‘பின்னணியில் இருப்பவர்கள் தொடர்பில் வெளிப்படுத்தவேண்டும்’ என்ற நிலைப்பாட்டிலேயே முஸ்லிம் மக்கள் இருக்கின்றனர்

கபீர் ஹாசிம் சபையில் தெரிவிப்பு

0 44

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அர­சாங்கம் சஹ்­ரா­னுக்கு சம்­பளம் வழங்கி வழி­ந­டத்தி இருக்­கின்­றது.சஹ்­ரா­னுக்கு சம்­பளம் வழங்­கி­ய­தாக அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல பகி­ரங்­க­மாக ஏற்­றுக்­கொண்­டி­ருந்தார். அத்­துடன் இந்த தாக்­கு­தலால் நன்மை அடைந்­த­வர்­களே இதன் உண்மை நிலை­மை­களை மறைக்க முயற்­சிக்­கின்­றனர்.இதன் பின்­ன­ணியில் இருப்­ப­வர்கள் யார் என்­பதை வெளிப்­ப­டுத்­த­வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிலே முஸ்­லிம்கள் இருக்­கின்­றனர் என எதிர்க்­கட்சி உறுப்­பினர் கபீர் ஹாசிம் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்தினம் அர­சாங்­கத்­தினால் கொண்­டு­வ­ரப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்கை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

மாவ­னெல்லை புத்தர் சிலை தகர்ப்பு தொடர்­பாக தகவல் வழங்­கிய கார­ணத்­துக்­காக சஹ்­ரானின் குண்­டர்­களின் துப்­பாக்கி சூட்­டுக்கு ஆளா­கிய எனது இணைப்­புச்­செ­ய­லாளர் முஹம்மத் தஸ்லிம் படு­கா­ய­ம­டைந்து சுய­நி­னைவு இழந்­தி­ருக்­கின்றார். அவ­ருக்கு எனது சொந்த செலவில் மருத்­துவம் செய்­து­வந்தேன். தற்­போதும் அவர் நாட்டு வைத்­தியம் செய்­து­வ­ரு­கின்றார். அவரின் செயலை மதித்து சிங்­கள இளை­ஞர்கள் அவ­ருக்கு வீடொன்றை நிர்­மா­ணித்து கொடுத்­துள்­ளனர்.

அவரின் மருத்­துவ செல­வுக்கு அர­சாங்கம் உதவி செய்­ய­வேண்டும் என நான் அர­சாங்­கத்­திடம் கேட்­டி­ருந்தேன். எந்த பதிலும் வழங்­க­வில்லை. ஆனால் அவரை குணப்­ப­டுத்த வெளி­நாட்­டுக்கு அழைத்­துச்­செல்ல வேண்­டிய நிலை ஏற்­பட்டால் அதற்கு அர­சாங்கம் நிதி உதவி செய்­ய­வேண்டும் என ஆணைக்­குழு பரிந்­துரை செய்­துள்­ளமை தொடர்பில் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.

மேலும் உயி­ர்த்த ஞாயிறு தாக்­குதல் கார­ண­மாக அதிகம் பாதிக்­கப்­பட்­டது கத்­தோ­லிக்க மக்­க­ளாகும். அதே­போன்று பாரிய நெருக்­க­டி­க­ளுக்கு ஆளா­கி­யது முஸ்லிம் மக்­க­ளாகும். சஹ்­ரானின் நட­வ­டிக்­கைக்கும் இஸ்லாம் மார்க்­கத்­துக்கும் எந்த சம்­பந்­தமும் இல்லை. இஸ்லாம் ஒரு­போதும் இவ்­வா­றான செயல்­களை அனு­ம­தித்­த­தில்லை.

மேலும் எனது இணைப்­புச்­செ­ய­லா­ளரின் மருத்­துவ செல­வுக்கு பணம் வழங்­கு­மாறு பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ரிடம் கேட்­ட­போது அதற்கு செல­வி­ட­வில்லை. ஆனால் அர­சாங்கம் சஹ்­ரா­னுக்கு சம்­பளம் வழங்கி வழி­ந­டத்தி இருக்­கின்­றது.சஹ்­ரா­னுக்கு சம்­பளம் வழங்­கி­ய­தாக அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல பகி­ரங்­க­மாக ஏற்­றுக்­கொண்­டி­ருந்தார். அப்­ப­டி­யென்றால் அப்­போதைய பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்த கோத்­தா­பய ராஜ­பக் ஷ­வுக்கு அறி­வு­றுத்­தியே வழங்­கி­யி­ருக்­க­வேண்டும்.

அதே­போன்று 2011ஆம் ஆண்டில் இருந்து சஹ்­ரானின் நட­வ­டிக்கை தொடர்­பாக முஸ்லிம் அமைப்­புகள் முறைப்­பாடு செய்­தி­ருக்­கின்­றன. ஆனால் அப்­போதைய அர­சாங்­கத்­தினால் அது­தொ­டர்­பாக எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. அப்­போது பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்­தது கோத்­தா­பய ராஜபக்ஷ் என்­பதை நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றோம்.

மேலும் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷ்வை கொலை செய்ய திட்­ட­மிட்­டி­ருப்­ப­தாக நாமல் குமார செய்த முறைப்­பாடு தொடர்­பாக இன்று எந்த விசா­ர­ணையும் இடம்­பெ­று­வ­தில்லை. நாமல் குமா­ரவின் இந்த முறைப்­பாடு கார­ண­மா­கத்தான் சஹ்ரான் தொடர்­பாக விசா­ரணை மேற்­கொண்­டு­வந்த பொலிஸ் அதி­காரி நாலக்­க­சில்வா கைது­செய்­யப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டுள்ளார். நாமல் குமாரவின் அந்த முறைப்பாடு இல்லாமல் இருந்திருந்தால் சஹ்ரான் கைதுசெய்யப்பட்டிருப்பார்.

எனவே இந்த தாக்குதலின் பின்னால் யார் இருக்கின்றார் என்பதை கண்டறியவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே முஸ்லிம் மக்களும் இருக்கின்றனர். அதனால் இந்த விசாரணை அறிக்கை தொடர்பாக கர்தினால் மெல்கம் ரன்ஜித்தின் நிலைப்பாட்டுக்கு நாங்களும் ஆதரவளிக்கின்றோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.