போதைப்பொருள் குறித்து குற்றம்சாட்டினால் மருத்துவ பரிசோதனைக்கு தயாராகவுள்ளேன்

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்

0 163

போதைப்­பொருள் பாவிப்­பது தொடர்­பாக யாரா­வது குற்றம் சாட்­டினால் அது தொடர்­பாக மருத்­துவ பரி­சோ­த­னைக்கு முகம்­கொ­டுக்க தயார் என ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ரினால் கேட்­கப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில்  போதைப்­பொருள் பாவிப்­ப­வர்­களும் அதனை வெளி­நா­டு­களில் இருந்து கொண்டு வரு­ப­வர்­களும் இருப்­ப­தாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க தெரி­வித்­தி­ருக்­கிறார். அவரின் கூற்றை நாங்கள் முற்­றாக மறுக்­க­வில்லை. அதே போன்று போதைப்­பொருள் பாவனை தொடர்­பாக மருத்­துவ பரி­சோ­தனை செய்­து­கொள்­ள­வேண்டும் என்றும் அவர் பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்தார் இராஜாங்க அமைச்­சரின் இந்தக் கூற்­றா­னது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வ­ருக்கும் பொது­வா­ன­தாகும். யார் வேண்­டு­மா­னாலும்  மருத்­துவ பரி­சா­சோ­த­னையை செய்­து­கொள்­ளலாம். அதில் எந்த பிரச்­சி­னையும் இல்லை. ஒரு­சிலர் மருத்­துவ பரி­சோ­தனை செய்தும் இருக்­கின்­றனர். நான் இது­வரை அவ்­வா­றான பரி­சோ­தனை எத­னையும் செய்­ய­வில்லை. என்­றாலும் போதைப்­பொருள் பாவனை தொடர்பில் என்னை யாரா­வது விமர்­சித்தால் அது­தொ­டர்­பான மருத்­துவ பரி­சோ­த­னையை மேற்­கொள்ள தயா­ரா­கவே இருக்­கின்றேன். என்னைப் பொறுத்­த­வரை போதைப்­பொருள் நான் பாவித்­ததும் இல்லை. அதனை பாவிக்­க­வேண்­டிய தேவையும் எனக்­கில்லை.

அத்­துடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மக்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக இருக்க வேண்டும். எமது சிறிய தவறுகளும் மக்கள் மத்தியில் பெரும் தவறாகவே தெரிகின்றன. அதனால் நாங்கள் சரியாக இருந்தால் மக்கள் எங்களை மதிப்பார்கள் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.