மரண தண்டனையிலிருந்து முஷாரப் தப்பிக்க முடியுமா?

0 139

பாகிஸ்தான் முன்னாள் அதி­பரும், ஓய்­வு­பெற்ற ராணுவ ஜென­ர­லு­மான பர்வேஸ் முஷா­ரபுக்கு தேசத்­து­ரோக வழக்கில், சிறப்பு நீதி­மன்றம் மரண தண்­டனை விதித்­தி­ருப்­பது பல கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளன. இந்தக் கேள்­விகள் சமூக ஊட­கங்­க­ளிலும், தொலைக்­காட்­சி­க­ளிலும் வலம் வரத் தொடங்­கி­யுள்­ளன.

பர்வேஸ் முஷா­ர­புக்கு சிறப்பு நீதி­மன்றம் தண்­டனை விதித்­துள்ள நிலையில், பாகிஸ்­தானில் இம்­ரான்கான் அரசின் அடுத்த நட­வ­டிக்கை என்­ன­வாக இருக்கும், முஷா­ர­புக்கு ஆத­ர­வாக யார் வழக்­காடப் போகி­றார்கள்? இது­கு­றித்து சில பாகிஸ்தான் சட்ட நிபு­ணர்கள் மற்றும் அரசு அதி­கா­ரி­க­ளிடம் கருத்­து­களைக் கேட்க பி.பி.சி. முயற்சி மேற்­கொண்­டது.

2007 நவம்பர் 3ஆம் தேதி நாட்டில் அவ­ச­ர­நிலை பிர­க­டனம் செய்­தது, நாட்டில் அர­சியல் சாச­னத்தை முடக்­கி­யது ஆகி­யவை தொடர்­பான வழக்கு ஓய்­வு­பெற்ற ஜெனரல் பர்வேஸ் முஷாரப் மீது தொட­ரப்­பட்டு சிறப்பு நீதி­மன்­றத்தில் விசா­ரிக்­கப்­பட்­டது. பாகிஸ்தான் அர­சியல் சட்­டத்தின் 6ஆவது பிரிவின் கீழ் அவ­ருக்கு நீதி­மன்றம் மரண தண்­டனை விதித்­துள்­ளது.

பர்வேஸ் முஷா­ரபுக்கும், பாகிஸ்தான் அர­சுக்கும் இப்போது என்ன வாய்ப்­புகள் உள்ளன?

முன்னாள் ராணுவ ஜென­ர­லுக்கு ஆத­ர­வாக நீதி­மன்­றத்தில் மேல்­மு­றை­யீட்டு வழக்கில் அரசு வாதாடும் என்று பாகிஸ்தான் அட்­டர்னி ஜெனரல் அன்வர் மன்சூர் கான் கூறினார்.

மரண தண்­ட­னையை நிறுத்த நீதி­மன்றம் இறுதி முடிவு எடுத்­து­விட்டால், அதை அமுல்­ப­டுத்­து­வதைத் தடுக்க சட்­ட­மொன்றை உரு­வாக்க நாடா­ளு­மன்­றத்­துக்கு அதி­கா­ர­முள்­ளது என்று சட்ட நிபு­ணர்கள் கூறு­கின்­றனர்.
சிறப்பு நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வுக்கு எதி­ராக உச்ச நீதி­மன்­றத்தில் மேல்­மு­றை­யீடு செய்ய வேண்­டு­மானால், குற்­ற­வா­ளி­யாக அறி­விக்­கப்­பட்­டவர் 30 நாட்­க­ளுக்குள் நீதி­மன்­றத்தில் ”சர­ண­டைய” வேண்டும் என்றும் அவர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

