தேசிய கட்சிகளில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவிப்பு

0 293

தேசியக் கட்­சி­களில் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவத்தை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யது காலத்தின் கட்­டாயத் தேவை என்­பதை ஜனா­தி­பதித் தேர்­தலும், அதற்குப் பிந்­திய சம்­ப­வங்­களும் உணர்த்­தி­யுள்­ளன என்று திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்­துள்ளார்.அத்­துடன், மக்கள் கேட்கும் மாற்­றங்­க­ளுக்கு ரணில் விக்­ர­ம­சிங்­க­வி­ட­மி­ருந்து சாத­க­மான பதில் கிடைத்­துள்­ளது என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

நேற்று மாலை திரு­கோ­ண­ம­லையில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அவர்,
தேசியக் கட்­சி­களில் சிறு­பான்மை பிர­தி­நி­திகள் அங்கம் வகிக்க வேண்டும் என்­பதை நடை­பெற்­று­மு­டிந்த ஜனா­தி­பதி தேர்தல் எமக்கு உணர்த்­தி­யுள்­ளது. அத்­துடன், அதற்குப் பிந்­திய சில சம்­ப­வங்­களும் இதனை தெட்­டத்­தெ­ளி­வாக எமக்கு காட்டி நிற்­கி­றது.

ஐக்­கிய தேசியக் கட்­சி­யாக இருக்­கட்டும், சுதந்­திரக் கட்­சி­யாக இருக்­கட்டும் அல்­லது மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யா­கக்­கூட இருக்­கட்டும் ஏதா­வ­தொரு தேசியக் கட்­சியில் இணைந்­தி­ருப்­பதன் மூலம் நமக்கு விமோ­சனம் இருக்­கி­றது. நாம் தனித்துச் செல்­வதன் மூலம் பல்­லின சமூ­கத்­தி­லி­ருந்து பிரித்து தனித்து விடப்­ப­டு­கின்றோம். இதனால் நமக்குப் பெரும் ஆபத்­துகள் வந்­தி­ருக்­கின்­றன. இனி­வரும் காலங்­களில் அது தீவி­ர­மா­கலாம், எனவே, இதன்­பி­ற­கா­வது தனிப்­பா­தையில் செல்­லாது எல்­லோ­ரு­டனும் கலந்து எமது தனித்­து­வத்தை காத்­த­வர்­க­ளாக அர­சியல் பய­ணத்தை மேற்­கொள்ள வேண்டும்.-Vidivelli

  • முள்ளிப்பொத்தானை நிருபர்

Leave A Reply

Your email address will not be published.