழைக்­கப்­படும் மருத்­துவ மற்றும் தொழி­நுட்ப கற்­கை­க­ளுக்­கான தெற்­கா­சிய நிலை­யத்தை அர­சாங்கம் பொறுப்­பேற்­றது போல் மட்­டக்­க­ளப்பு பல்­க­லை­க்க­ழ­கத்­தையும் பொறுப்­பேற்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லாஹ்­வுடன் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது. இந்த தனியார் பல்­க­லைக்­கழம் தனி­யொரு இனத்­தினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு உரு­வாக்­கப்­பட்­டது என்றும் அவர் தெரி­வித்தார்.

சவூதி அரே­பி­யாவின் ஜித்தா நகரைத் தள­மாகக் கொண்டு செயற்­படும் அல்–­ஜுபைல் நன்­கொடை மன்­றத்தின் நிதி­யு­த­வியின் கீழ், மட்­டக்­க­ளப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான புணானை பிரதேசத்தில் சுமார் 35 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.-Vidivelli

  • றிப்தி அலி

Leave A Reply

Your email address will not be published.