பெரும்பான்மை சமூகத்தின் அபிலாஷைகளுக்கு இணங்கி செல்வதே சிறுபான்மைக்கு பாதுகாப்பு

தேர்தல் பெறுபேறு இதனையே உணர்த்தியுள்ளது என்கிறார் அதாவுல்லா

0 1,190

5 வரு­டங்கள் அபி­வி­ருத்­தியில் பின்­னோக்கிச் சென்ற எமது நாட்டை மீண்டும் அபி­வி­ருத்­திப்­பா­தையில் முன்­கொண்டு செல்­வ­தற்கு அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். அதற்­கான சந்­தர்ப்பம் இப்­போது கிட்­டி­யுள்­ள­தாக தேசிய காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ஏ.எல்.எம்.அதா­உல்லா தெரி­வித்தார்.

புதிய ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன கட்­சியின் வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் வெற்றி விழாவும் வாக்­க­ளித்த மக்­க­ளுக்­கான நன்றி தெரி­விக்கும் நிகழ்வும் நேற்று முன்­தினம் பால­மு­னையில் இடம்­பெற்­ற­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

இந்த நாட்டில் மீண்­டு­மொரு பயங்­க­ர­வாத சூழ்­நிலை உரு­வாகக் கூடாது என்­ப­தற்­கா­கவும் பயங்­க­ர­வா­தத்தை முற்­றாக ஒழிக்கக் கூடிய, தைரி­ய­முள்ள, சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கு அடி­ப­ணி­யாத, நாட்டை நேசிக்­கின்ற ஒரு தலைவர் எமது நாட்­டுக்கு வேண்டும் என்­கின்ற செய்­தியை நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்தல் உணர்த்­தி­யுள்­ளது.

அது­மாத்­தி­ர­மன்றி இத்­தேர்தல் இன்­னு­மொரு செய்­தியை சிறு­பான்மை சமூ­கத்­தி­ன­ருக்கு சொல்­லி­யி­ருக்­கின்­றது. பெரும்­பான்மை சமூகம் கூடு­த­லாக வாழு­கின்ற எமது நாட்டில் பெரும்­பான்மை சமூ­கத்தின் விருப்­புக்கள் அபி­லா­சை­க­ளுக்கு இணங்கிச் செல்­வது சிறு­பான்மை சமூ­கங்­களை பாது­காக்கும்.
எமது முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் அவர்­க­ளது சுய­நல அர­சி­ய­லுக்­காக இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்லிம் சமூ­கத்தை பெரும்­பான்மை சமூ­கத்­தி­ன­ருக்கு எதி­ராக சித்­தி­ரிக்­கின்ற வகையில் அவர்­க­ளது தேர்தல் பிர­சா­ரங்­களை அமைத்துக் கொண்­டனர். இதன் கார­ணத்­தினால் அதன் வெளிப்­பாடு பெரும்­பான்மை சமூ­கத்தை கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யது. மாத்­தி­ர­மல்­லாமல் அவர்­களை விழிப்­ப­டையச் செய்­தி­ருக்­கின்­றது.

எமது சமூ­கத்தை வழி நடாத்­து­கின்ற அர­சியல் தலை­மைகள் இந்த யதார்த்­தத்தை புரிந்து செயல்­பட வேண்டும். தங்­க­ளது சுய­நல அர­சியல் நிகழ்ச்சி நிரல்­க­ளுக்கு எமது சமூ­கத்தை பிழை­யாக வழி­ந­டாத்தும் அர­சியல் கலா­சா­ரத்தை கையில் எடுப்­பதை இனி விட்­டு­விட வேண்டும். இவ்­வா­றான செயற்­பா­டு­களை தமிழ், முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் தலை­மைகள் தொட­ராக செய்து வரு­கின்­றனர். இதனால் தமிழ், முஸ்லிம் சமூ­கங்கள் பெரும்­பான்மைச் சமூ­கத்­தி­லி­ருந்து தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றனர். பல்­லின சமூகம் வாழு­கின்ற இந்த நாட்டில் இன­வாத அர­சியல் கலா­சா­ரத்தை விதைப்­பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எமது கட்­சியின் முடி­வு­களை ஏற்றுக் கொண்டு நடை­பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷவுக்கு வாக்களித்து புதிய ஜனாதிபதியின் வெற்றியின் பங்காளர்களாக முஸ்லிம் சமூகம் என்கின்ற ரீதியில் நாமும் திகழ்ந்தமைக்காக வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.-Vidivelli

  • ஐ.ஏ.ஸிறாஜ், எம்.ஏ.றமீஸ்

Leave A Reply

Your email address will not be published.