ஐ.எஸ்.உறுப்பினர்கள் யாரும் சுதந்திர கட்சிக்குள் இல்லை

சு.க. பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க

0 151

ஐ.எஸ். அமைப்பின் ஆத­ர­வா­ளர்­களோ, உறுப்­பி­னர்­களோ தமது கட்­சியில் கிடை­யா­தென்று தெரி­வித்த ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சாளர் வீர­கு­மார திசா­நா­யக்க, தமது கட்­சியின் வேட்­பு­ம­னுவில் ஒரு­வரின் பெயரை பதிவு செய்­வ­தற்கு முன்னர் அவர் இலங்­கை­யாரா என்­பதை உறுதி செய்­ததின் பின்­னரே அவரை பெயர் பட்­டி­யலில் பதிவு செய்­வ­தா­கவும் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கு­மு­க­மாக இவ்­வாறு தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது,
எமது கட்­சியில் வேட்­பாளர் பெயர் பட்­டி­யலில் ஒரு­வரின் பெயரை பதிவு செய்­வ­தற்கு முன்னர் அவர் இலங்­கை­யரா என்­பது தொடர்பில் ஆராய்ந்து பார்த்தே அவ­ருக்கு வாய்ப்­ப­ளிப்போம். இதை­வி­டுத்து அவர் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்­த­வரா அல்­லது தமி­ழீழ விடு­தலைப் புலிகளைச் சேர்ந்­த­வரா என்­பது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து பார்த்­த­தில்லை. ஒரு பிர­தே­சத்தை முதல்­நி­லைப்­ப­டுத்தி பார்த்து அங்­குள்ள மக்­க­ளிடம் அதி­க­மான ஆத­ரவை யார் பெற்­றி­ருக்­கின்­றாரோ அவ­ருக்கே நாங்கள் வாய்ப்­ப­ளிப்போம்.

முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி எமது கட்­சியில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த யாரா­வது இருப்­ப­தாக அறிந்­தி­ருந்தால் அந்த விடயம் தொடர்பில் பொலிஸ் அல்­லது குற்றப் புல­னாய்வு பிரிவுக்கு முறைப்­பா­ட­ளிக்க வேண்டும். அப்­போது சட்­ட­ந­ட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும். அதை விடுத்து வெறு­மனே இவ்­வாறு தெரி­விப்­பது சாத்­தி­ய­மற்­ற­தாகும்.

இதன்­போது சுதந்­தி­ரக்­கட்­சிக்கு புது அமைப்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளதால், ஏற்­க­னவே இருந்­த­வர்­களில் யார் நீக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்­பது தொடர்பில் அவ­ரிடம் வின­வி­ய­போது அவர் கூறி­ய­தா­வது,

யார் நீக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்­பது தொடர்பில் என்­னிடம் தற்­போது அறிக்­கை­யில்லை. ஆனால் கட்­சிக்­காக எதுவும் செய்­யாமல் இருப்­ப­வர்­களே நீக்­கப்­பட்­டுள்­ளனர். முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க ஜனா­தி­பதி தேர்­தலின் போது கட்­சியின் செயற்­கு­ழுவின் தீர்­மா­னத்­திற்கு எதி­ராக சென்று , ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யி­ருந்த சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­வ­ளிப்­ப­தாகத் தெரி­வித்­தி­ருந்தார். இதனால் அவரை அத்­த­ன­கல்ல தொகு­தியின் அமைப்­பாளர் பத­வி­யி­லி­ருந்து நீக்க கட்சி தீர்­மா­னித்­துள்­ளது. இதேபோல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஏ.எச்.எம். பௌசி, டிலான் பெரேரா, விஜித் விஜ­ய­முனி சொய்ஸா உள்­ளிட்ட சிலரின் உறுப்­பு­ரி­மை­களும் நீக்­கப்­படும். அவர்கள் கட்­சிக்­காக எதுவும் செய்­யா­த­போது அவர்­களின் உறுப்­பு­ரி­மையை வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லைதானே.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் வினவியபோது, அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பொலனறுவை மாவட்டத்தை பிரதிநிதித்து வப்படுத்தி பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.