அமைச்சுகளை பொறுப்பேற்க நாங்கள் அவசரப்படமாட்டோம்
அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தங்கள் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொள்வார்கள். ஆனால் அவசரப்பட மாட்டார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ். சுபைதீன் தெரிவித்தார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலையடுத்து கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வகித்த அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தனர். இதன்போது, அ.இ.ம.கா. ஒரு அமைச்சரவை அமைச்சையும் ஒரு இராஜாங்க…