அர­சியல் சாசன விவ­கா­ரங்கள் மற்றும் குற்­ற­வியல் வழக்­கு­களைக் கையாளும் அம்ஜத் ஷா, அர­சியல் சாச­னத்தை மீறிய வழக்கில் குற்­ற­வா­ளி­யாக அறி­விக்­கப்­பட்­டுள்ள பர்வேஸ் முஷாரப், சிறப்பு நீதி­மன்­றத்தில் ஆஜ­ராகத் தவ­றி­ய­தற்­காக 2016இல் குற்­ற­வா­ளி­யாக அறி­விக்­கப்­பட்டார். எனவே இந்த சூழ்­நி­லையில், முஷா­ரபுக்கும், வழக்­க­மான முறையில் மேல்­மு­றை­யீடு செய்­ப­வ­ருக்கும் இடையில் வித்­தி­யா­ச­முள்­ளது என்று அவர் தெரி­வித்தார்.
தீர்ப்பு விவ­ரங்கள் அளிக்­கப்­பட்ட 30 நாட்­க­ளுக்குள் பர்வேஸ் முஷாரப் மேல்­மு­றை­யீடு செய்­யா­விட்டால், சிறப்பு நீதி­மன்­றத்தின் தீர்ப்பே இறு­தி­யா­ன­தாக இருக்­கு­மென்று அம்ஜத் ஷா தெரி­வித்தார்.

இந்தத் தீர்ப்­புக்கு எதி­ராக உச்ச நீதி­மன்­றத்தில் மத்­திய அரசு சார்பில் மேல்­மு­றை­யீடு செய்ய வாய்ப்­புள்­ளதா என்று அவ­ரிடம் கேட்­ட­தற்கு, மனு­தா­ர­ருக்கு ஆத­ர­வாக நீதி­மன்­றத்தின் தீர்ப்பு வந்தால், அதற்கு எதி­ராக அரசு மேல்­மு­றை­யீடு செய்­த­தாக வர­லாறு இல்லை என்று அவர் கூறினார்.

பர்வேஸ் முஷா­ர­புக்கு எதி­ராக முக்­கி­யத்­து­வ­மான தேசத்­து­ரோக வழக்கை பாகிஸ்தான் மத்­திய அர­சுதான் தொடர்ந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. உள்­நாட்டுப் பாது­காப்­புத்­துறை செயலர் மூலம் வழக்கு தொட­ரப்­பட்­டது. மத்­திய அரசு எடுத்த அந்த முடிவு சரி­யா­னதே என்று சிறப்பு நீதி­மன்­றமும் ஒப்­புதல் அளித்­துள்­ளது.

பர்வேஸ் முஷாரப் மரண தண்ட­னையை நிறுத்த முடியுமா?

முன்னாள் ராணுவ சர்­வா­தி­காரி பர்வேஸ் முஷா­ரபுக்கு எதி­ரான, அர­சியல் சாச­னத்தை மீறிய வழக்கை இப்­போ­தைய அரசு சரி­யாகக் கையா­ள­வில்லை என்று முன்னாள் அட்­டர்னி ஜெனரல் இர்பான் காதிர் கூறினார்.

சிறப்பு நீதி­மன்­றத்தின் தீர்ப்பு வரு­வ­தற்கு முன்­ன­தாக, எப்­போது விரும்­பி­யி­ருந்­தாலும் இந்த வழக்கை மத்­திய அரசு திரும்பப் பெற்­றி­ருக்க முடியும். வழக்கு தொடர்ந்­தவர் அதைத் திரும்­பப்­பெற சட்­டத்தில் இட­முள்­ளது. ஆனால் அரசு அவ்­வாறு செய்­ய­வில்லை.

மனு­தா­ரரின் வேலையை நீதி­மன்­றங்கள் செய்ய முடி­யாது என்றார் அவர்.
மரண தண்­ட­னையை உச்ச நீதி­மன்­றமும் உறுதி செய்து, அந்த உத்­த­ரவை நிறை­வேற்றக் கூடா­தென்று அட்­டர்னி ஜெனரல் கருத்து தெரி­வித்தால், அதன்­மீது மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுக்­கு­மென்று பி.பி.சியிடம் அவர் தெரி­வித்தார்.

