முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் இரு நூல்களின் வெளியீட்டு விழா
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த "உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் -மறைகரம் வெளிப்பட்டபோது" மற்றும் "நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள் - முஸ்லிம்கள் மீது கட்டமைக்கப்பட்ட சந்தேகங்களை களைதல்" ஆகிய இரு மொழிபெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு ஜனவரி 30 ஆம் திகதி, வியாழக்கிழமை கொழும்பு -7இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.