திரு­மலை சண்­மு­கா­: புதிய ஆசி­ரி­யைகளும் அபாயா அணிந்து செல்ல எதிர்ப்பு

பாட நேரசூசி வழங்கவும் அதிபர் மறுப்பு

0 523

ஆசி­ரி­யை­க­ளாக நிய­மனம் பெற்று திரு­கோ­ண­மலை சண்­முகா தேசிய பாட­சா­லைக்கு சென்­றுள்ள மூன்று முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்கு அபாயா அணிந்து செல்­வதில் சிக்கல் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்னர் கல்­வி­யியற் கல்­லூரி டிப்­ளோ­மா­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரியர் நிய­மனம் வழங்­கப்­பட்­டது. இதன்­போது நிய­ம­னம்­பெற்ற மூன்று முஸ்லிம் ஆசி­ரி­யைகள் கட­மை­களை பொறுப்­பேற்க கடந்த 20 ஆம் திகதி குறித்த பாட­சா­லைக்கு அபாயா அணிந்து சென்­ற­போது, அதி­பரால் அபாயா அணிந்­து­வர முடி­யா­தெனக் கண்­டிப்­பாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன், அவர்­க­ளுக்­கான நேர­சூ­சியும் வழங்­கு­வ­தற்கும் மறுப்பு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சாரி அணிந்து வந்தால் மாத்­திரம் பாட­வேளை நேர­சூசி தர­மு­டியும். இல்­லையேல், ஆசி­ரியர் ஓய்­வ­றையில் இருந்­து­கொள்­ளுங்கள் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக பாதிக்­கப்­பட்ட தரப்­பி­லி­ருந்து தக­வல்கள் கிடைத்­தன. 

இது விட­ய­மாக குறிப்­பிட்ட மூன்று ஆசி­ரி­யை­களும் இசு­ரு­பா­ய­வி­லுள்ள கல்வி அமைச்­சுக்கு சென்று தமது முறைப்­பாட்டை பதிவு செய்­துள்­ளனர்.

இதே­வேளை, முன்­ன­தாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி 5 முஸ்லிம் ஆசி­ரி­யைகள் குறித்த பாட­சா­லையில் சாரி அணிந்து வர வற்­பு­றுத்­தப்­பட்­ட­மையால் தற்­கா­லிக இட­மாற்­றத்தை பெற்று சென்­றனர். இவ்­வாறு குறித்த பாட­சா­லை­யி­லி­ருந்து பாதிப்­புக்­குள்­ளான ஆசி­ரி­யை­களுக்கு எந்­த­வி­த­மான நிரந்­த­ர­மான தீர்­வொன்றும் கொடுக்­கப்­ப­டாத நிலையில் தற்­போது மீண்டும் பிரச்­சி­னை­யொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு தொடர்ந்து முஸ்லிம் பெண்­களின் கலா­சார ஆடையை மறுத்து வரு­கின்ற நிலையில் அர­சாங்­கத்­தினால் நிரந்­தரத் தீர்வு வழங்­கப்­பட வேண்­டு­மென பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் தெரி­விக்­கின்­றனர். ஏற்­க­னவே, ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து செல்­வதில் சிக்கல் இல்லையெனக் கல்வியமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில் குறிப்பிட்ட திருகோணமலை சண்முகா தேசிய பாடசாலை அதிபரும் அதன் நிர்வாகத்தினரும் அதற்கெதிராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.