நீதி­மன்றத் தீர்ப்பு குறை­யுள்­ள­தாக இருந்தால், அந்தத் தீர்ப்பை அமுல்­ப­டுத்­தாமல் நிறுத்­து­வ­தற்கு நாடா­ளு­மன்­றத்தில் சட்டம் உரு­வாக்­கு­வ­தற்கு உலகில் பல உதா­ர­ணங்கள் உள்­ளன என்று இர்பான் காத்ரி குறிப்­பிட்டார்.

நீதித்­து­றையும், சட்­ட­வ­மைப்பும் நேருக்கு நேர் உரசும் சூழ்­நிலை ஏற்­பட்டால், சட்டம் உரு­வாக்­கு­ப­வர்­களின் கருத்­துக்­குத்தான் முக்­கி­யத்­து­வ­ம­ளிக்­கப்­படும் என்றும், நீதித்­துறை முடி­வு­களை ‘நாடா­ளு­மன்றம் உரு­வாக்கும் சட்­டத்தின்’ மூலம் ரத்து செய்­யலாம் என்றும் இர்பான் காதிர் கூறினார்.

அர­சி­யல் ­சாசனத்தை மீறு­பவர் தாய் நாட்டில் தேசதுரோ­கியா?

பாகிஸ்தான் அர­சியல் சாச­னத்தின் ஆறா­வது பிரி­வின்­படி, 1956 மார்ச் 23க்குப் பிறகு, அர­சியல் சாச­னத்தை மீறும் அல்­லது அதற்கு எதி­ரான சதியில் ஈடு­ப­டக்­கூ­டிய ஒருவர், தேசத்­து­ரோக குற்றம் செய்­த­வ­ராகக் கரு­தப்­பட்டு, அவ­ருக்கு ஆயுள் சிறை அல்­லது மரண தண்­டனை விதிக்­கப்­ப­டலாம்.

இருந்­த­போ­திலும், முன்னாள் ராணுவத் தள­பதி பர்வேஸ் முஷா­ரபுக்கு எதி­ராக தேசத்­து­ரோக வழக்கு விசா­ர­ணையை தொடங்க, தாம் அட்­டர்னி ஜென­ர­லாக இருந்த வரையில் அனு­ம­திக்­க­வில்லை என்று இர்பான் காத்ரி தெரி­வித்தார்.
முன்னாள் ராணுவத் தள­பதி அர­சியல் சாச­னத்தை மீறி­யுள்ளார் என்­றாலும், இது­போன்ற அனைத்து நிகழ்­வு­களும் தேசத்­து­ரோக பிரிவில் வராது என்று முன்னாள் தலைமை நீதி­பதி ஜாவத் எஸ். கவாஜா தலை­மை­யி­லான மூன்று நீதி­ப­திகள் கொண்ட அமர்­விடம் தாம் கூறி­ய­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

முஷாரப் பாகிஸ்தான் வராமல் மேல்­மு­றை­யீடு செய்ய முடியுமா?

கிரி­மினல் வழக்­கு­களில், குற்­ற­வாளி 30 நாட்­க­ளுக்குள் உச்ச நீதி­மன்­றத்தில் மேல்­மு­றை­யீடு செய்ய வேண்டும்.

முஷாரப் நேரில் ஆஜ­ரா­காமல் அவ­ருக்கு நீதி­மன்­றத்தில் மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்க முடியும் என்றால், அவர் வராமல் அந்த முடிவை எதிர்த்து உச்ச நீதி­மன்­றத்தில் ஏன் மேல்­மு­றை­யீடு செய்ய முடி­யாது என்று பஞ்சாப் மாகாண கூடுதல் அட்­வகேட் ஜெனரல் பைசல் சௌத்ரி கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

ன்.ஏ.பி. வழக்­கு­களில், குற்­றஞ்­சாட்­டப்­பட்­டவர் இல்­லாமல் தீர்ப்­புகள் அளிக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் இது அடிப்­படை மனித உரிமை மீறல் என்று உச்ச நீதி­மன்­றமும் கூறி­யுள்­ளது.

