ஜனாதிபதி கோத்தாவுக்கு பாகிஸ்தான் வாழ்த்து

0 1,159

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு பாகிஸ்தான் அரசும், அரசின் தலை­மைத்­து­வமும் உணர்­வு­பூர்­வ­மான வாழ்த்­துக்­களைத் தெரி­வித்­துள்­ள­துடன் கோத்­தா­பய ராஜபக் ஷவின் தலை­மையின் கீழ் இலங்கை வள­மா­னதும், சமா­தா­ன­து­மான தனது பய­ணத்தைத் தொட­ரு­மென நம்­பு­வ­தா­கவும் தெரி­வித்­துள்­ளன.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்றி தொடர்பில் வெளி­யிட்­டுள்ள வாழ்த்துச் செய்­தி­யிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அச்­செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்கை ஜன­நா­யக குடி­ய­ரசின் 7 ஆவது ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­மைக்கு நாம் வாழ்த்துத் தெரி­விக்­கிறோம்.

சுதந்­தி­ர­மா­னதும், நேர்­மை­யா­னதும், சமா­தா­ன­மு­மான தேர்தல் ஒன்­றினை நடத்­தி­ய­மைக்­காக தேர்தல் ஆணைக்­கு­ழு­வையும் இலங்கை அர­சாங்­கத்­தையும் நாம் பாராட்­டு­கின்றோம். பாகிஸ்­தானின் தலை­மைத்­துவம் இலங்­கையின் புதிய ஜனா­தி­ப­தி­யு­டனும் அவ­ரது குழு­வி­ன­ரு­டனும் பல­மாக உள்ள உற­வினை மேலும் பலப்­ப­டுத்திக் கொண்டு தொடர்­பு­களை முன்­னெ­டுக்க விரும்­பு­கி­றது. இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் உற­வு­களை மேலும் பலப்­ப­டுத்திக் கொள்ள எதிர்­பார்க்­கி­றது.

பாகிஸ்தான் அரசு இரு நாடுகளுக்குமிடை யிலான சகோதர பிணைப்பை மேலும் அதிகரித்துக் கொள்ள விரும்புகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.