லண்டனில் இருந்து துவிச்சசக்கர வண்டியில் மக்கா சென்றோர் வெற்றிகரமாக ஹஜ்ஜை நிறைவேற்றினர்

0 760

ஹஜ்ஜின் சிர­மங்­களை எழுத்தில் வடிக்க முடி­யாது என்­பது போல், லண்­டனைச் சேர்ந்த நெஞ்­சு­று­தி­மிக்க துவிச்­சக்­கர வண்டி செலுத்­துவோர் குழு­வொன்று ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தற்­காக மக்­கமா நக­ருக்கு துவிச்­சக்­கர வண்­டியில் செல்­வ­தற்கு தீர்­மா­னித்­தது. இந்தப் பய­ணத்தை மேற்­கொள்­வ­தற்கு தங்­க­ளுக்குள் வரை­ய­றை­களை வகுத்­துக்­கொண்­டனர்.

தாஹிர் அக்தர் தலை­மை­யி­லான ‘டுவர் டீ ஹஜ்’ என்ற பெயர் கொண்ட துவிச்­சக்­கர வண்டி ஹஜ் குழு உரிய காலத்தில் மக்­காவைச் சென்­ற­டைந்­தது மட்­டு­மல்­லாது மதீ­னா­வுக்கும் சென்று மஸ்­ஜிதுன் நப­வி­யிலும் தொழுகை நிறை­வேற்­றினர்.

அக் குழுவின் இந்தப் பய­ணத்தின் இலக்கு பாகிஸ்தான், தென்­னா­பி­ரிக்கா மற்றும் உகண்டா போன்ற நாடு­களில் கிண­றுகள், பாட­சா­லைகள் மற்றும் பள்­ளி­வா­சல்­களை நிர்­மா­ணிப்­ப­தற்­கான தர்­மஸ்­தா­ப­னத்­திற்கு நிதி­நே­க­ரிப்­பினை மேற்­கொள்­வ­தாகும். அவர்கள் மக்­கா­வினைச் சென்­ற­டைந்­த­போது 55,378 ஸ்ரேலிங் புவுண்­களை (66,927 அமெ­ரிக்க டொலர்கள்) சேக­ரித்­தி­ருந்­தனர்.
எட்டு துவிச்­சக்­க­ர­வண்டி யாத்­தி­ரி­கர்கள் மற்றும் அவர்­க­ளுக்­கான சாரதி உத­வி­யாளர் ஒரு­வ­ரையும் உள்­ள­டக்­கிய இக்குழு கிழக்கு லண்டன் பள்­ளி­வா­சலில் கடந்த ஜூன் மாதம் 07 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆத் தொழு­கை­யினை நிறை­வேற்­றி­விட்டு லண்­ட­னி­லி­ருந்து தனது பய­ணத்தை ஆரம்­பித்து தமது 58 நாட்­களில் 17 நாடு­களைக் கடந்­தது.

இக் குழு­வி­ன­ருக்கு உத­வி­யா­ள­ராக வந்­தி­ருந்த வாகனச் சாரதி இஸ்ரார் ஹுஸைன் இக் குழுவின் அங்­கத்­தவர் என்­ப­தோடு அவர் ஏலவே ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­றி­ய­வ­ராவார். ஒரு புற­மாக குழு­வி­ன­ருக்கு உதவி புரிந்த அதே­வேளை மறு­பு­ற­மாக அவர்கள் ஹஜ் அனுஷ்­டா­னங்­களை மேற்­கொள்ள உத­வி­யா­ள­ரா­கவும் இருந்தார்.

நான் எனது பகல் நேரத் தொழிலில் பொருட்­களை கொண்டு சென்று விநி­யோ­கிக்கும் சாதா­ரண சாரதி. நான்கு வெவ்­வேறு நாடு­களில் ஐந்து மாதிரிக் கிரா­மங்­களை உரு­வாக்­குதல் மற்றும் ஏழை­க­ளுக்கு உத­வுதல் என்ற ஜுனைட்டின் தூர நோக்­கினால் கவ­ரப்­பட்டேன். அந்தக் கிரா­மங்கள் ஒரு பள்­ளி­வாசல், ஒரு பாட­சாலை ஆகி­ய­வற்றைக் கொண்­டி­ருக்கும். அத்­துடன் உள்ளூர் மக்­க­ளுக்கு சூரிய சக்தி மின் உற்­பத்தி சாத­னமும் தண்ணீர் படுக்­கை­களும் வழங்­கப்­படும் எனவும் அவர் கூறி­ய­தை­ய­டுத்து நான் உட­ன­டி­யாக அவர்­க­ளுடன் இணைந்து கொண்டேன் என அவர் தெரி­வித்தார்.

ஹஜ் யாத்­திரை என்­பது அற்­பு­த­மா­னது. நான் ஏற்­க­னவே 2014 ஆம் ஆண்டு ஹஜ் யாத்­தி­ரை­யினை நிறை­வேற்­றினேன். இம்­முறை காலம் சென்ற எனது பாட்­ட­னா­ருக்­காக ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­றினேன் எனவும் அவர் தெரி­வித்தார்.

