கொட்டாம்பிட்டிய பள்ளிவாசலில் ஒரு மாத காலமாக தொழுகைக்கு தடை

0 846

ஹெட்­டி­பொல பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கொட்­டாம்­பிட்­டியில் அமைந்­துள்ள மஸ்­ஜிதுல் லுஃலு பள்­ளி­வா­சலில் தொழுகை நடாத்­து­வ­தற்குப் பொலி­ஸா­ரினால் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளதால் கடந்த ஒரு மாத­கா­ல­மாக பள்­ளி­வாசல் மூடப்பட்­டுள்­ளது. ஊர்­மக்கள் ஐவேளைத் தொழு­கையை தங்கள் வீடு­க­ளிலும், ஜும்ஆத் தொழு­கையை அரு­கா­மை­யி­லுள்ள வெளியூர் பள்­ளி­வா­சல்­க­ளிலும் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

கடந்த 2000 ஆம் ஆண்டு நிர்­மா­ணிக்­கப்­பட்ட இந்தப் பள்­ளி­வா­சலில் தொடர்ந்து தொழு­கைகள் நடாத்­தப்­பட்டு வந்­தன. உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­களை யடுத்து கடந்த மே மாதம் 13 ஆம் திகதி இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளின்­போது இப்­பள்­ளி­வாசல் இன­வா­தி­களால் தீயிட்டு எரிக்­கப்­பட்­டது.

அதன்­பின்பு இப்­பள்­ளி­வாசல் ஊராரின் முயற்­சி­யினால் துப்­பு­ரவு செய்­யப்­பட்டு நிறப்­பூச்சு பூசப்­பட்டு தொழு­கைகள் மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இந்­நி­லையில் குளி­யாப்­பிட்டி உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் அபே­ரத்­னவின் உத்­த­ர­வுக்­க­மைய கடந்த மாதம் 18 ஆம் திகதி முதல் மூடப்­பட்­டது.

இச்­சம்­பவம் தொடர்பில் கொட்­டாம்­பிட்டி மஸ்­ஜிதுல் லுஃலு பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் செய­லாளர் முஹம்மத் ஷாபியை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்­டது.
அவர் கருத்து தெரி­விக்­கையில், ‘ஹெட்­டி­பொல பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்து விசா­ரித்­தார்கள். அதன் பின்பு கடந்த மாதம் 18 ஆம் திகதி உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் திடீ­ரென பள்­ளி­வா­சலை மூடு­மாறு உத்­த­ர­விட்டார். எமக்கு வேறு வழி தெரி­யாது மூடி­விட்டோம்.

பள்­ளி­வாசல் மூடப்­பட்­டது தொடர்பில் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­முக்கு அறி­வித்தோம். இது­வரை எமக்கு எந்­தப்­ப­திலும் கிடைக்­க­வில்லை. நாங்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு இது தொடர்பில் அறி­வித்தோம். நாளை (இன்று) நாம் அழைக்­கப்­பட்­டுள்ளோம்.

இந்தப் பள்­ளி­வா­சலில் தொழு­கை­களை நடத்தி வந்­தவர் பக்­கத்து ஊரான அனுக்­க­னையைச் சேர்ந்த மௌலவி எம்.ஐ.எம்.நசீர் என்­ப­வ­ராவார். அவர் மூன்று மாதங்­க­ளுக்கு முன்பு பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்பு கொண்­டி­ருந்­த­தாக சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு தற்­போது தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

அவ­ரது மடிக்­க­ணி­னியை பாது­காப்புப் பிரி­வினர் பரி­சோ­தித்­ததில் உள்­ள­டங்­கி­யி­ருந்த தக­வல்­களின் பேரிலே கைது செய்­யப்­பட்டார்.

எவரோ பள்­ளி­வா­சலைப் பற்றி தவ­றான செய்­தி­களை வழங்­கி­யுள்­ள­தா­லேயே பொலிஸார் பள்­ளி­வா­சலில் தொழு­கை­க­ளுக்குத் தடை­வி­தித்­தி­ருக்­கின்­றனர் என்று நாம் சந்­தே­கிக்­கிறோம். பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டதன் பின்பு சிறிய திருத்­தங்­களைச் செய்து இரண்டு மாதங்கள் தொழு­கைளை நடாத்தி வந்த நிலை­யிலே தொழுகை களுக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இப்­பள்­ளி­வா­சலை உள்­ள­டக்கி சுமார் 250 ஜமா அத்­தார்கள் இருக்­கி­றார்கள். தொழு­கைக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளதால் இப்பகுதி மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
கடந்த மாதம் 18 ஆம் திகதி பள்ளிவாசல் புனரமைப்பு வேலைகளுக்காக அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் 5 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது. அன்றைய தினமே உதவிப் பொலிஸ் அத்தியட்சகரால் தொழுகைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது என்றார்.

– ஏ.ஆர்.ஏ.பரீல்
– vidivelli.lk

Leave A Reply

Your email address will not be published.