11 குழந்தைகள் மரணித்ததை அடுத்து துனிசிய சுகாதார அமைச்சர் இராஜினாமா

0 637

துனி­சி­யாவில் பொது வைத்­தி­ய­சா­லை­யொன்றில் 11 குழந்­தைகள் மர­ணித்­த­தை­ய­டுத்து அந் நாட்டு சுகா­தார அமைச்சர் இரா­ஜி­னாமா செய்­துள்ளார்.

துனி­சியத் தலை­நகர் டியு­னிஸில் மர்­ம­மான முறையில் இக் குழந்­தைகள் மர­ண­ம­டைந்­த­தை­ய­டுத்து சுகா­தார அமைச்சர் அப்தெல் றஊப் எல்- ஷெரிப் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்ளார்.

இந்த இரா­ஜி­னா­மாவை தான் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தாக பிர­தமர் யூஸுப் சாஹெட் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்ளார்.

குறித்த வைத்­தி­ய­சா­லைக்கு விஜயம் செய்த பிர­தமர் யூஸுப் சாஹெட் இறப்­புக்­கான கார­ணத்தைக் கண்­ட­றிய விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்தார்.

இரத்­தத்தில் ஏற்­பட்ட தொற்று கார­ண­மாக குழந்­தைகள் உயி­ரி­ழந்­துள்­ளார்கள் எனத் தெரிகிறது என துனிசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.