ஏற்­க­னவே 2017 ஆம் ஆண்டு துவிச்­சக்­கர வண்­டியில் புனித நக­ருக்­கான பய­ணத்தில் பங்­கேற்று அதன் மூலம் கவ­ரப்­பட்டு இம்­மு­றையும் துவிச்­சக்­கர வண்டி மூலம் யாத்­திரை மேற்­கொண்ட ஜுனைட் அப்ஸால், நான் தொடர்ச்­சி­யாக இரண்டு அல்­லது மூன்று மாதங்­க­ளாக தொடந்து இது தொடர்­பா­கவே சிந்­தித்­துக்­கொண்­டி­ருந்தேன். நான் தூக்­கத்­தி­லி­ருந்து எழும் போதெல்லொம் என்­னு­டைய முதல் சிந்­தனை இது­வா­கவே இருந்­ததால் அதனை நிறை­வேற்­று­வ­தற்கு என்­னா­லான அனைத்து முயற்­சி­க­ளையும் செய்தேன். இன்று நாம் எமது ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்றி இருக்­கின்றோம்.

தன்னால் முடிந்­த­வரை முன்­னா­யத்­தங்கள் அனைத்­தையும் செய்­தி­ருந்­த­தாகத் தெரி­விக்கும் ஜுனைட் அப்ஸால், எப்­போதும் வீதி­களில் எதிர்­பா­ராத பின்­ன­டை­வு­களும் ஆபத்­துக்­களும் காத்­தி­ருக்கும். இது பரீட்­சை­யினைப் போன்­றது, அள­வுக்­க­தி­க­மாக தயார் நிலையில் இருக்க முடி­யாது. என்ன நடக்கும் என்று எம்மால் எதிர்­பார்க்க முடி­யாது. நாம் இந்தப் பய­ணத்­திற்­கான பயிற்­சியில் ஈடு­பட்­டி­ருந்­த­போது, பயிற்சிக் காலத்தின் நடுப்­ப­கு­தியில் ரமழான் நோன்பு காலம் வந்­தது. அது எங்­க­ளுக்கு சிர­ம­மாக இருந்­தது. அந்தக் காலப் பகு­தியில் வாரத்தில் நூறு மைல் அள­வி­லேயே துவிச்­சக்­கர வண்­டியில் பய­ணித்து பயிற்சி எடுத்தோம். உண்­மையில் எமது இலக்கு ஒரு வாரத்தில் 400 அல்­லது 500 மைல் அளவில் பய­ணித்து பயற்சி பெறு­வ­தாகும். அந்­த­ளவு தூரம் பய­ணித்து பயிற்சி பெற முடி­யாது.

இறை­வனின் அற்­பு­தத்தை கண்­களால் பார்த்­ததே தனது பய­ணத்தின் முக்­கிய நிகழ்­வாக அப்ஸல் குறிப்­பிட்டார். தனக்கு மிகவும் கடி­ன­மாக இருந்த விடயம் லண்­ட­னி­லுள்ள தனது குடும்­பத்தை விட்டுப் பிரிந்து வந்­த­மை­யாகும் எனவும் குறிப்­பிட்டார். நான் எனது துவிச்­சக்­க­ர­வண்­டியில் புறப்­ப­டும்­போது எனது குடும்­பத்­தி­னரைக் கவ­னித்தேன். கண்ணீர் விட்டு அழுது விடு­வார்­களோ என எண்­ணு­ம­ள­விற்கு அவர்­களின் நிலை இருந்­தது. நான் முன்னே பார்த்­துக்­கொண்டு அவர்­களை பார்ப்­பதை முற்­றாகத் தவிர்த்­துக்­கொண்டு எனது பய­ணத்தை ஆரம்­பித்தேன். அது எனக்கு மிகவும் கஷ்­ட­மான சந்­தர்ப்­ப­மாக அமைந்­தது. அவ்­வா­றான ஒரு காரி­யத்தை எனது வாழ்­நாளில் செய்­ததே கிடை­யாது.

ஏற்­க­னவே அதிக தூரப் பயணம் மற்றும் பயிற்சி கார­ண­மாக மிகவும் களைப்­ப­டைந்த நிலையில் மக்­காவை வந்­த­டைந்த அந்தக் குழு­வி­ன­ருக்கு ஹஜ் கடமை கஷ்­ட­மா­ன­தா­கவே அமைந்­தி­ருந்­தது. எமது பய­ணத்தின் முடிவில் ஹஜ் எமக்கு கஷ்­ட­மாக இருக்­காது என நினைத்­தி­ருந்தோம் ஆனால் நடப்­பதும் துவிச்­ச­கர வண்டி ஓடு­வதும் வேறு வேறான இரு விட­யங்­க­ளாகும். அது உண்­மை­யி­லேயே சிர­ம­மாக இருந்­தது.

அப்ஸல் இறுதியாக அறிவுரையொன்றைத் தெரிவித்தார் ‘நான் வழங்கக்கூடிய சிறந்த ஆலோசனை என்னவென்றால் மக்கள் வெறுமனே வாழ்க்கையினை அமைத்துக்கொள்வதில் மாத்திரம் ஆர்வம் காட்டக் கூடாது. வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். காலத்தை வீணாக்காதீர்கள், சிறந்த காரியங்களைச் செய்யுங்கள். நீங்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை உருவாக்குங்கள். உலகத்தில் எவரும் மிகப் பெரும் பணக்காரனை ஞாபகத்தில் வைத்திருப்பதில்லை ஆனால் உலகத்தை மாற்றிய மனிதனை உலகம் ஒருபோதும் மறப்பதில்லை’ என்றார்.

(எம்.ஐ.அப்துல் நஸார்)

vidivelli

Leave A Reply

Your email address will not be published.