கிழக்கு முஸ்லிம் ஆளுநரும் தமிழ்த்தரப்பு எதிர்ப்பு
கிழக்கில் அண்ணளவாக 1/3 பங்கு தமிழர்களும் 2/3 தமிழர் அல்லாதவர்களும் வாழ்கின்றனர். கிழக்கின் 1/3 பங்கு தமிழர்களுக்காக தமிழரல்லாத 2/3 பங்கும் வட கிழக்கின் இணைப்பின்மூலம் வடக்கின் ஆளுகைக்குள் வரவேண்டும். அதற்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை, எதிர்பார்ப்பு.
விடுதலைப் போராட்ட ஆரம்பகாலத்தில் வட கிழக்கு சுயாட்சிக்கும்மேல் தமிழீழத்திற்காகவே போராடுவதற்கு முஸ்லிம் வாலிபர் ஆயுத இயக்கங்களில் இணைந்தார்கள். அந்தளவு தமிழர்களை ஒன்றுக்குள் ஒன்றாக பிணைந்த…