இதற்கு மாறாக, சிறப்பு நீதி­மன்­றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்­மு­றை­யீடு செய்யப் போவ­தாக அட்­டர்னி ஜெனரல் அன்வர் மன்சூர் அறி­வித்­துள்ளார். அர­சியல் சட்­டப்­ப­டி­யான அனைத்து அம்­சங்­களும் கணக்கில் கொள்­ளப்­ப­ட­வில்லை என்­பதால் மேல்­மு­றை­யீடு செய்யப் போவ­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.

உச்ச நீதி­மன்­றத்தில் பர்வேஸ் முஷா­ர­புக்கு ஆத­ர­வாக வாதாடப் போவது யார்?

பர்வேஸ் முஷா­ரபின் வழக்­க­றி­ஞ­ராக இருந்­துள்ள அட்­டர்னி ஜெனரல் அன்வர் மன்சூர், சிறப்பு நீதி­மன்­றத்தில் அவ­ருக்கு ஆத­ர­வாக வாதா­டினார். இப்­போது உச்ச நீதி­மன்­றத்தில் தீர்ப்­புக்கு எதி­ராக மனு­தாரர் சார்பில் பாகிஸ்தான் முதன்மை சட்ட அதி­கா­ரி­யாக வாதாடி வரு­கிறார்.

இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதி­மன்­றத்தை நாடப் போவ­தாக, முன்னாள் ராணுவத் தள­ப­திகள் சிலரின் வழக்­க­றி­ஞர்­களும் அறி­வித்­துள்­ளனர். ஆனால் முஷாரப் தரப்பில் ஆஜ­ராக சிறப்பு நீதி­மன்­றத்தால் நிய­மிக்­கப்­பட்ட அவர்கள் உச்ச நீதி­மன்­றத்தில் மேல்­மு­றை­யீடு செய்­வார்­களா அல்­லது முஷா­ரபின் வழக்­க­றி­ஞர்கள் அப்பீல் செய்­வார்­களா என்­பது தெளி­வாகத் தெரி­ய­வில்லை.
அட்­டர்னி ஜென­ரலின் செயற்­பாடு குறித்து ஆளுங்­கட்­சியைச் சேர்ந்த சில உறுப்­பி­னர்கள் வருத்தம் தெரி­வித்­துள்­ளனர்.

ராணுவ முதன்மை ஜெனரல் குவாமர் ஜாவித் பஜ்வா, பதவி நீடிப்பு வழக்கை உச்­ச­நீ­தி­மன்­றத்தில் அட்­டர்னி ஜெனரல் கையாண்­ட­விதம் குறித்து, கட்சியின் சில தலைவர்களுக்கு வருத்தமுள்ளது என்று, வெளியில் பெயர் தெரிவிக்க விரும்பாத ஆளுங்கட்சியின் முன்னணி உறுப்பினர் ஒருவர் பி.பி.சியிடம் தெரிவித்தார்.

அதுகுறித்த நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றத்தில் முறையாக முன்வைக்காததால் பாகிஸ்தான் டெஹ்ரீக்- – இன்சாப் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுக்கு சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

கைபர் பகதுன்கவாவில் ராணுவம் மூலம் தடுப்புக் காவல் மையங்கள் நடத்துவது குறித்து பெஷாவர் உயர் நீதிமன்றமளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சரியாகக் கையாளவில்லை என்று கட்சியின் சில தலைவர்கள் வருத்தம் கொண்டிருப்பதாக ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.-Vidivelli

  • ஷாஜாத் மாலிக்
    நன்றி: பிபிசி

Leave A Reply

Your email address will not be published.